Author: திராவிடன் குரல்

  • ஆந்திராவில் மதக் கலவரத்துக்குத் திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்!

    கடவுள்கள் இவ்வளவு கையாலாகதவர்களாகவா இருப்பார்கள்!அண்மையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள ஸ்ரீகாகுளம் நரசிம்மசுவாமி கோயில் ரதம் தீவைத்து எரிக்கப்பட்டது. சுற்றுப் பிரகாரத்தில் இருந்த(சாமி)சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன.இந்த நிகழ்வை கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கவா கடவுள்?நூறாண்டு பழமைமிக்க அந்தக் கோவிலைப் பாதுகாக்க, படாரென்று கதவை உடைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டாமா கடவுள்? நம் புராண இதிகாசக் கதைகளில் செய்வதுபோல நரசிம்ம அவதாரம் எடுத்து வந்து அந்தப் பாவிகளை (!) நாசம் பண்ணியிருக்க வேண்டாமா கடவுள்? கலையரசி (!) சரஸ்வதியின் கை…

  • பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் பிழைப்பிற்கே!

    பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் பிழைப்பிற்கே!

    விடுதலை ஞாயிறு மலர் 21.6.2020 இதழில் பேராசிரியர் அருணன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் பதிலளித்திருந்தார். “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது தான் தோழர் அருணன் அவர்களுடைய வினா. “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக! இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்!” என்று ஆசிரியர் அந்த வினாவிற்கு…

  • தமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று

    தமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்! உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்! உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்! உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்! அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்–கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்! அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள். ஒரு நாள் என்பது என்ன? சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம். ஒருமாதம் என்பது…

  • பண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா?

    பண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா?

    ஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது . கி.பி 10ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி பேச்சே கிடையாது என்கின்றனர் கா.அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும் ஆய்வறிஞர் மா.இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலதாலி வழக்கம் இல்லை என்பதை பல்வேறு தரவுகளுடன் எடுத்துறைக்கின்றனர் . ஆகவே கி.பி 10 பின்னர்…

  • பெரிய குஞ்சு தாத்தா…

    பெரிய குஞ்சு தாத்தா…

    ஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு பேருப்பா, என்ன பெரிய குஞ்சும்பாங்க, எந்தம்பிய சின்னகுஞ்சும்பாங்க” “பெரிய குஞ்சு தாத்தா… பெரிய குஞ்சு தாத்தா…னு கூப்டா ஒனக்கு சங்கடமா இல்லையா” “அதென்னா இன்னைக்கு நேத்தா கூப்ட்றாங்க” “ஒனக்கு இந்த பேரு புடிச்சிருக்குதா” “ம்ம்ஹும்..புடிக்காது, வெளிலலாம் எங்கயாச்சும் ஆஸ்பித்ரிக்குலாம் போனா…

  • நண்பர்கள் யார்? தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்?

    நண்பர்கள் யார்? தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்?

    வாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம் இப்படி ஒரு புத்தகமா? என ஆச்சர்யத்தில் நாம் ஆடிப் போகும் அளவுக்கு ஒரு செயலைச் செய்திருக்கிறது கர்நாடக அரசு. . ஆம்…. கர்நாடக அரசின் “குவெம்பு பாஷா பாரதி” வெளியிட்டிருக்கிற ஒரு புத்தகம்தான் நம்மை ஆச்சர்யத்தின் எல்லைக்கே கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது. .…

  • தத்துப்பித்து தீபா! பாவம் பாண்டே!

    தத்துப்பித்து தீபா! பாவம் பாண்டே!

    தீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி வரிகளில் கூறுகிறேன். தீபாவின் ஒட்டுமொத்தப் பதில்களின் சாரம் ஒன்றே ஒன்றுதான்! “என் அத்தையின் சொத்துக்கு நான்தான் முழு உரிமையாளினி; சொத்து என்பதன் பொருள் வீடு-மனை, நிலம்-நீச்சு, பணம்-காசு….. மட்டுமில்லை; ‘அத்தை வகித்த பதவியும், கட்டிக்காத்த கட்சியும் எனக்கே சொந்தம்’ என்னும் சிறுபிள்ளைத்தனமான…. (விருப்பப்படுவோர் ‘பைத்தியக்காரத்தனமான…’…