Tag Archives: புரட்டு

பத்திரிக்கையாளர்களே… நீங்கள் நேர்மையானவர்களா?

பத்திரிக்கையாளர்களே நீங்கள் நேர்மையாக செயல்படுவதாக உளப்பூர்வமாக உணர்கிறீர்களா? உங்களுக்கு நேர்மை குணம் உள்ளதா?

நாட்டில் உள்ளவர்களை எல்லாம் மனம் போனபோக்கில் விமர்சித்து எழுதும் நீங்கள் பத்திரிக்கைகள் செய்யும் தவறுகளை கண்டித்து என்றாவது எழுதியது உண்டா?

நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் தொழில்களில் பத்திரிக்கையும் ஒன்றுதானே… அது மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா?

ஒரு மூத்த அரசியல்வாதியை, ஒரு மூத்த பத்திரிக்கையாளரை, பத்திரிக்கையாளர்களுக்கு என்றும் மதிப்பளிக்கும் ஒரு முதியவரை, தனது கணவரோடும் இரண்டு பெண் குழந்தைகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணோடு இணைத்து கட்டுக்கதை எழுதியிருக்கும் குமுதம் ரிப்போர்டரின் செயலை கண்டிக்கும் நேர்மை குணம் உங்களுக்கு இல்லாமல் போனது ஏன்?

அரசியல்வாதிகளையும், அரசு அலுவலர்களையும், நடிகர் நடிகைகளையும், சாமியார்களையும் சகட்டு மேனிக்கு சாடித்தள்ளி பத்திரிக்கை முதலாளிகளின் வியாபாரத்திற்கு துணை நிற்கும் நீங்கள், உங்களைப்போன்ற ஒரு பத்திரிக்கையாளரான கலைஞரை பற்றி ஒரு பத்திரிக்கை அவதூறான செய்தியை பரப்ப முயன்றிருக்கும் செயலை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை? உங்கள் பத்திரிக்கா தர்மம் சக பத்திரிக்கையாளரை கண்டிக்கும் நேர்மையான முறையை தடுக்கிறது என்றால், கலைஞரும் ஒரு பத்திரிக்கையாளர் என்பதை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை? அவர் பத்திரிக்கையாளராக இருந்தாலும் அரசியல்வாதி என்று நீங்கள் கருதினால், அரசியல் என்பது வேறு துறை என்று ஒருவேளை நீங்கள் கருதினால், பத்திரிக்கை முதலாளிகள் வேறு தொழிலில் ஈடுபடுவதில்லையா? வெறும் பத்திர்க்கை தொழிலை மட்டும் செய்து வயிற்றை கழுவுகின்றனரா? நேர்மையாக சிந்தித்துப்பாருங்கள்.

நாட்டில் உள்ள அனைவரையும் விமர்சிக்கும் நீங்கள், நாட்டிலேயே பத்திரிக்கையாளர்களும் பத்திரிக்கை முதலாளிகளும்தான் நேர்மையானவர்கள், நல்லவர்கள் அல்லது கடவுளைப்போன்று விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதுகிறீர்களா?

பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்க வக்கில்லாத நீங்கள், மற்றவர்களை கண்டித்து எழுதும் தகுதி பெற்றவர்களாக உங்களை எப்படி கருதுகிறீர்கள்?

பொதுவாழ்க்கைக்கு பெண்கள் வருவதே அதிசயம் இந்நாட்டில். வரும் பெண்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் எப்படி வருவார்கள்? நேர்மையான சிந்தனை உள்ளவர்கள், குஷ்பு மீது நடத்தப்பட்டுள்ள பாலியல் ரீதியிலான தாக்குதலாகவே இதையும் காண்பார்கள்.

பத்திரிக்கையாளர்களே…. உங்கள் சகோதரியை அல்லது உங்கள் மனைவியை உங்கள் தெருவில் உள்ள ஒருவரோடு இதுபோன்று இணைத்து படம்போட்டு கட்டுக்கதை எழுதினால் இரசிப்பீர்களா?

உங்களுக்கு நேர்மை குணம் இருந்தால், குமுதம் ரிபோர்ட்டர் இதழை அதன் நேர்மையற்ற விமர்சனத்தை கூட்டம் போட்டு கண்டியுங்கள். உங்கள் நேர்மையை உலகிற்கு நிருபியுங்கள். கண்டிக்காமல் உங்கள் பத்திரிக்கா தர்மத்தை கடைபிடிக்க வேண்டுமானால் கடைபிடியுங்கள்.

