Tag: இடஒதுக்கீடு

  • டிஜிட்டல் பார்ப்பனீயம்

    டிஜிட்டல் பார்ப்பனீயம்

    ’பார்ப்பனீயம்’ பற்றி பேசினால் பார்ப்பனத் தோழர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். ‘பூணூல் எதிர்ப்பு’ தவிர்த்து உங்களிடம் வேறு ஆயுதமே இல்லையா என்று கொதித்தெழுகிறார்கள். 1998ல் தொடங்கி ’டயல்அப் மோடம்’ காலத்திலிருந்து இணையத்தில் புழங்குகிறேன். சமூகத்தில் இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாத பார்ப்பனர்களின் சாதிப்பற்றை இணையத்தில் வெளிப்படுத்துவதை, இந்த பதினாறு ஆண்டுகளாக உணர்ந்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் பார்ப்பனீயத்தை யாரேனும் சுட்டிக் காட்டும்போது அவர்களுக்கு ‘சுர்’ரென்று கோபம் எழுவது இயல்புதான். 1) குழு சேர்ந்து பார்ப்பனரல்லாதவர்களை கிண்டல் செய்வது. முதல் தலைமுறையாக…

  • நீதி சொல்லும் சேதியா? -கி.தளபதிராஜ்

    நீதி சொல்லும் சேதியா? -கி.தளபதிராஜ்

    நீதிபதி சந்துரு அவர்கள் 30.10.2013ல் வெளியான இந்து தமிழ் நாளிதழில் “கடைத்தேங்காயும் வழிப்பிள்ளையாரும்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் கல்விக்கடனாக 70,000 கோடி ரூபாய் இதுவரை மத்திய அரசு கடன் அளித்துள்ளதாகவும், அதன் விளைவுகள் பத்து ஆண்டுகள் கழித்தே தெரியவரும் என்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழகத்தில் கடந்தவாரம் பேசியதைச் சுட்டிக்காட்டி, “கடன் வாங்கியோரெல்லாம் சிறப்பான பட்டம் பெற்று தகுந்த வேலையில் அமர்ந்து பத்து ஆண்டுகள் கழித்து கடனைத் திருப்பித்தருவார்களா? என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்”.…

  • நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார்

    நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார்

    மரியாதைக்குரிய அய்யா நீதிபதி சந்துரு அவர்களுக்கு! ஆசிரியர் பயிற்சியில் பட்டயம் பெற்றதை மட்டுமே வைத்து வேலை அளிப்பது முறையற்றது. கல்வித்தகுதி பெற்ற அணைவருக்கும் போதிக்கும் திறன் இருக்கும் என்று நம்ப முடியாது. உள்கட்டமைப்பு வசதியின்றி மாட்டுகொட்டகைகளில் நடத்தப்படும் பயிற்சிப்பள்ளிகளில் தேர்ச்சி பெற்றோரின் உண்மை அறிவை சோதிக்கவே தகுதித்தேர்வு. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ விழையும் சட்டத்தின் நோக்கம் சமவாய்ப்பு அளிப்பதற்கே. சலுகைகளுக்கு அல்ல. எனவேதான் மதிப்பெண்ணை குறைக்க அவர்கள் போட்ட ரிட் மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியாயின. என்று இந்து…

  • அக்கிரகாரத்தில் பெரியார்!?

    தமிழ் மையம் நடத்திய ’சங்கம் 4’ சொற்பொழிவில் `அக்ரகாரத்தில் பெரியார்’ என்ற தலைப்பிலான பி.ஏ.கிருஷ்ணன் உரை குறித்து (பத்ரி ஷேஷாத்ரி எழுத்திலிருந்து) குறிப்பிடத்தக்க ஒரு செய்தி – ‘பெரியார் வன்முறையாளர் அல்ல‘ என்பதை இப்போதுதான் முதலில் பார்ப்பனர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். தவிர, பி.ஏ.கிருஷ்ணனின் உரையில் “1967 ல் தி.மு.க.ஆட்சியைப் பிடிக்கும் வரை பெரியாருக்கு அரசியல் செல்வாக்கு இல்லை” என்று கூறியிருப்பது முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் செயல். இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புளுகு – அவாளுக்கே உரிய சிண்டு முடியும்…

  • ஏன் பார்ப்பனர்களை இன்னமும் விமர்சிக்க வேண்டியதிருக்கிறது?

    ஏன் பார்ப்பனர்களை இன்னமும் விமர்சிக்க வேண்டியதிருக்கிறது?

    பார்ப்பனியத்தின் மேலான திராவிடத்தின் தற்காப்புத் தாக்குதல் ஆரம்பித்து நூறு வருடங்கள் ஆகியுள்ள சூழ்நிலையில், திராவிடத்தின் துணைகொண்டு சமூகநீதி சட்டங்களால் மேல்தட்டுக்கு குடியேறிவிட்ட தமிழர்கள் சிலருக்கு, ஒருவிதமான சலிப்பு சமீபகாலமாக ஏற்பட்டிருக்கிறது. “ஏன், இன்னும் பார்ப்பனர்களையே தாக்குகிறீர்கள்?” என்ற கேள்வி அந்த சலிப்படைந்துவிட்ட மக்களுக்கு அடிக்கடி எழுகிறது. எந்த கொள்கையையும் அடுத்த தலைமுறையிடம் கடத்தும் போது அக்கொள்கைக்கான சமகால தேவையையும் உணர்த்தினாலேயொழிய அக்கொள்கையை ஏற்கும் பக்குவம் அத்தலைமுறையினருக்கு ஏற்படாது. ஆகவே சலிப்படைந்திருக்கும் சிலரின் கேள்விகளை நியாயமான கேள்விகளாகவே கொண்டு…

  • இன்றைய இளைஞர்கள் பார்வையில் இடஒதுக்கீடு!

    இன்றைய இளைஞர்கள் பார்வையில் இடஒதுக்கீடு!

    இன்றைய இளைஞர்கள் இடஒதுக்கீடு பற்றி குறை கூறுவதைப் பார்த்தால் அவர்களுக்கு அது பற்றிய புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் போய் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் போதும், IIT ல் போய் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போதும், எனக்கு கோட்டாவுல சீட்டு கிடைச்சா போதும் என்று பினாத்த வேண்டியது.   இடஒதுக்கீடு என்றால் ஏதோ வறுமை ஒழிப்பு  திட்டம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இன்றைய நம் இளைய தலைமுறையினர். அது, காலம்…