Tag: பெரியாரியல்

  • பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்?

    பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்?

    கடந்த 2014  மார்ச் மாத அகநாழிகை இதழில் மபொசியாரின் பேத்தி, தி.பரமேஸ்வரி அவர்கள் பெரியாரைக் கொச்சைப்படுத்தி எழுதிய ஒரு கட்டுரையை வெளியாகியுள்ளது.     “அவர்காலத்தில் வாழ்ந்த மற்ற பெரியார்களெல்லாம் ஒதுக்கப்பட்டு, ஈ.வெ.ரா பெரியார் என்னும் ஒருவருடைய அதிகபட்ச செயல்பாடுகளையும் மீறிய ஒரு பெரும் பிம்பத்தை கட்டமைத்து, ஆதரவானதோர் அலையை தொடர்ந்து உருவாக்கி வரும் ஒரு கூட்டத்தார், தங்கள் எண்ணங்களை அந்த பிம்பத்தின் மீது ஏற்றித் தங்களை ஈடேற்றிகொள்கிறாரகளோ? என்று தோன்றுமளவு ஈ.வெ.ரா பெரியார் பற்றிய மிகை…

  • திராவிட மாயை(!?)

    திராவிட மாயை(!?)

    ஒரு இனம் உலகெங்கும் உள்ள மொழியியல், தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின் தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு அதன் முக்கியத்துவமும் பெருமையும் தெரிகிறதோ இல்லையோ உலக அறிஞர்களும், பல வளர்ந்த நாடுகளும் தமிழுக்கான மரியாதையை, தமிழுக்கான முக்கியத்துவத்தை தங்கள்…

  • ’மானமும் அறிவும்’ – தெளிவற்றவர்களுக்கு ஒரு விளக்கம்!

    ’மானமும் அறிவும்’ – தெளிவற்றவர்களுக்கு ஒரு விளக்கம்!

    பெரியார் சொன்ன “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்ற கருத்தை தோழர். பரிமளராசன் அவர்கள் தனது முகநூலில் பதிந்திருந்தார். அதை கண்டு சகிக்க முடியாமல், தலைச்சிறந்த தத்துவ மேதையாக தன்னை கருதிக்கொள்ளும் ஒருவர் (கிருஷ்ணா தமிழ் டைகர்), // மானம் என்றெல்லாம் எதுவும் தனியா இல்லை தோழர்! மானம் என்று சொல்வதே ஒருவகை உளவியல் ரீதியான அறிவுதான். அறிவும், மானமும் வேறு வேறல்ல. பள்ளிகொடத்துல படிச்சு மனப்பாடம் செய்றத ஒரு வேள அறிவுன்னு எல்லாரும் நெனைக்கிறமாதிரி நெனச்சு மானம்,…

  • அன்னை-யார்?

    காங்கிரசில் ஓட்டுப் பிச்சை கேட்பவர்களுக்கு வேண்டுமானால், திருமதி சோனியா அவர்கள் அன்னையாக இருக்கலாம். அக்ரஹார தி.மு.க வான அ.தி.மு.க-வில் வேண்டுமானால், சுயமரியாதையும் தன்மானமும் இழந்த அடிமைகள் இருப்பதால், அதனையும்  அதன் கொள்கையையும்(!) ஆதரிக்கவும் படித்த பாமரர்களும்(!) இருப்பதால், செல்வி ஜெயலலிதா அவர்கள் ‘அம்மா’வாக இருக்கலாம்.    ஆன்மிக போதையில் சிக்கித் தவிக்கும், சிற்சிறு மாய எண்ணத்தில் முழ்கித் தவிக்கும் மானிடர் யார்க்கும் வேண்டுமானால் சாராதா தேவி அவர்களோ அமிர்தானந்தமயி அவர்களோ அன்னையாக இருக்கலாம். உண்மையில், சமுதாயத்தின் சமத்துவத்துக்கு பகுத்தறிவு வளர்ச்சிக்கு பெண் உரிமைக்கு வித்திட்ட அன்னை யார்? சில காலங்களுக்கு…

  • திராவிடக் கருத்தியலும், தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகளும்!

    திராவிடக் கருத்தியலும், தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகளும்!

    – சொ.சங்கரபாண்டி திராவிடக் கருத்தியலின் அடிப்படைக் குறிக்கோள் சமூகநீதி. பெரியார் அதற்குத் தடையாக இருக்கின்றன என்று கருதிய அனைத்து பகுத்தறிவற்ற வரைமுறைகளையும், அமைப்புகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் அறவழியில் அடித்து நொறுக்குமாறு பரப்புரை செய்தார். அதில் தமிழ்மொழி பற்றிய பகுத்தறிவற்ற வறட்டுக்கூச்சல்களும் உள்ளடங்கும். பல நேரங்களில் சிந்தனைக்குட்படுத்தப் படவேண்டும் என்பதற்காகவே அதிர்ச்சியூட்டும் வகையில் தீவிரத்துடன் முன்வைத்தார். வெறுமனே தற்புகழ்ச்சியுடன் உதவாக்கரை கவிதைகளை எழுதிக்குவித்த கவிஞர்கள் தமிழ் மொழிக்குச் செய்த பங்களிப்பு என்ன? மாற்று மொழியினரின் வெறுப்பையும் சந்தேகத்தையுமே சம்பாதித்தது.…

  • சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ்

    சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ்

    சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 18-5-2012 அன்று தனது கட்சியின் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறது.பெரியாரை சுற்றி சுழன்று கொண்டிருக்கும் தமிழகஅரசியல்களத்தில் புதியதாக அரசியல் பண்ண புறப்பட்டிருக்கும் இந்த கொள்கை சீமான்கள் திராவிட இயக்கத்தையும்-பெரியாரையும்கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறனர். திராவிடம் என்ற ஒரு இனம் எங்கிருந்தோ குதித்தது போலவும் அவர்கள் தமிழர்களை நூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வருவதாகவும் புதுக்கரடி விட்டிருக்கின்றனர்! தமிழையும் தமிழினத்தையும் திராவிட இனம் திட்டமிட்டு அழித்து விட்டதாக கூறுகிறனர். இந்தியாவில்…