Tag: தமிழர்

  • பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் பிழைப்பிற்கே!

    பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் பிழைப்பிற்கே!

    விடுதலை ஞாயிறு மலர் 21.6.2020 இதழில் பேராசிரியர் அருணன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் பதிலளித்திருந்தார். “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது தான் தோழர் அருணன் அவர்களுடைய வினா. “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக! இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்!” என்று ஆசிரியர் அந்த வினாவிற்கு…

  • “கருணாநிதி ஒரு துரோகி’ என்பது திட்டமிட்ட சதி – ஓர் ஈழத் தமிழரின் கருத்து

    “கருணாநிதி ஒரு துரோகி’ என்பது திட்டமிட்ட சதி – ஓர் ஈழத் தமிழரின் கருத்து

    தமிழர்கள் உலகில் பத்துக் கோடி என்று சொல்வார்கள். சீமானின் மரபணு சோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்து, மற்றவர்களை கழித்து விட்டால் கூட, ஒரு ஆறு கோடி வரும். எப்படிப் பார்த்தாலும் உலகில் தமிழர்கள் ஒரு பெரிய இனம். பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றை பேசுகின்ற இனம். அறிவு வளம் மிக்க பலரைக் கொண்டிருக்கும் ஒரு இனம். இந்த இனம் போரில் எப்படித் தோற்றது என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். போர் முடிந்த 7 ஆண்டுகள் ஆன…

  • பெரியாரை எதிர்ப்பது தான் தமிழ்த் தேசியமா? – தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு பதில்!

    கேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே? தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்: இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் ‘தமிழன்’ என்ற ஒரு…

  • குலுங்கிக் குலுங்கி அழுத காமராஜர்!

    குலுங்கிக் குலுங்கி அழுத காமராஜர்!

    தந்தை பெரியார் அவர்கள் மறைந்த இரண்டு நாட்களுக்கு பிறகு தனது இல்லத்தில் கண் மூடி படுத்திருக்கிறார் பெருந்தலைவர் காமராசர். தூங்குகிறார் என நினைத்து அருகில் அமைதி காக்கிறார் தோழர் (பெயர் நினைவில் இல்லை). காமராசரின் கண் இமை ஓரத்தில் நீர் வடிகிறது. சில நிமிட அமைதி!. படுக்கையை விட்டுத் திடீரென எழுந்து ஆக்ரோஷமாக சத்தமிடுகிறார் காமராசர். யார் இருக்கான்னேன்? இனி எந்த நாதி இருக்குன்னேன்? தமிழனுக்காக குரல் கொடுத்த அந்தக்குரலும் போய்விட்டதே என்று சொல்லி குலுங்கி குலுங்கி…

  • ஞாயிறுக்கிழமை ஈழப்போராளிகள்

    ஞாயிறுக்கிழமை ஈழப்போராளிகள்

    தலைப்பை பார்த்து குழம்பாதீர்கள். விளக்கம் பதிவின் இறுதியில் இருக்கிறது. அந்த விளக்கத்தை தெரிந்துகொள்வதற்கு முன் ஈழத்தமிழ் அரசியலின் வியாபார பின்புலத்தை கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் பிரதான தமிழக அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தாங்களும் குழம்பி, தமிழ்நாட்டு மக்களையும் ஏகத்துக்கு குழப்பிக் கொண்டிருக்க, இதை வைத்து கல்லா கட்டும் வியாபாரிகளும் தமிழக அரசியலில் உண்டு. அப்படியானவர்களில் சில சில்லறை வியாபாரிகள், ஈழப்பிரச்சனையை தெருவோரத்தில் கூறுகட்டி கூவி விற்கும் நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் பதிவே…

  • தஞ்சைக்குள் நஞ்சா ?

    தஞ்சை பொன்னி நதி பாய்ந்தோடும் பகுதி.எண்ணிப் பார்த்தால், தற்போதைய நிலையில் கர்நாடகத்தின் கடைக்கண் பட்டால்தான் ஆற்றில் நீர் வருகிறது. இப்போதுதான் காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு கெசட்டில் வெளியாகி இருக்கிறது. இப்போது அரை வெற்றி கிட்டி இருக்கிறது தமிழ் நாடு. எப்போது இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வந்து நாலு கால் பாய்ச்சலில் வாய்க்கால் நிரம்புகிறதோ அப்போதுதான் விவசாயிகளின் வயிறும் நெஞ்சமும் நிறையும்; அப்போதுதான் முழு வெற்றி. அது வரையில் அரசியல் கட்சிகளின் அறிக்கைப் போர் தொடரத்தான் செய்யும்.     வானமோ பொய்த்தது;…

  • பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!

    பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!

    பொங்கல் விழா என்றும் உழவர் திருநாள் என்றும் தைத்திருநாள் என்றும் அழைக்கப்படும் தமிழ்ப்புத்தாண்டு தமிழினத்தின் கலாச்சாரப் பெருவிழா! தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப்பண்ணித்  தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்றார் புரட்சிக்கவிஞர்! தமிழரின் கலாச்சார பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். தமிழன் கலாச்சாரம், பண்பு,…