எந்த கட்டுப்பாடும் இல்லாமல் கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் கட்டுக்கதை எழுதுவதை நீங்கள் தொடர்ந்தால்….

பத்திரிக்கையாளர்களில் நேர்மையானவர்கள் யார்? நடுநிலையானவர்கள் யாரென்று தேடமுடியாது என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடுவார்கள்.

– திராவிடப் புரட்சி

நக்கீரனை எதிர்த்த தினமணிகள், குமுதம் ரிப்போர்ட்டரை ஆதரிப்பதேன்?

ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்று நக்கீரன் வெளியிட்ட அட்டைப்படக்கட்டுரையை எதிர்த்து, ஜெயலலிதாவின் தனிமனித சுதந்திரம், அந்தரங்கம் ஆகியவற்றை நக்கீரன் மீறிவிட்டதாகவும், தரம்தாழ்ந்து ஜெயலலிதாவை நக்கீரன் தனிப்பட்ட முறையில் தாக்கிவிட்டதாகவும் பொங்கோ பொங்கென்று பொங்கிய நடுநிலை நாயகங்கள், பெண்ணுரிமைப் போராளிகள், இந்துமதக் காவலர்கள், சைவ சித்தாந்திகள், குஷ்பு என்கிற இரண்டு பெண் குழந்தைகளின் தாய், இன்னமும் கணவனுடனும், மாமியாருடனும் ஒரேவீட்டில் குடும்பம் நடத்திவரும் ஒரு பெண், திமுக தலைவர் மு.கருணாநிதியின் வைப்பாட்டியாக வாழ்வதாக பகிரங்கமாக குறிப்புணர்த்தி குமுதம் ரிப்போட்டர் அட்டைப்படக்கட்டுரை எழுதியதை இதுவரை கண்டிக்காமல் கள்ள மவுனம் காப்பதேன்?

இதற்கு முன், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கருணாநிதியின் மகள் கனிமொழியையும், ஆண்டிமுத்து ராசாவையும் இதேபோல் சம்பந்தப்படுத்தி ஜூனியர் விகடன் இதே ரீதியில் ஒரு அட்டைப்படக்கட்டுரை எழுதியிருந்தது? அதையும் மேற்சொன்ன கருத்து கண்ணாயிரங்கள் யாரும் கண்டிக்கவில்லை. கள்ள மவுனமே காத்தார்கள்.

அதற்கும் முன்னர் தினமலர் பாலியல் தொழிலில் ஈடுபடும் நடிகைகள் என்றொரு பட்டியலை வெளியிட்டு அவர்களின் ரேட் என்ன என்றும் வெளியிட்டிருந்தது. அதன்போதும் மேற்சொன்ன பார்ட்டிகள் யாரும் கண்டிக்கவில்லை.

ஆனால் இந்த கருத்து கண்ணாயிரங்கள், நக்கீரனை திட்டுவதற்கும், ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுப்பதற்கும் மட்டும் புதிதுபுதிதாக கோணங்களையும் வாதங்களையும் கண்டுபிடித்து வாதாடுவார்கள்.

இவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கும் தினமணி ஆசிரியர் வைத்தியநாத ஐயர், நக்கீரனைத் திட்டி ஒரு தலையங்கமே எழுதியிருந்தார். அதில் நக்கீரனை பெயர் சொல்லாமல் நவீன தீண்டாமை கடைப்பிடித்த ஐயர்வாள், நக்கீரன் செய்தது ஊடக உலகுக்கே இழுக்கு என்றும், ஊடகத்துறை ஒட்டுமொத்தமாக நக்கீரனைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் “யோசனை”(!) தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுவதாக செய்தி வெளியிட்ட நக்கீரனின் செயலே, ஊடகத்துறைக்கு இழுக்கு என்றால், குஷ்பு கருணாநிதியின் ஆசைநாயகி என்றும், கனிமொழிக்கும் ராசாவுக்கும் ரகசியத்தொடர்பு இருப்பதாகவும், குறிப்பிட்ட திரைப்பட நடிகைகளின் இரவு நேர ரேட் இது தான் என்றும் குமுதம் ரிப்போர்ட்டரும், ஜூனியர் விகடனும், தினமலரும் செய்தி வெளியிட்ட செயலை தினமணியும், வைத்தியும் எப்படியெல்லாம் கண்டிக்க வேண்டும்?

