Tag: அரசியல்

  • ரைம்ஸ்

    ரைம்ஸ்

    அமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் தானே அந்த மண்ணின் பூர்வகுடிகள், அவர்கள் இருப்பது இயல்பு தானே?” எனச்சொல்வது வாதத்திற்கு சரியானதாக இருந்தாலும், “கறுப்பர்களுக்கு வீடு இல்லை” என்று பலகை வைக்குமளவு அவர்கள் அந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் என்பதால் வலுக்கட்டாயமாக அந்த மக்களின் இருப்பை…

  • தன்னையறியாமல் சாதியம் வெளிப்படுமா?

    தன்னையறியாமல் சாதியம் வெளிப்படுமா?

    தன்னையறியாமல் சாதியம் வெளிப்படுமா? வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. பெரியாரை, பாபாசாகேபை இன்னும் பல சமூக சீர்திருத்தவாதிகளை வாசிப்பதாலேயே நாம் “சாதியத்தை” விட்டுவந்துவிட்டோம் என்றாகிவிடாது. அதை விட்டு வர, நாம் தொடர்ந்து சுயபரிசோதனைகளையும், சுய விமர்சனங்களையும் செய்துக்கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது. உதாரணத்திற்கு, நான் தொடர்ந்து இந்திய/ தமிழக தலைவர்களை பற்றி…

  • வரலாறு திரும்பும்!

    வரலாறு திரும்பும்!

    “மோடியும் லிபரல்களின் தோல்வியும்” என்கிற ஒரு கட்டுரையை தமிழ் இந்து நாளிதழ் (23.5.14) வெளியிட்டிருக்கிறது. இந்தத்தேர்தலில் சுதந்திரப் போக்காளர்கள் (லிபரல்கள்) ஏன் தோற்றுப்போனார்கள் என்பதற்காண காரணமாக “இடதுசாரி அறிவுஜீவிகளும் அவர்களையொத்த சுதந்திரப் போக்காளர்களும் ஒரு கூட்டமைப்புபோலச் செயல்பட்டார்கள். மதச்சார்பின்மைதான் மிக மேன்மையானது என்பதுபோல நடந்துகொண்டார்கள். மூட நம்பிக்கைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிராக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று முழங்கினார்கள். அறிவியல் விஞ்ஞானி, ராகுகாலம் கழிந்த பிறகு வருவதுகூட விமர்சனத்துக்கு உள்ளாயிற்று.அடக்குமுறையாகவே…

  • வெற்றிபெறும் வழி!

    ‘கொள்கையை நிறைவேற்றும் வழியை பெரியார் கற்றுத்துந்துள்ளார்’ என்று சொல்லியுள்ளீர்களே…. அது என்ன? என்று கேட்கிறார்கள் சிலர். உலகில் வெற்றியடைந்த புரட்சிகரமான போராட்ட வரலாறை படித்துப் பார்த்தால், அதை பெரியாரின் செயல்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால், எளிதாக அறிந்துகொள்ளலாம் கொள்கையை நிறைவேற்றும் வழியினை! அது என்ன வழி? மக்களை மாற்றத்திற்கு தயார்படுத்துவதே அந்த வழி! கொள்கையை தொடர்ந்து…. தொடர்ந்து என்றால் இடையறாது தொடர்ந்து பிரச்சாரம் செய்வது, அதை விட முக்கியமாக, அந்த கொள்கை வழி வாழ்ந்து முன்னுதாரணமாக இருப்பது ஆகிய…

  • பேசநா இரண்டுடையாய் போற்றி!

    பேசநா இரண்டுடையாய் போற்றி!

    ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலை குறித்து கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார், கபட நாடகம் ஆடுகிறார் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கீழ்கண்டவற்றையும் பலர் படித்து தெரிந்துகொள்ளவேண்டும், தெரிந்து அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். “ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உய்ரநீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும்…

  • மாற்றம் ஒன்றே மாறாதது! அற்புதம் அம்மாளும் அதற்கு விதிவிலக்கல்ல!

    மாற்றம் ஒன்றே மாறாதது! அற்புதம் அம்மாளும் அதற்கு விதிவிலக்கல்ல!

    அற்புதம் அம்மாளின் நேர்காணல் தி இந்துவில் வந்திருக்கிறது. திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க ஆகிய இயக்கங்கள் குறித்த அவரது கருத்துகளை வேதனையோடு பகிர்ந்துள்ளார். “ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை பெறுபவர்களை வைத்து கலைஞருக்கு எதிராக பேட்டி கொடுக்கவும், பிரச்சாரம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படலாம், அவர்களை அரசியலுக்கு பயன்படுத்த முயற்சிக்கலாம்” என்று இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பதிந்த கருத்துகளை படித்து சிலர் வருத்தப்பட்டனர். அவர்கள் தற்போது அற்புதம் அம்மாளின் பேட்டியை படித்து ஓரளவிற்கு புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.…

  • ”தமிழக அரசியல்” எனும் தரங்கெட்ட….!

    பெண்களையும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று சொன்ன கிருஷ்ணனுக்கு விழா கொண்டாடலாமா? என்று அன்மையில் அறிவார்ந்த வினாவை எழுப்பினார் திராவிடர்கழக தலைவர் வீரமணி!. தமிழக அரசியல் எனும் தரங்கெட்ட ஒரு இதழில் அதற்கு நேரிடையாக பதிலளிக்க இயலாத ஒரு அனாமதேயம் வீரமணியாரை கொச்சைப்படுத்தியுள்ளது. அதோடு “பறச்சிகளும், பள்ளச்சிகளும் ரவிக்கைப்போட ஆரம்பித்ததால்தான் துணிவிலை ஏறிவிட்டது” என்று பெரியார் கூறியதாக துணிச்சலாக ஒரு பொய்யை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. 1962ல் சட்டசபை தேர்தலில் காமராஜரை முழுமையாக ஆதரித்தார் பெரியார். பட்டுகோட்டையில்…