ஜெ.வின் தமிழ்நாட்டுத் துரோகம்!

தமிழர்களின் 150 ஆண்டுக் கனவான சேது சமுத்திரத்திட்டத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என ஜெ.யின் அரசு மனு போட்டுவிட்டது.

எந்த வளமும் இல்லாத வானம் பார்த்த பூமியான தென் மாவட்ட மக்களின் வாழ்வில், பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டமாகத்தான் சேதுத் திட்டத்தை அன்றைய தலைவர்கள் முன் மொழிந்தனர்.குறிப்பாக தென் மாவட்டத்தில் பிறந்த பெருந்தலைவர் காமராசர் இத்திட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளார்.பேரறிஞர் அண்ணா தி.மு.க.தொடங்கிய காலத்தில் இருந்து வலியுறுத்தியுள்ளார்.

தொழில் வளம் இல்லாததால் தென் மாவட்டங்களில் ஜாதிய உணர்வும் மேலோங்கும் நிலை எந்நாளும் உண்டு.அவர்களுக்கு தொழில் வளத்தையும் பொருளாதார வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தால் ஜாதிக் கலவரங்கள் குறையும் என்பது உறுதி.அதனால்தான் சேதுத் திட்டம் வந்தால் அந்தக் கனவு நிறைவேறும் என நினைத்திருந்தோம்.

தி.மு.க.வும்,அ.தி.மு.க.வும் சேதுத் திட்டத்தை ஆதரித்த கட்சிகள்.ஜெ.தனது இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத்திட்டதை நிறைவேற்றவேண்டும் என்று கூறிப் பேசிவந்தவர்.வைகோவும் ம.தி.மு.கவின் திட்டங்களில் சேது திட்டத்தை வலியுறுத்தியவர்:அதற்காக நாடாளுமன்றத்தில் பலமுறை முழங்கியவர்.

பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டம் தொடங்க முடிவெடுக்கப்பட்டது.பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டது.

இந்த நிலைகளில் எல்லாம் சேது சமுத்திரத்தில் இல்லாத ராமன் பாலம் பின்னர் பா.ஜ.க.வின் அரசியலுக்காக திடீரென முளைத்தது.சுப்பிரமணிய சாமி தனது பார்ப்பனத் தனத்தை சுப்ரீம் கோர்ட்டில் காட்டினார்.
அதுவரை அமைதியாக இருந்த ஜெ.வும் தனது பார்ப்பனீய குணத்தை வெளிப்படுத்தினார்.விளைவு தென் மாவட்ட மக்களின் கனவின் மீது இடி விழுந்துவிட்டது.இன்று ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன் ஜெ.தனது தமிழ்நாட்டுத் துரோகத்தை இன்று இழைத்துவிட்டார்.

இது தமிழ்நாட்டுத் துரோகம் மட்டுமல்ல; ராஜபக்சேவுக்கு செய்யும் உதவி.

சேது சமுத்திரத் திட்டத்தால் அதிகம் பாதிப்பது இலங்கை அரசுதான்.தற்போது அவர்களுக்குக் கிடைக்கும் வருவாயில் பெருமளவு அப்படியே தமிழகத்துக்குக் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.
இன்று ஜெ.அரசின் நிலையை அறிந்து உள்ளபடியே ராஜபக்சேதான் அதிகம் மகிழ்ந்திருப்பார்.சேதுத் திட்டத்தை தடுப்பதில் பா.ஜ.க.,ஆர்.எஸ்.எஸ்.,சு.சாமி.,ஜெயலலிதா என அனைத்துப் பார்ப்பனர்களும் ஒன்றுபோல சிந்திக்கிறார்கள்.

7.5 கோடி மக்கள் வாழும் மாநிலத்தின் பொருளாதாரத்தை அழிக்க ஒரு கற்பனைக் கதையைக் காரணம் காட்டமுடிகிறது.அதற்கு இந்த நாட்டு சட்டமும்,நீதிமன்றங்களும் உடன்படுகிறது என்றால்,இந்த நாடு எந்த நூற்றாண்டில் இருக்கிறது? இதனை உலகம் அறிந்தால் சிரிக்காதா?

