Category: நடப்பு

  • ம.பொ.சி. (துரோக) பரம்பரை! -கி.தளபதிராஜ்

    அகநாழிகை எனும் அநாமதேய இதழ் ஒன்று மபொசியின் விட்ட குறை தொட்ட குறையாக மபொசியாரின் பேத்தி தி.பரமேஸ்வரி, இதோ இன்றும் எங்கள் துரோகம் தொடர்கிறது என்று சொல்லும் வகையில் பெரியாரைக் கொச்சைப்படுத்தி எழுதிய ஒரு கட்டுரையை கடந்த மார்ச் மாத இதழில் வெளியிட்டுள்ளது.  “அவர்காலத்தில் வாழ்ந்த மற்ற பெரியார்களெல்லாம் ஒதுக்கப்பட்டு, ஈ.வெ.ரா பெரியார் என்னும் ஒருவருடைய அதிகபட்ச செயல்பாடுகளையும் மீறிய ஒரு பெரும் பிம்பத்தை கட்டமைத்து, ஆதரவானதோர் அலையை தொடர்ந்து உருவாக்கி வரும் ஒரு கூட்டத்தார், தங்கள்…

  • வரலாறு திரும்பும்! -கி.தளபதிராஜ்.

    “மோடியும் லிபரல்களின் தோல்வியும்” என்கிற ஒரு கட்டுரையை தமிழ் இந்து நாளிதழ் (23.5.14) வெளியிட்டிருக்கிறது. இந்தத்தேர்தலில் சுதந்திரப் போக்காளர்கள் (லிபரல்கள்) ஏன் தோற்றுப்போனார்கள் என்பதற்காண காரணமாக “இடதுசாரி அறிவுஜீவிகளும் அவர்களையொத்த சுதந்திரப் போக்காளர்களும் ஒரு கூட்டமைப்புபோலச் செயல்பட்டார்கள். மதச்சார்பின்மைதான் மிக மேன்மையானது என்பதுபோல நடந்துகொண்டார்கள். மூட நம்பிக்கைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிராக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று முழங்கினார்கள். அறிவியல் விஞ்ஞானி, ராகுகாலம் கழிந்த பிறகு வருவதுகூட விமர்சனத்துக்கு உள்ளாயிற்று.அடக்குமுறையாகவே மாறியது”…

  • புரட்டுக் கலைஞரே நிறுத்தும் உம் உளறலை!

    புரட்டுக் கலைஞரே நிறுத்தும் உம் உளறலை!

    அங்கே தொட்டு இங்கே தொட்டு இறுதியில் அடிமடியில் கை வைத்த கதையாய், மாந்த நேயர் தந்தை பெரியாரின் முகப்பொலிவை சிறுபான்மையினரை நசுக்கிய நரமாமிசக்கார நரேந்திரமோ(ச)டியுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் தன்னை ஒரு அரசியல்வாதியாக எண்ணிக்கொள்ளும் ஒரு திரைப்பட வேடதாரி. திரைப்படங்களில் ரசிகர்களால் பார்க்க, சகிக்க முடியாத ஒரு காலகட்டம் வரும்வரை நடித்து பயமுறுத்தி, இன்னமும் திரைப்படத்தில் நல்லவர்கள் உண்மையிலும் அப்படித்தான் என்று நம்பும் அப்பாவி மக்களை நம்பி அரசியல்வா(வியா)தியாக மாறியிருக்கும் புரட்டுக்கலைஞர் விஜய்காந்த் அவர்களே, உங்கள் கையில் ஒலி…

  • டிஜிட்டல் பார்ப்பனீயம்

    டிஜிட்டல் பார்ப்பனீயம்

    ’பார்ப்பனீயம்’ பற்றி பேசினால் பார்ப்பனத் தோழர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். ‘பூணூல் எதிர்ப்பு’ தவிர்த்து உங்களிடம் வேறு ஆயுதமே இல்லையா என்று கொதித்தெழுகிறார்கள். 1998ல் தொடங்கி ’டயல்அப் மோடம்’ காலத்திலிருந்து இணையத்தில் புழங்குகிறேன். சமூகத்தில் இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாத பார்ப்பனர்களின் சாதிப்பற்றை இணையத்தில் வெளிப்படுத்துவதை, இந்த பதினாறு ஆண்டுகளாக உணர்ந்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் பார்ப்பனீயத்தை யாரேனும் சுட்டிக் காட்டும்போது அவர்களுக்கு ‘சுர்’ரென்று கோபம் எழுவது இயல்புதான். 1) குழு சேர்ந்து பார்ப்பனரல்லாதவர்களை கிண்டல் செய்வது. முதல் தலைமுறையாக…

  • பேரறிவாளனை திராவிடர் கழகம் கைவிட்டதா?

    பேரறிவாளனை திராவிடர் கழகம் கைவிட்டதா?

    கேள்வி : பேரறிவாளின் தாயார் அற்புதம்மாள் சமிபத்தில் அளித்த பேட்டியில், என் மகன் கைது சம்பவத்தின் போது திராவிடர் கழகம் எங்கள் குடும்பத்தை கை விட்டுவிட்டது என்று குற்றம் சொல்லியிருக்காரே? பதில்: அது அவரது ஆதங்கமாக இருக்கலாம். குற்றசாட்டாக ஏற்க முடியாது . ராஜீவ் வழக்கை 23 ஆண்டுகள் கழித்து இன்றைய நிலைமையை வைத்து கருத்து சொல்லகூடாது. சம்பவம் நடந்தபோது ‘ராஜீவ் கொலையில் கருணாநிதிக்கு சம்பந்தம் இருக்கிறது ‘ என்று பிரச்சாரம் செய்தார்கள். அதனால்தான் தி.மு.க கொடிக்கம்பங்கள்…

  • பேசநா இரண்டுடையாய் போற்றி!

    பேசநா இரண்டுடையாய் போற்றி!

    ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலை குறித்து கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார், கபட நாடகம் ஆடுகிறார் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கீழ்கண்டவற்றையும் பலர் படித்து தெரிந்துகொள்ளவேண்டும், தெரிந்து அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். “ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உய்ரநீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும்…

  • ‘தி இந்து’ பத்திரிக்கை செய்தி வெளியிடுவதில் காட்டும் நேர்மையின் லட்சணம்!

    ‘தி இந்து’ பத்திரிக்கை செய்தி வெளியிடுவதில் காட்டும் நேர்மையின் லட்சணம்!

    பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் நேர்க்காணலை சமஸ் அவர்கள் தி இந்துவில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு முக்கியமான அரசியல் கேள்வி கேட்கிறார். ஏன் அரசியல் கட்சிகள் பகிர்ந்துகொள்ளவில்லையா? என்பதே அந்த கேள்வி. அதற்கான அற்புதம் அம்மாளின் பதில் ‘தி இந்துவில்’ வெளிவந்துள்ளது. அந்த பதிலுக்கான இறுதிப்பகுதி, “நெடுமாறன், நல்லகண்ணு, தியாகு, வைகோ, சீமான் இவங்கெல்லாம் பெரிய ஆதரவைத் தந்திருக்காங்க. எல்லாத்துக்கும் மேல இப்போ முதல்வர் அம்மா என் பிள்ளையை மீட்டுத்தர்றேன்னு சொல்லிட்டாங்களே…” என்று முடிகிறது. அந்த பேட்டியில்…