Category: நடப்பு

  • ஓ.கே.யா தினமணி?

    அயோக்கியதனத்திற்கு அளவில்லையா? தினமணி என்றொரு ஏடு! நம் பார்வையில் அது இனமணி. ஒவ்வொரு நாளும் அதன் ஒலிப்பில் இதை உணர்த்துகிறது. நெஞ்சினில் நஞ்சு வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே! என்ற வரிக்கு தினமணி வைத்தியநாத அய்யர் சரியான சான்று! தமிழ்ப் பற்றாளர் போல் காட்டுவார். ஆனால், தமிழை உள்ளூர அழித்தொழிக்கும் வேலையை அரவமின்றி செய்வார். நடுநிலையாளர் போல் காட்டுவார். ஆனால், அப்பட்டமாக தன் சார்பு நிலையை வெளிப்படுத்துவார். தாலி அகற்றும்…

  • பகவத்கீதையும்-திருக்குறளும்! கி.தளபதிராஜ்.

    பகவத்கீதையும்-திருக்குறளும்! கி.தளபதிராஜ். எதற்காக இலக்கியம்? அதனால் நமக்கு என்ன பயன்? நம் புத்திக்கு எட்டிய முறையில் தமிழர் பண்புக்கு கலைக்குத் தகுந்தவாறு ஏதேனும்இலக்கியங்கள் இருக்கிறதா? என்ற பெரியார் இராமாயணம், பாரதம், பகவத்கீதை, பெரியபுராணம்,உள்ளிட்ட அணைத்து இலக்கியங்களையும் கடுமையாக சாடினார்.மதமும்,மௌடீகமும் மண்டிக்கிடக்கும் இவற்றைத் தவிர அறிவு வளர்ச்சிக்குத் தேவையான எந்த புதிய இலக்கியங்களும் தமிழில் படைக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆரியத்தின் பிடியிலிருந்து நம்மக்களை மீட்க புராண, இதிகாச குப்பைகளை…

  • மண்ணுருண்டை மாளவியா ! -கி.தளபதிராஜ்

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மதன்மோகன் மாளவியாவிற்கு பாரதரத்னா  விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. மாளவியாவை சீர்திருத்தவாதி போன்று ஊடகங்கள் சித்தரிக்க முயன்றாலும், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் மாளவியாவை தூக்கிப்பிடிப்பதைப் பார்த்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் ஓரளவு உணர முடியும். இந்து மகாசபையின் தலைவராக இருந்த மாளவியா சாஸ்திரங்களை தூக்கிப்பிடித்த சனாதனவாதி. தென்னாட்டு பார்ப்பனர்கள் தங்கள் சரக்கு தமிழ்நாட்டில் போனியாகாத போதெல்லாம் வடநாட்டுப்பார்ப்பனர்களை வரவழைத்து வித்தை காண்பிப்பது வழக்கம். அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த மாளவியா என்பதும்,…

  • வெற்றிபெறும் வழி!

    ‘கொள்கையை நிறைவேற்றும் வழியை பெரியார் கற்றுத்துந்துள்ளார்’ என்று சொல்லியுள்ளீர்களே…. அது என்ன? என்று கேட்கிறார்கள் சிலர். உலகில் வெற்றியடைந்த புரட்சிகரமான போராட்ட வரலாறை படித்துப் பார்த்தால், அதை பெரியாரின் செயல்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால், எளிதாக அறிந்துகொள்ளலாம் கொள்கையை நிறைவேற்றும் வழியினை! அது என்ன வழி? மக்களை மாற்றத்திற்கு தயார்படுத்துவதே அந்த வழி! கொள்கையை தொடர்ந்து…. தொடர்ந்து என்றால் இடையறாது தொடர்ந்து பிரச்சாரம் செய்வது, அதை விட முக்கியமாக, அந்த கொள்கை வழி வாழ்ந்து முன்னுதாரணமாக இருப்பது ஆகிய…

  • பெரியாரும் காந்தியும்!- கி.தளபதிராஜ்

    தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் தனிமனிதராக பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர். ஈரோடு நகரமன்றத் தலைவராக அவர் செயலாற்றி வந்த காலத்தில் 1920இல் காந்தியாரால் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது. அதில் இருந்த தீண்டாமை விலக்கு, மது விலக்கு ஆகியவை பெரியாரை மிகவும் கவர்ந்தன. முக்கியமாக தீண்டாமை விலக்கு மூலம், சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஜாதி வேற்றுமையை ஒழிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைப்பதாக எண்ணி காங்கிரஸில் இணைந்தார். காந்தியை முழுமையாக நம்பிய பெரியார் மதுவிலக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தனக்குச் சொந்தமான…

  • பெரியாரின் வாரிசா ஜெயலலிதா? -கி.தளபதிராஜ்

    மானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக இந்த மக்களை மாற்றும் முயற்சியில் ஆயிரம் முறை சிறை சென்றாலும் தான் செய்த செயலுக்காக தங்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய உயர்ந்த பட்ச தண்டனையை தாருங்கள் என நீதிபதிகளிடம் தண்டணையை கேட்டுப்பெற்றவர் பெரியார். எந்த ஒரு மனிதனும் மற்றொருவன் காலில் விழுந்து வணங்கக் கூடாது என வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய மான மீட்பர் பெரியார். புகழ்ச்சிக்கு அடிபணியாத அந்த புத்தன் மேடைகளில் யாரேனும் தன்னைப்ற்றி புகழ்ந்து பேசுகையில் தன் கைத்தடியால் மேசைசையைத்தட்டி எச்சரிக்கத்…

  • ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து?

    ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து?

    இன்றைக்கு ஒரு பத்திரிக்கையில், புது தில்லியிலிருந்து க.திருநாவுக்கரசு எனும் பெயரில் எழுதிய கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இங்கே அதே பெயரில் திராவிடர் இயக்கத்தைப் பற்றி எழுதும் ஒரு எழுத்தாளர் இருக்கும்போது, அதே பெயரில் எழுதுகிறோமே என்ற தார்மீக பொறுப்பு அந்த எழுத்தாளரிடமும் இல்லை, வெளியிடும் பத்திரிக்கையிடமும் இல்லை; சரி, விஷயத்துக்கு வருவோம். இப்போது, தமிழ் நாட்டில் ஜெயலலிதா மீதான தனி நபர் வழிப்பாட்டுக்கு ஆரம்பப் புள்ளியே பெரியார் தானாம். அவர் இயக்கத்தை சர்வாதிகாரியாக இருந்து நடத்தினாராம், பொதுக்…