உலக நாடுகள் பலவற்றில் கடலுக்குள் சாலை போடுகிறார்கள்;எரிவாயுக் குழாய் பதித்து வேறொரு நாட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள்;ரயில் ஓட்டுகிறார்கள்.கண்காட்சியகம் அமைக்கிறார்கள்;கப்பலின் அகலத்தில் நீர் வழிப்பாலம் அமைத்து கால்வாயில் கப்பல் ஓட்டுகிறார்கள்.இதெல்லாம் அயல் மண்ணில் அயராமல் நடந்துவருகிறது.ஆனால்,இந்த ஆரியமயமாக்கப்பட்ட நாட்டில் ஆபாசக் கதை மாந்தனின் பெயரால் ஒரு மாபெரும் மக்கள் நலத்திட்டத்தையே முடக்கமுடிகிறது என்றால்…இந்தியா முன்னேற இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆகப்போகிறதோ?

இந்து மத நம்பிக்கைப் படி கடவுளை நிதிக்கும் திட்டங்களைச் செய்யக்கூடாது என்றால்,மண்ணையே தோண்டக்கூடாதே?அது பூமா தேவியல்லவா? கல்லில் இருந்து கட்டைவரை,விலங்கில் இருந்து விண் வரை அத்தனையும் கடவுளாக்கப்பட்ட இந்தியாவில் மக்களின் நல் வாழ்வு என்றைக்குத்தான் சாத்தியம்?

சரி இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.ஈழப்பிரச்சினையில் ஜெ.வைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் வைகோ,தடுமாறன்,சைமன்,தறுதலை சனியன் வகையறாக்கள் என்ன சொல்லப் போகின்றன என்பதை ஆவளோடு எதிர்பார்க்கிறேன்.

அப்புறம், பல்டியே சக்தி என்று கலைஞரைக் காய்ச்சிய ஆனந்த விகடன் பார்ப்பன ஏட்டின் தாசானு தாசர்கள் என்ன எழுதப் போகிறார்கள்?
சேது சமுத்திரம்.ஈழ விவகாரத்தில் ஜெ.அடித்த பல்டிகளை எழுதுவார்களா? ராணுவத்தை அனுப்பி ஈழத்தைப் பெற்றுத் தருவேன் என்ற ஜெ.இன்று ஒரே ஒரு மனுப் போட்டு சிங்கள மண்ணை வாழவைத்திருக்கிறாரே…!விகடனின் எழுதும் வீராதி வீரத்தமிழர்களே உங்கள் பதில் என்ன?

ஈழப் போராட்டம் வென்றுவிடும் என்ற காலகட்டம் இருக்கும் போது அதனை எதிர்ப்பது;அழிப்பது;போராளிகளுக்கு ஆதரவாக இருக்கும் சக்திகளை ஒடுக்குவது.பிரபாகரன் பேட்டிக்கு 600 பத்திரிகையாளர்கள் குவிந்ததைக் கண்டு கொதித்துப் போய் பிரபாகரனைப் பிடித்து வரவேண்டும் என்றும் பேட்டி தருவது;
ஈழப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் எனக்கு ஓட்டுப் போடுங்கள் ஈழத்தைப் பெற்றுத்தருவேன் என்று மேடையில் நடிப்பது;சட்டமன்றத்தில் சப்பைத் தீர்மானம் போடுவது;இன்னொரு பக்கம் சிங்கள மண்ணை வாழவைக்க சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவது;ராஜபக்சேவின் மனதைக் குளிர வைப்பது.

தெரிந்து கொள் தமிழா இதற்குப் பெயர்தான் ஆரியக் கூத்து!

ராஜபக்சேவுக்கு எதிராக கொந்தளிக்கும் கலைஞரின் எதிரிகளே…ராஜபக்சேவை குளிரவைக்கும் ஜெ.யின் இந்த நடவடிக்கையைக் கை கொட்டி வரவேற்கப் போகிறீர்களா?
வெட்கம்…வெட்கம்…

இனம் இனத்தோடு சேர்கிறது என்பதைத் தமிழா நீ எப்போதுதான் புரிந்துகொள்ளப்போகிறாய்?

“யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே…
அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் தெரியலே…”

– என்ற கண்ணதாசனின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.