Category: புரட்டு

  • ஆந்திராவில் மதக் கலவரத்துக்குத் திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்!

    கடவுள்கள் இவ்வளவு கையாலாகதவர்களாகவா இருப்பார்கள்!அண்மையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள ஸ்ரீகாகுளம் நரசிம்மசுவாமி கோயில் ரதம் தீவைத்து எரிக்கப்பட்டது. சுற்றுப் பிரகாரத்தில் இருந்த(சாமி)சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன.இந்த நிகழ்வை கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கவா கடவுள்?நூறாண்டு பழமைமிக்க அந்தக் கோவிலைப் பாதுகாக்க, படாரென்று கதவை உடைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டாமா கடவுள்? நம் புராண இதிகாசக் கதைகளில் செய்வதுபோல நரசிம்ம அவதாரம் எடுத்து வந்து அந்தப் பாவிகளை (!) நாசம் பண்ணியிருக்க வேண்டாமா கடவுள்? கலையரசி (!) சரஸ்வதியின் கை…

  • இளித்தது பித்தளை!

    இளித்தது பித்தளை!

    திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நேர்காணலில் கையாண்ட ஊடக தர்ம மீறல். இராமகோபாலன், எச்.ராஜா இத்யாதிகளிடம் காட்டிய இனப்பாசம். இந்துத்துவ மதவெறிசக்திகளுக்கு துணைபோகும் தொடர் போக்கு. பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்த இது போன்ற நிகழ்வுகளால் பாண்டேவின் முகத்திரை கிழிந்து “ஆயுத எழுத்து” நெறியாளருக்கே ஒரு சுயபரிசோதணை செய்து வைக்க வேண்டிய நிலைமை தந்தி நிர்வாகத்திற்கு ஏற்பட, பாண்டேவை சுபவீ கேள்வி கேட்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. சுபவீ யின் கேள்விகளுக்கு தன்பக்கம் நியாயம் இருப்பதைப்போல்…

  • ஓ.கே.யா தினமணி?

    அயோக்கியதனத்திற்கு அளவில்லையா? தினமணி என்றொரு ஏடு! நம் பார்வையில் அது இனமணி. ஒவ்வொரு நாளும் அதன் ஒலிப்பில் இதை உணர்த்துகிறது. நெஞ்சினில் நஞ்சு வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே! என்ற வரிக்கு தினமணி வைத்தியநாத அய்யர் சரியான சான்று! தமிழ்ப் பற்றாளர் போல் காட்டுவார். ஆனால், தமிழை உள்ளூர அழித்தொழிக்கும் வேலையை அரவமின்றி செய்வார். நடுநிலையாளர் போல் காட்டுவார். ஆனால், அப்பட்டமாக தன் சார்பு நிலையை வெளிப்படுத்துவார். தாலி அகற்றும்…

  • சமஸ்கிருதம் ஆரிய மொழி! உருது திராவிட மொழியா ?

    சமஸ்கிருதம் ஆரிய மொழி! உருது திராவிட மொழியா ?

    கேள்வி எண்1 பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில் உள்ள சமஸ்கிருதம் ஆரிய மொழி 200 ஆண்டுகளுக்குள் வந்த உருது திராவிட மொழியா ? விடை: எத்தனைத் திரிப்புகள் ஒரு கேள்வியில்! சமஸ்கிருதம் எந்த ஆண்டில் தோன்றியது.அதற்கு பல்லாயிரம் ஆண்டு வரலாறு உண்டா. கற்காலத்தில் இருந்து கல்லில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவம் வட்டு எழுத்து சதுர எழுத்து புள்ளி இல்லாத ஓலை எழுத்து என தமிழின் வரி வடிவ மாற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் கல்வெட்டு ஆதாரஙங்கள் உள்ளன. சமஸ்கிருதத்திற்கு…

  • பகவத்கீதையும்-திருக்குறளும்! கி.தளபதிராஜ்.

    பகவத்கீதையும்-திருக்குறளும்! கி.தளபதிராஜ். எதற்காக இலக்கியம்? அதனால் நமக்கு என்ன பயன்? நம் புத்திக்கு எட்டிய முறையில் தமிழர் பண்புக்கு கலைக்குத் தகுந்தவாறு ஏதேனும்இலக்கியங்கள் இருக்கிறதா? என்ற பெரியார் இராமாயணம், பாரதம், பகவத்கீதை, பெரியபுராணம்,உள்ளிட்ட அணைத்து இலக்கியங்களையும் கடுமையாக சாடினார்.மதமும்,மௌடீகமும் மண்டிக்கிடக்கும் இவற்றைத் தவிர அறிவு வளர்ச்சிக்குத் தேவையான எந்த புதிய இலக்கியங்களும் தமிழில் படைக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆரியத்தின் பிடியிலிருந்து நம்மக்களை மீட்க புராண, இதிகாச குப்பைகளை…

  • மண்ணுருண்டை மாளவியா ! -கி.தளபதிராஜ்

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மதன்மோகன் மாளவியாவிற்கு பாரதரத்னா  விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. மாளவியாவை சீர்திருத்தவாதி போன்று ஊடகங்கள் சித்தரிக்க முயன்றாலும், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் மாளவியாவை தூக்கிப்பிடிப்பதைப் பார்த்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் ஓரளவு உணர முடியும். இந்து மகாசபையின் தலைவராக இருந்த மாளவியா சாஸ்திரங்களை தூக்கிப்பிடித்த சனாதனவாதி. தென்னாட்டு பார்ப்பனர்கள் தங்கள் சரக்கு தமிழ்நாட்டில் போனியாகாத போதெல்லாம் வடநாட்டுப்பார்ப்பனர்களை வரவழைத்து வித்தை காண்பிப்பது வழக்கம். அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த மாளவியா என்பதும்,…

  • பெரியாரின் வாரிசா ஜெயலலிதா? “இந்து” வுக்கு ஏன் இந்த வேலை?

    பெரியாரின் வாரிசா ஜெயலலிதா? “இந்து” வுக்கு ஏன் இந்த வேலை?

    மானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக இந்த மக்களை மாற்றும் முயற்சியில் ஆயிரம் முறை சிறை சென்றாலும் தான் செய்த செயலுக்காக தங்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய உயர்ந்த பட்ச தண்டனையை தாருங்கள் என நீதிபதிகளிடம் தண்டணையை கேட்டுப்பெற்றவர் பெரியார். எந்த ஒரு மனிதனும் மற்றொருவன் காலில் விழுந்து வணங்கக் கூடாது என வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய மான மீட்பர் பெரியார். புகழ்ச்சிக்கு அடிபணியாத அந்த புத்தன் மேடைகளில் யாரேனும் தன்னைப்ற்றி புகழ்ந்து பேசுகையில் தன் கைத்தடியால் மேசைசையைத்தட்டி எச்சரிக்கத்…