Tag: ஆரியம்

  • தத்துப்பித்து தீபா! பாவம் பாண்டே!

    தத்துப்பித்து தீபா! பாவம் பாண்டே!

    தீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி வரிகளில் கூறுகிறேன். தீபாவின் ஒட்டுமொத்தப் பதில்களின் சாரம் ஒன்றே ஒன்றுதான்! “என் அத்தையின் சொத்துக்கு நான்தான் முழு உரிமையாளினி; சொத்து என்பதன் பொருள் வீடு-மனை, நிலம்-நீச்சு, பணம்-காசு….. மட்டுமில்லை; ‘அத்தை வகித்த பதவியும், கட்டிக்காத்த கட்சியும் எனக்கே சொந்தம்’ என்னும் சிறுபிள்ளைத்தனமான…. (விருப்பப்படுவோர் ‘பைத்தியக்காரத்தனமான…’…

  • மாற்றம் ஒன்றே மாறாதது! அற்புதம் அம்மாளும் அதற்கு விதிவிலக்கல்ல!

    மாற்றம் ஒன்றே மாறாதது! அற்புதம் அம்மாளும் அதற்கு விதிவிலக்கல்ல!

    அற்புதம் அம்மாளின் நேர்காணல் தி இந்துவில் வந்திருக்கிறது. திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க ஆகிய இயக்கங்கள் குறித்த அவரது கருத்துகளை வேதனையோடு பகிர்ந்துள்ளார். “ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை பெறுபவர்களை வைத்து கலைஞருக்கு எதிராக பேட்டி கொடுக்கவும், பிரச்சாரம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படலாம், அவர்களை அரசியலுக்கு பயன்படுத்த முயற்சிக்கலாம்” என்று இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பதிந்த கருத்துகளை படித்து சிலர் வருத்தப்பட்டனர். அவர்கள் தற்போது அற்புதம் அம்மாளின் பேட்டியை படித்து ஓரளவிற்கு புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.…

  • திமிர்: மஹாவிஷ்ணுவுக்கா? மகாபலிக்கா?

    நாளை திருவோணம் பண்டிகையாம்! மகாபலி எனும் சக்கரவர்த்தி வீரமும் கொடைக்குணமும் மற்றும் செருக்கும் உடையவனாக திகழ்ந்தான். மகாபலியின் செருக்கை அடக்க, மஹாவிஷ்ணு “வாமனன்” அவதாரம் எடுத்து அவனது அரண்மனைக்குச்சென்று தானம் கேட்டார். வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என அறிந்தும் என்ன வேண்டும் என்று கேட்டான் மகாபலி. மூன்று அடி மண் வேண்டும் என்றார் மஹாவிஷ்ணு. மகாபலி தானம் செய்து கொடுக்கத் தயாரானான். மஹாவிஷ்ணு ஓங்கி உலகளந்த உத்தமரானார். அதைக்கண்ட மகாபலியின் மகன் நீங்கள் வந்த குள்ள உருவத்தில்தான் மண்ணை…

  • பெரியாரை எதிர்ப்பது தான் தமிழ்த் தேசியமா? – தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு பதில்!

    கேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே? தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்: இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் ‘தமிழன்’ என்ற ஒரு…

  • ’ஹிந்து’ எனும் பெயரைப் பற்றி !!

    “ஹிந்து” என்ற வார்த்தையே சமஸ்கிருதத்தில் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பல்வேறு அறிஞர்களும், “ஹிந்து” என்ற வார்த்தை, எந்த வேத இலக்கியத்திலும் காணப்படவில்லை என்கிறார்கள். பெருவாரியான அறிஞர்களின் கூற்று என்னவென்றால், வெளியில் இருந்தவர்களாலும், படை எடுத்து வந்தவர்களாலும், “சிந்து” நதி என்பதை சரிவர உச்சரிக்க இயலாமையால், “ஹிந்து”  என்று உச்சரிக்கத் தொடங்கினர் என்பதாகும். சர் மோனியர் வில்லியம்ஸ் எனும் சமஸ்கிருத சொல்லாராய்ச்சியாளர் கூற்றுப்படி,  “ஹிந்து” என்ற வார்த்தைக்கும், “இந்தியா” என்ற வார்த்தைக்கும் தனித்துவமான வேர்ச்சொல்…

  • அம்மனக்கூத்தாடும் ஆ(ரிய)னந்த விகடன்!

    “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசன்னன்” என்பதுபோல் ஆனந்த விகடனுக்கு தலைகொழுப்பு ஏறிவிட்டதால் அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது. மானங்கெட்ட,சொரனையற்ற தமிழர் பலர் அதை ஆதரிப்பதும், அயோக்கியத்தனமான பணத்தாசையால் அதை வாங்கி சூதாட நினைப்பதுமே ஆனந்த விகடனின் ஆணவத்துக்கு அஸ்திவாரமாக இருக்கிறது.   (குடிஅரசு -10.10.37) வகுப்புவாரி இடஒதுக்கீடு கோரி திராவிடர்கழகம் நடத்திவந்த போராட்டங்களை எதிர்த்து அது பிரிவினை வாதம் என்றும் இனத்துவேஷம் என்றும் தொடர்ந்து எழுதிவந்த ஆனந்தவிகடனை கண்டித்து குடியரசில் வெளிவந்த கட்டுரை வரிகள்! முக்காலும் உணர்ந்த முழுஞாயிறு…

  • மகா க(கா)வி பாரதி யார்?

    அகண்ட பாரதம் ஆரியநாடு! நால்வர்ணம் நாட்டுநலன்! பசுவதை தெய்வக்குற்றம்! இந்தி பொதுமொழி! சமஸ்கிருதம் தெய்வபாஷை! மதமாற்றம் தடைசெய்! RSS எனும் பச்சைப்பார்ப்பன இயக்கம் தோன்றும் முன்னரே இம் முழக்கங்களுக்கு சொந்தக்காரன்!. RSS இயக்கத்தின் முன்னோடி!.தன் கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலதை கிறுக்கி தன்னை முற்போக்காளனாய் காட்டிகொள்ளும் வித்தையில், கை தேர்ந்தவன் ஆரிய சனாதன வெறிபிடித்த பாரதி !. அதனால்தான் “வேதம் அறிந்தவன் பார்ப்பான்-பல  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்” என்றான் போலும்! அகண்ட பாரதம் ஆரியநாடு! “உன்னத ஆரிய…