ஆனால் அது குறித்தெல்லாம் தினமணி தலையங்கம் எழுதி கண்டிக்கவில்லை. அந்த பத்திரிகைகளை புறக்கணுக்குமாறு வைத்தியநாத ஐயர்வாளும் யோசனை கூறவில்லை. தினமணி தரப்பில் (கள்ள) மவுனமே காக்கப்படுகிறது.

அதென்ன ஜெயலலிதாவுக்கு ஒரு அளவுகோல்; குஷ்பு, கனிமொழிக்கு வேறொரு அளவுகோல்?

அல்லது நக்கீரனுக்கு ஒரு அளவுகோல்; ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், தினமணிக்கு வேறொரு அளவுகோல்?

சரியாக நூல் பிடித்து பிரித்ததைப்போல நிலவும் இந்த பிளவுக்கு என்ன காரணம்?

தினமணிகளுக்கும், வைத்தியநாத ஐயர்களுக்கும், அவரையொத்த அறிவுஜீவிகளுக்கும், பெண்ணுரிமைப் போராளிகளுக்கும், கருத்துச் சுதந்திர கண்ணாயிரங்களுக்கும், எல்லாப் பெண்களும் ஒன்றல்ல; அவர்களுக்கான பெண்ணுரிமைகளும் சமமல்ல!

குலப் பெருமையும், குடிப் பெருமையும் கொண்ட ஜெயலலிதாவின் உணவுப் பழக்கத்தை தவறாக எழுதினால் உருவாகும் அபகீர்த்தியும், அதனால் தினமணிகளுக்கு உருவாகும் கோபத்தின் அளவும் மிக அதிகம்.

இந்தப் பெருமைகள் இல்லாத கனிமொழியும், குஷ்புவும் குடும்பத்துக்கு வெளியே கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக அவதூறு எழுதினாலும் வைத்தியநாதன்களுக்கு கோபம் கொப்பளிக்காது; அவர்களிடமிருந்து குறைந்தபட்ச கண்டனம் கூட வெளிப்படாது.

வர்ணாஸ்ரம படிநிலையில் ஆகக்கடைசியில் இருக்கும் குலப் பெண்கள் மற்றவர்களுக்கு வைப்பாட்டிகளாக இருக்கவேண்டும் என்று மனுவே வகுத்துவிட்ட பிறகு, குஷ்பு, கனிமொழியின் கவுரவத்துக்காக மனுவின் பேரன் வைத்தியநாதன்களுக்கு எப்படி கோபம் வரும்? ஏன் வரவேண்டும்?

-நாடோடி

திராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா?

“பார்ப்பன கிரிக்கெட் வீரர் ராகுல், “திராவிட்” என்று பெயர் வைத்திருக்கிறார்.எனவே திராவிடர் என்ற சொல் பார்ப்பனரையே குறிக்கும்”என்று தோழர் மணியரசன் கூறியுள்ளார்!

தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இன்றளவும் பெண்குழந்தைகளுக்கு “பாப்பாத்தி” என்றும் ஆண் குழந்தைகளுக்கு “அய்யர்” என்றும் பெயர் சூட்டியுள்ளதை
பார்த்திருக்கிறோம். அவர்ககைளை எல்லாம் மணியரசன் ஆரியர் என்று கூறுவாரா?

“திராவிட்” என்பதும் “திராவிடர்” என்பதும் ஒன்றா? “சைதாப்பேட்டை”யை ஆங்கிலத்தில் “சைதாபேட்” என்று கூறுவது போல் “திராவிடம்””திராவிட்” என்பது
இடத்தை குறிக்கும்.

இந்திய தேசிய கீதப் பாடலில் வரும் பஞ்சாப,சிந்து ,மராட்ட,திராவிட போன்ற வரிகள் எதைக் குறிக்கிறது? இடத்தையா? இனத்தையா?

