Tag: ஊடகம்

  • ”தமிழக அரசியல்” எனும் தரங்கெட்ட….!

    பெண்களையும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று சொன்ன கிருஷ்ணனுக்கு விழா கொண்டாடலாமா? என்று அன்மையில் அறிவார்ந்த வினாவை எழுப்பினார் திராவிடர்கழக தலைவர் வீரமணி!. தமிழக அரசியல் எனும் தரங்கெட்ட ஒரு இதழில் அதற்கு நேரிடையாக பதிலளிக்க இயலாத ஒரு அனாமதேயம் வீரமணியாரை கொச்சைப்படுத்தியுள்ளது. அதோடு “பறச்சிகளும், பள்ளச்சிகளும் ரவிக்கைப்போட ஆரம்பித்ததால்தான் துணிவிலை ஏறிவிட்டது” என்று பெரியார் கூறியதாக துணிச்சலாக ஒரு பொய்யை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. 1962ல் சட்டசபை தேர்தலில் காமராஜரை முழுமையாக ஆதரித்தார் பெரியார். பட்டுகோட்டையில்…

  • அன்புள்ள மக்களுக்கும், திருட்டு நடுநிலையாளர்களுக்கும்..

    அன்புள்ள மக்களுக்கும், திருட்டு நடுநிலையாளர்களுக்கும்..

    அன்புள்ள மக்களுக்கும், திருட்டு நடுநிலையாளர்களுக்கும்.. மின்சார டெபாசிட் பணத்தை எவனும் எக்காலத்திலும் மின்சார வாரியத்திடம் திருப்பிக் கேட்கப்போவதில்லை. அதேநேரம் எந்த வீட்டுக்காரனும் மின்கட்டணம் கட்டவே கட்டாமல் மின்சார வாரியத்தை ஏய்க்கவும் முடியாது. ஏனெனில் மின்சார விற்பனை என்பது மின்சாரவாரியத்திடம் மட்டுமே உள்ள (monopoly) ஏகபோக வியாபாரம். ஏற்கனவே மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி அந்த சுமையையே மக்கள் சுமக்கத் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் வைப்புத் தொகையையும் (deposit) உத்தராகண்ட் வெள்ளம் போல கண்டபடி ஏற்றி ஒரு பட்டப்பகல் கொள்ளையை செவ்வனே…

  • ஞாயிறுக்கிழமை ஈழப்போராளிகள்

    ஞாயிறுக்கிழமை ஈழப்போராளிகள்

    தலைப்பை பார்த்து குழம்பாதீர்கள். விளக்கம் பதிவின் இறுதியில் இருக்கிறது. அந்த விளக்கத்தை தெரிந்துகொள்வதற்கு முன் ஈழத்தமிழ் அரசியலின் வியாபார பின்புலத்தை கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் பிரதான தமிழக அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தாங்களும் குழம்பி, தமிழ்நாட்டு மக்களையும் ஏகத்துக்கு குழப்பிக் கொண்டிருக்க, இதை வைத்து கல்லா கட்டும் வியாபாரிகளும் தமிழக அரசியலில் உண்டு. அப்படியானவர்களில் சில சில்லறை வியாபாரிகள், ஈழப்பிரச்சனையை தெருவோரத்தில் கூறுகட்டி கூவி விற்கும் நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் பதிவே…

  • அம்மனக்கூத்தாடும் ஆ(ரிய)னந்த விகடன்!

