’ஹிந்து’ எனும் பெயரைப் பற்றி !!

“ஹிந்து” என்ற வார்த்தையே சமஸ்கிருதத்தில் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பல்வேறு அறிஞர்களும், “ஹிந்து” என்ற வார்த்தை, எந்த வேத இலக்கியத்திலும் காணப்படவில்லை என்கிறார்கள்.

பெருவாரியான அறிஞர்களின் கூற்று என்னவென்றால், வெளியில் இருந்தவர்களாலும், படை எடுத்து வந்தவர்களாலும், “சிந்து” நதி என்பதை சரிவர உச்சரிக்க இயலாமையால், “ஹிந்து”  என்று உச்சரிக்கத் தொடங்கினர் என்பதாகும்.

சர் மோனியர் வில்லியம்ஸ் எனும் சமஸ்கிருத சொல்லாராய்ச்சியாளர் கூற்றுப்படி,  “ஹிந்து” என்ற வார்த்தைக்கும், “இந்தியா” என்ற வார்த்தைக்கும் தனித்துவமான வேர்ச்சொல் ஒன்றுமே இல்லை என்கிறார். மேலும், இந்த சொற்கள், புத்த மதத்தின் எந்த புத்தகத்திலோ, ஜைன மதத்தின் எந்த புத்தகத்திலோ அல்லது இந்தியாவின் 23 அலுவல் மொழிகளில் எதிலுமோ காணப்படவில்லை, என்கிறார்.

பேரரசர் அலெக்ஸாண்டர், “சிந்து” எனும் நதியின் பெயரை, கிரேக்கர்கள் உச்சரிக்க ஏதுவாக “இந்து” என்று பெயர் மாற்றினார்  என்றும் சில ஆதாரங்கள் கூறுகின்றன.

பின்னர்,  ஆப்கானிஸ்தான் மற்றும் பாரசீகத்தில் இருந்து வந்த இஸ்லாமிய அரசர்களின் படையெடுப்பில், “சிந்து” நதி என்பதை “ஹிந்து” நதி எனக் கூறினர். அதன் பின்னர், வட மேற்குப் பிராந்தியத்தில் சிந்து நதிக் கரையோரத்தில் வசித்த மக்களைக் குறிக்க   “ஹிந்து” என்ற சொல் குறிக்கப் பெற்றது.

சமஸ்கிருத மொழியில் உள்ள “ச” என்பது, பார்ஸி மொழியில் “ஹ” என்று மாறுவதால், இஸ்லாமியர்கள் “சிந்து” எனபதை “ஹிந்து” என்று குறிப்பிட்டார்கள் .

வேத கால இந்தியர்களுக்கு பாரசீகர்கள் வைத்த நவீன பெயரே “ஹிந்து” என்று, “ராமாயணம் : உண்மையா ? கதையா ?” எனும் நூலில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

(Ramayana: A Fact or Fiction?, by Sarjerao Ramrao Gharge-Deshmukh, Pratibha Deshmukh, Pune, October, 2003, p.236)

பாரசீக இலக்கியத்தில் “ஹிந்து” என்ற வார்த்தை தென்படுகிறது. பாரசீக மொழியில்  “ஹிந்து இ பலாக்”  (“Hindu-e-falak”) என்றால்? “வானத்தின் இருள்”  அல்லது “சனி” என்று அர்த்தம். அரேபிய மொழியில் “ஹிந்த்” என்றால் நாடு என்றுப் பொருள். வரலாற்றைப் புரட்டிப் பார்க்கையில், “ஹிந்து” என்றப் பெயர், பாரசீகர்களால் சிந்து நதி வந்தப் பின்னர் வைக்கப்பட்ட பெயராகவே தென்படுகிறது என்கிறார் ஆசிரியர் சூரிய நாராயண்  [ R. N. Suryanarayan in his book Universal Religion (p.1-2, published in Mysore in 1952) ]

ஈரானியர்களின் “அவெஸ்தா” என்பதில், “ஹிந்து” என்ற வார்த்தை முதன் முதலாக ஒரு நாட்டையும் அந்த நாட்டின் மக்களையும்  குறிக்கப்படுவதாக தெரிகிறது.

மற்றொரு கோணத்தில், “ஹிந்து” என்பது ஆரியர்களை “அடிமை“ என்ற பொருளில், இஸ்லாமிய அரசர்களால்  குறிக்கப்பெறுவதாக கூறுகிறார் தயானந்த சரஸ்வதி. (Maharishi Shri Dayanand Saraswati Aur Unka Kaam, edited by Lala Lajpat Rai, published in Lahore, 1898, in the Introduction)

பாரசீக  அகராதியில் , “ஹிந்து” என்ற சொல்லுக்கு “திருடன்”, “கொள்ளைக்காரன்”, “வழிப்பறிக்காரன்”, “அடிமை” என்று பொருள் வருகிறது. [ Persian dictionary titled Lughet-e-Kishwari, published in Lucknow in 1964 ]

மற்றொரு பாரசீக அகராதியில், “ஹிந்து” என்றால்? “பணிவான  அடிமை”,  “கருப்பு நிறம் ”, “கருப்பு” என்று  பொருள் வருகிறது.

[ Urdu-Feroze-ul-Laghat (Part One, p. 615) ]

“ஹிந்து” என்ற வார்த்தை கடந்த 1300 ஆண்டுகளில் தான் பெரும் புழக்கத்தில் வந்தது. “ஹிந்து” என்ற வாத்தை சமஸ்கிருத சொல்லே இல்லை. “ஹிந்து” என்று எந்த மதமும் இருந்ததில்லை. மாறாக, தங்களை ஆண்ட அரசர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டு, “ஹிந்து” என்ற சொல்லாடலை புழக்கத்தில் ஏற்றுக் கொண்டனர்.

ஆதாரம் : http://www.stephen-knapp.com/about_the_name_Hindu.htm

தமிழில்: பொன்னியின் செல்வன்