“திராவிட” என்ற சொல் இடம் பெற்றிருக்கும் திமுக,அதிமுக,மதிமுக,தேமுதிக ஆகிய அணைத்து அரசியல் கட்சிகளிலும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆகலாம்.
திராவிட என்பது இடத்தை குறிக்கும் சொல்.திராவிடர் கழகத்தில் ஒருநாளும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாது. காரணம் “திராவிடர்” என்பது
இனத்தை குறிக்கும்.

தென்னிந்தியாவில் பிறந்ததால் ராகுல் “திராவிட்” என்று பெயர் வைத்திருக்கலாம். எந்த பார்ப்பானாவது “திராவிடர்” என்று தன்னைசொல்லிக்கொண்டதுண்டா?

மனோன்மனீயம் சுந்தரனாரை பார்த்து விவேகானந்தர் “நீங்கள் என்ன கோத்திரம்?” என்று கேட்டாராம்.அதற்கு மனோன்மனீயம் சுந்தரனார் அளித்த பதில்
“தன்மானம் மிக்க தென்னாட்டு திராவிடன்”.என்பதே!

(“மனோன்மனீயம்சுந்தரனார் வாழ்க்கைவரலாறு” நூலிலிருந்து)

 

இந்துக்கள்,திராவிடர்கள்,இஸ்லாமியர்கள் மற்றும் முகமதியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.திராவிடர் நாகரீகம் கலந்த பின்னர்தான்,இந்து நாகரீகத்தில்
வளர்ச்சி ஏற்பட்டது என்கிறார் தாகூர்.

(நோபல் பரிசு ஏற்புரையில் தாகூர் கூறியது).

 

மறைமலை அடிகள்தான் தனித்தமிழ் இயக்கத்தை கட்டினார் என்று கூறும் மணியரசன், திராவிடர் இயக்கங்கள் தமிழர் அடையாளத்தை அழிக்கவே
பயன்பட்டதாக கூறுகிறார். 1956 க்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள், ஆரியர்கள் உட்பட அனைவரும் தமிழர்களே என்று குறிப்பிடுகிறார்.

தனித்தமிழ் இயக்கத் தந்தை என்று அவரால் கூறப்படும் மறைமலைஅடிகள் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள். “சாதி, சமயப்
பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய
உண்மைக் கொள்கையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனைஎதிர்த்தும் எனைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவறிர் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை.பின்னர் பெரியார்
திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொள்கையையே மேலுந்தட்பமாக எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டை தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந்தவிர்வராயினர்”.என்றார்.

இப்படி தாகூரும்,மனோன்மனீயம் சுந்தரனாரும்,மறைமலை அடிகளும் சுட்டிக்கட்டிய திராவிடர் என்ற இனத்தையே முழு புசனிக்காயை சோற்றில் மறைப்பது போல் திராவிடர் என்ற சொல்லே பார்ப்பனர்களைக் குறிப்பது என்று கூறி, வரலாற்றையே திரிக்க பார்க்கிறார் மணியரசன்!.

தமிழ்தேசியத்தின் அசல் அக்மார்க் முத்திரை உரிமம் பெற்றிருக்கும் அவர் தற்போது “நெடுமாறனின் “தமிழர் தேசிய இயக்கமும்”,சீமானின் “நாம் தமிழர்
கட்சியும்” தமிழ்த்தேசிய இயக்கங்கள் இல்லை!” என்கிறார்

தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி முகநூல் “திராவிட” என்றால் இடத்தின் பெயர் எனச் சொல்லுகின்ற நீங்கள், இதே இடத்தில் வசிக்கும் பார்ப்பானை என்னவென்று அழைப்பீர்கள்? என்று கேட்கிறது.

அமெரிக்காவில் வசித்தாலும் அய்யம்பேட்டையில் வசித்தாலும் பார்ப்பனரை பார்ப்பனர் என்றே அழைக்க முடியும்.பெரியார் வலியுறுத்தியதுதான்
தனித்தமிழ்நாடு!. திருக்குறள் மாநாடு கூட்டியவர் அவர்!. பார்ப்பனர்களிடம் இருந்து விடுதலை பெறவே திராவிடர் என்ற சொல் பயன்படுத்தப்பட்து.ஆனால்
சுயவிளம்பரம் தேடிக்கொள்ள ஏதோ தங்களை பெரிய புரட்சிவாதிகளாக காட்டிக்கொள்ள பார்ப்பனக் கைக்கூலிகளாக மாறி திராவிடர் என்ற சொல்லையே சிலர் விமர்சிக்கின்றனர். பெரியார் தனித்தமிழ்நாடு கேட்டார். பெரியாரையே விமர்சிக்கும் தோழர்கள் என்ன செய்து கிழித்தார்கள்?எந்த தமிழ் தேசிய
இயக்கங்கள் தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து போராடுகின்றன?