    “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசன்னன்” என்பதுபோல் ஆனந்த விகடனுக்கு தலைகொழுப்பு ஏறிவிட்டதால் அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது. மானங்கெட்ட,சொரனையற்ற தமிழர் பலர் அதை ஆதரிப்பதும், அயோக்கியத்தனமான பணத்தாசையால் அதை வாங்கி சூதாட நினைப்பதுமே ஆனந்த விகடனின் ஆணவத்துக்கு அஸ்திவாரமாக இருக்கிறது.   (குடிஅரசு -10.10.37) வகுப்புவாரி இடஒதுக்கீடு கோரி திராவிடர்கழகம் நடத்திவந்த போராட்டங்களை எதிர்த்து அது பிரிவினை வாதம் என்றும் இனத்துவேஷம் என்றும் தொடர்ந்து எழுதிவந்த ஆனந்தவிகடனை கண்டித்து குடியரசில் வெளிவந்த கட்டுரை வரிகள்! முக்காலும் உணர்ந்த முழுஞாயிறு…

  • ஆ.வி மறந்தது/ மறைத்தது/ சொல்லாமல் விட்ட செய்திகள்

    ஆனந்த விகடன் இந்த வாரம் அப்பட்டமாக ஜெ.புராணம் பாடியிருக்கிறது; இன்னும் ஏதாவது கெட்ட பெயர் வாங்காமல் இருந்தால் (அவ்வளவு நம்பிக்கை) இப்போதைய சூழலில் ஜெ ஹோ… ஜெயா ஹோவாம். டெசோ போராட்டத்தின் எதிரொலிதான் ஜெ.விடம் மாற்றம் என்ற தற்காலிக நாடகம். இதைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாத ஆ.வி.யின் நடுநிலை மீண்டும் நாறியிருக்கிறது. மாணவர் போராட்டத்தை ஆதரித்தார் என்று அப்பட்டமான புளுகு. மாணவர் போராட்டத்தை பல வழிகளிலும் ஒடுக்கியவர் ஜெ.போலீசை விட்டுத் தக்கியவர்; மாணவர்களின் சுயவிவரங்களைக் கேட்டு…

  • ஜெயலலிதாவைக் காப்பாற்றத் துடிக்கும் விகடனுக்கு சில கேள்விகள்!

    ஜெயலலிதாவைக் காப்பாற்றத் துடிக்கும் விகடனுக்கு சில கேள்விகள்!

    மிஸ்டர் புளுகாரின் புலனாய்வு லட்சணம் இதுதான்! ”மாணவர்களைத் தூண்டுகிறாரா ஜெ.?, உளவு பார்க்க வந்த டெல்லி உள்துறை” – இது இன்று காலை வெளியான ஜூனியர் விகடன் (20.3.2013) இதழின் அட்டைப்பட்த் தலைப்பு. `மாணவர் போராட்டம் தீவிரம்!கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு காலவரையற்ற விடுமுறை! -இது இன்றைய நாளிதழ்களில் (16.3.2013) வெளிவந்துள்ள முதன்மைச் செய்தி. ஜூ.வி.யின் கற்பனையில் உதித்த சூப்பர் ஐடியாவின் படி மாணவர்களைத் தூண்டிய ஜெயலலிதாதான், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். இநத இரண்டு செய்திகளையும் படிக்கும்…

  • பத்திரிக்கையாளர்களே… நீங்கள் நேர்மையானவர்களா?

    பத்திரிக்கையாளர்களே… நீங்கள் நேர்மையானவர்களா?

    பத்திரிக்கையாளர்களே நீங்கள் நேர்மையாக செயல்படுவதாக உளப்பூர்வமாக உணர்கிறீர்களா? உங்களுக்கு நேர்மை குணம் உள்ளதா? நாட்டில் உள்ளவர்களை எல்லாம் மனம் போனபோக்கில் விமர்சித்து எழுதும் நீங்கள் பத்திரிக்கைகள் செய்யும் தவறுகளை கண்டித்து என்றாவது எழுதியது உண்டா? நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் தொழில்களில் பத்திரிக்கையும் ஒன்றுதானே… அது மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா? ஒரு மூத்த அரசியல்வாதியை, ஒரு மூத்த பத்திரிக்கையாளரை, பத்திரிக்கையாளர்களுக்கு என்றும் மதிப்பளிக்கும் ஒரு முதியவரை, தனது கணவரோடும் இரண்டு பெண் குழந்தைகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணோடு…