இன்றைய இளைஞர்கள் பார்வையில் இடஒதுக்கீடு!

இன்றைய இளைஞர்கள் இடஒதுக்கீடு பற்றி குறை கூறுவதைப் பார்த்தால் அவர்களுக்கு அது பற்றிய புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் போய் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் போதும், IIT ல் போய் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போதும், எனக்கு கோட்டாவுல சீட்டு கிடைச்சா போதும் என்று பினாத்த வேண்டியது.
 
இடஒதுக்கீடு என்றால் ஏதோ வறுமை ஒழிப்பு  திட்டம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இன்றைய நம் இளைய தலைமுறையினர். அது, காலம் காலமாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயர்சாதியினரால் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் மறுக்கப்பட்ட உரிமையை பெற்றுக் கொடுத்த சமூகநீதி ஆயுதம் என்பது புரியவில்லை. அதனால் தான் பொருளாதார ரீதியான கண்ணோட்டத்துடன் இடஒதுக்கீட்டை உற்றுநோக்குகின்றனர்.
12 ஆண்டுகள் முதல்வாராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கே புரியவில்லை என்பதை நினைக்கும் போது நம் இளைய தலைமுறையை குறை சொல்லி என்ன பயன்!!!
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது சமூகநீதி மீது அக்கறை உள்ள ஒத்த கருத்துள்ளவர்களின் கடமை. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும் வரையில் இது தொடரும்.