திராவிடர்கள் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல் என்று நிகழ்ச்சியின் எந்த இடத்திலேயும் மண்யரசன் அவர்கள் சொல்லவில்லை.உங்கள் செய்தி
உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்று ஒருவர் கூறுகிறார்.

திராவிடர்கள் என்ற சொல் பார்ப்பனர்களை குறிக்கக்கூடியது என்கிற “மிகப்பெரீய்…ய ஆராய்ச்சி” கட்டுரை மணியரசனின் தமிழர் கண்ணோட்டம் இதழிலேயே இடம்பெற்றுள்ளது.

பல ஆண்டு காலமாக நம்மை அடிமைப்படுத்தி சுரண்டி வாழ்ந்த பார்ப்பனர்களும் தங்களை தமிழர்கள் என்றே கூறுகின்றனர்.அதை மணியரசனும் ஏற்றுக்கொள்கிறார். பார்ப்பனர்கள் யாரும் தங்களை திராவிடர்கள் என்று சொல்வதில்லை.நமக்கு தேவை பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுதலை! .அவர்களை தனிமைப்படுத்தி நம் இனத்தை காப்பாற்றவே திராவிடர் என்ற அடையாள சொல் பயன்படுத்தப்பட்டது.

தமிழர்கள் மட்டும் திராவிடர்களா? அல்லது கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்களா என்று கேட்பதின் நோக்கம் புரியவில்லை!
எந்த கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை. தமிழினத்தில் பார்ப்பனர் ஊடுருவலை தடுக்கவே திராவிடர் என்ற அடையாளச்சொல்.

“தமிழர்” என்ற ழகர ஒலிச் சொல்லை, சரியாக ஒலிக்கத் தெரியாமல் “த்ரமிள” என்றும் பின்னர் “திராவிடன்” என்றும் ஆரியன் எழுதியதையும், பேசியதையும்
ஆதாரமாகக் கொண்டு, தம்மையே “திராவிடன்” என அழைத்துக் கொள்வது தான் அறிவு நாணயமான செயலா? எனக்கேட்கும் தோழர்களே  “தேயம் என்பது
தான் தேசம் ஆனது “என்று எந்தப்பாவாணர் கூறியதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ அதே பாவாணர் தான் மேற்படி தமிழர்-திரமிளர் -திராவிடர் செய்தியும்
குறிப்பிட்டிருக்கிறார்.

நாங்கள்தான் உண்மையான தமிழ்த்தேசிய வாதிகள் என்று கிளம்பியிருக்கும் தோழர்களே உங்கள் பிரச்சனை என்ன? உங்கள் இடைவிடாத கடுமையான தொடர்
போராட்டத்தின் விளைவால் அமையப்போகும் “தமிழ்தேசியத்தை” எந்த திராவிடர் இயக்கமாவது அல்லது தோழர்களாவது தடுக்கும் வேளையில்
ஈடுபடுகிறார்களா? “தமிழ்த்தேசியம் கூடாது” திராவிடநாடுதான் வேண்டும் என்று எந்த தோழராவது மல்லுக்கு நிற்கின்றனரா?

அல்லது திராவிட இயக்கங்களை எதிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் பண்ண  முடியவில்லையே என்கிற ஆதங்கம் தான் உங்களை இப்படி பேசவைக்கிறதா?

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு!

காதர்பாட்சா

கி.தளபதிராஜ்

அன்மையில்  ஒருவர் தனது இணையதள முகநூலில்  ஒரு மகமதிய சாமியாரை பெரியாரோடு தொடர்பு படுத்தி “பெரியாரே ஏற்றுக் கொண்ட ஆண்டவர்தான் சாலை ஆண்டவர் போல! அல்லது திருப்பி அடிக்காதவர்களை தாக்குவது தான் பெரியாரின் வீரம் போல! என்று குறிப்பிட்டு வழக்கம் போல பெரியாரை கொச்சைப்படுத்த முனைந்திருந்தார். 1930 ல் இராமநாதபுரத்திற்கடுத்த திருப்பாலைக்குடியில் பிரபலமாகியிருந்த இந்த சாமியாரை பற்றி பெரியாரின் குடியரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரையை

ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பபற்றவே!

ஜுனியர் விகடன்(27.6.2012 மற்றும் 1.7.2012) ஆகிய இதழ்களில் திரு எஸ்.இராமகிருஷ்ணன் தனது “எனது இந்தியா’ கட்டுரையில் 1911ம் ஆண்டு பிரிட்டீஷ் அதிகாரி ஆஷை கொலைசெய்த வாஞ்சி அய்யரை வர்ணித்து, இந்தக் கொலை பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டெழுந்த தார்மீக கோபத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா?
ஆஷை சுட்டுக்கொன்றபோது வாஞ்சிநாதன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தான்?

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.”

இப்படிக்கு,

R. வாஞ்சி அய்யர்
R. Vandhi Aiyar of Shencotta.

அன்னிபெசன்ட்டை அறிவோமா?

அன்னிபெசண்ட் அம்மையார்

பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை அநீதிக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்ற காலத்தில் சுதேசமித்திரன் ஆசிரியரும் காங்கிரஸ் காரியதரிசியுமான எ,ரெங்கசாமி அய்யங்காரும், இந்துஆசிரியரும் தமிழ்நாட்டுத்தலைவருமான கஸ்தூரிரங்கய்யங்காரும், பரிசுத்த தேசியவாதி என்று சொல்லப்பட்ட சத்தியமுர்த்தி அய்யரும், ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்கள். இந்திய தேசிய தலைவரும் ‘டிக்டேட்டர்’ என்று சொல்லுவதான ஏக தலைவருமான சீனுவாச அய்யங்கார் ‘ஒத்துழையாமை என்பது சட்ட விரோதம்’ என்று கூறிவிட்டார்.

“பஞ்சாபியர்கள் செங்கல் எறிந்ததற்கும் ஜெனரல்டயர் பீரங்கி குண்டு போட்டதற்கும் சரியாகப்போய்விட்டது. இதுதான் அரச தர்மம்” என்று அப்போது கூறியவர்தான் அன்னிபெசன்ட்!.

மாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தத்திட்டத்தில் கண்டிருந்த படி இரட்டை ஆட்சிமுறை செயல்படுவதை பரிசீலிக்கவும் புதிய அரசியல் சீர்திருத்தம் பற்றிய ஆலோசனைகளை வகுக்கவும் சர்.ஜான்சைமன் தலைமையில் ஒரு குழு இந்தியா வருவதாக 1927ம் ஆண்டு நவம்பர் 18 ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியாயிற்று.

“வீரபாண்டியன்” ம.பொ.சி!

ம.பொ.சி

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” “திராவிடம் மாயை” என்று கூப்பாடு போட்டுவரும் குதர்க்கவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ம.பொ.சி. திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றியபோதெல்லாம் பல் இளித்து பதவி சுகம் கண்டவர். அண்ணா ஆட்சியில் அமர்ந்ததும் பதவிகேட்டு அண்ணாவை நாடி அலைந்தார்.அப்போது விடுதலையில் “ம.பொ.சிக்கு பதவியா?” என்று கேள்விஎழுப்பி பெட்டிச்செய்தி வெளியானது.சுதாகரித்துகொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச்சொல்லி பதவி தர மறுத்துவிட்டார்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இரத்தக்கண்ணீர் நாடகத்தில் ராதாவின் அம்மா இறந்துவிடுவது போல் ஒரு காட்சி! ராதா கின்டலாக ஒப்பாரி வைப்பதாக அமைத்திருப்பார் அதில் “இப்படி அல்ப ஆயுசுல போயிட்டியேம்மா! ம.பொ.சி க்கும் உனக்கும் ஒரே வயசுதானேம்மா! நீ மட்டும் போயிட்டியே” என்று புலம்புவார்.ம.பொ.சியின் துரோகம் திராவிட இயக்கத்தினரிடையே அந்தளவு எரிச்சலை உண்டாக்கியிருந்தது.