Month: October 2012

  • இளையராஜாவும் புதிய சட்டாம்பிள்ளைகளும்!

    இளையராஜாவும் புதிய சட்டாம்பிள்ளைகளும்!

    இசைஞானி இளையராஜாவைத் தமிழினத் துரோகியாகக் காட்டும் முயற்சியில் இன்று சிலர் ஈடுபட்டுள்ளனர். வரும் நவம்பர் 3ஆம் நாள், கனடாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நவம்பர் 27, மாவீரர் நாள் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. மாவீரர் நாள் நினைவுகூரப்படும் கார்த்திகை மாதத்திலும், தமிழீழ மக்கள் பல்லாயிரக்கணக்கில் அழிக்கப்பட்ட வைகாசி (மே) மாதத்திலும் உலகெங்கும் உள்ள தமிழர் எவரும் எவ்விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என்று புதிதாய் ஒரு விதியை தமிழ்நாட்டில் இன்று சிலர்…

  • ஏன் பார்ப்பனர்களை இன்னமும் விமர்சிக்க வேண்டியதிருக்கிறது?

    ஏன் பார்ப்பனர்களை இன்னமும் விமர்சிக்க வேண்டியதிருக்கிறது?

    பார்ப்பனியத்தின் மேலான திராவிடத்தின் தற்காப்புத் தாக்குதல் ஆரம்பித்து நூறு வருடங்கள் ஆகியுள்ள சூழ்நிலையில், திராவிடத்தின் துணைகொண்டு சமூகநீதி சட்டங்களால் மேல்தட்டுக்கு குடியேறிவிட்ட தமிழர்கள் சிலருக்கு, ஒருவிதமான சலிப்பு சமீபகாலமாக ஏற்பட்டிருக்கிறது. “ஏன், இன்னும் பார்ப்பனர்களையே தாக்குகிறீர்கள்?” என்ற கேள்வி அந்த சலிப்படைந்துவிட்ட மக்களுக்கு அடிக்கடி எழுகிறது. எந்த கொள்கையையும் அடுத்த தலைமுறையிடம் கடத்தும் போது அக்கொள்கைக்கான சமகால தேவையையும் உணர்த்தினாலேயொழிய அக்கொள்கையை ஏற்கும் பக்குவம் அத்தலைமுறையினருக்கு ஏற்படாது. ஆகவே சலிப்படைந்திருக்கும் சிலரின் கேள்விகளை நியாயமான கேள்விகளாகவே கொண்டு…

  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு!

    கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு!

    கி.தளபதிராஜ் அன்மையில்  ஒருவர் தனது இணையதள முகநூலில்  ஒரு மகமதிய சாமியாரை பெரியாரோடு தொடர்பு படுத்தி “பெரியாரே ஏற்றுக் கொண்ட ஆண்டவர்தான் சாலை ஆண்டவர் போல! அல்லது திருப்பி அடிக்காதவர்களை தாக்குவது தான் பெரியாரின் வீரம் போல! என்று குறிப்பிட்டு வழக்கம் போல பெரியாரை கொச்சைப்படுத்த முனைந்திருந்தார். 1930 ல் இராமநாதபுரத்திற்கடுத்த திருப்பாலைக்குடியில் பிரபலமாகியிருந்த இந்த சாமியாரை பற்றி பெரியாரின் குடியரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரையை

  • சனாதன வெறியர்  சத்தியமூர்த்தி அய்யர்!

    சனாதன வெறியர் சத்தியமூர்த்தி அய்யர்!

    -கி.தளபதிராஜ் இந்தி எதிர்ப்பு போர் (1937 -38 ) உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்தியை ஆதரித்து உரக்க குரல்கொடுத்தவர் தமிழ்நாட்டு பார்ப்பனர்களின் தலைவராக விளங்கிய சத்தியமூர்த்தி அய்யர்!. 1939 ம் ஆண்டு “பாஷா ஏகாதிபத்தியத்தை” ஆதரித்து சென்னை லயோலா கல்லூரியில் இவர் ஆற்றிய உரையை குடியரசு வெளியிட்டது. “என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால், இந்தியர்களை இந்தி மட்டுமன்றி, சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக படிக்கும்படி செய்வேன்!. சர்க்கார் உத்தியோகங்களுக்கு சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்படுத்திவிடுவேன்!.காந்தியார் உயிருடன்…

  • ஆசிரியர் தகுதித்தேர்வு தேவையா?

    ஆசிரியர் தகுதித்தேர்வு தேவையா?

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும், மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும், பதிவு மூப்பு அடிப்படையில் கடந்த ஆட்சிக்காலம் வரை நியமிக்கப்பட்டு வந்தனர். மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் மூலம், ஒன்று முதல் எட்டாவது வரை ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தமிழக அரசால் அன்மையில் நடத்தப்பட்ட தகுகித்தேர்வில் ஆறு லெட்சத்து அய்ம்பதாயிரம் பேர் தேர்வு எழுதியதில் வெறும்…

  • ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பபற்றவே!

    ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பபற்றவே!

    ஜுனியர் விகடன்(27.6.2012 மற்றும் 1.7.2012) ஆகிய இதழ்களில் திரு எஸ்.இராமகிருஷ்ணன் தனது “எனது இந்தியா’ கட்டுரையில் 1911ம் ஆண்டு பிரிட்டீஷ் அதிகாரி ஆஷை கொலைசெய்த வாஞ்சி அய்யரை வர்ணித்து, இந்தக் கொலை பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டெழுந்த தார்மீக கோபத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? ஆஷை சுட்டுக்கொன்றபோது வாஞ்சிநாதன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தான்? “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக்…

  • தினமலர் வாங்காதே!

    தினமலர் வாங்காதே!

    என் தந்தை பழுத்த சுயமரியாதைக்காரர்! கூட்டுறவு துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். குடும்பத்தின் முதல்நாத்திகர்! காலை எழுந்ததும் நானும் அப்பாவும் தினசரி பத்திரிகைகளை படிப்பதும் அன்றைய செய்திகளின் அடிப்படையில் விவாதிப்பதும் வழக்கம்! இன்று தினமலரில் வெளிவந்த ஒரு செய்தியை சொல்லும்போது மிகவும் எரிச்சலாகி நாளையிலிருந்து தினமலர் வீட்டுக்கு வரக்கூடாது! பேப்பர் பையனிடம் நான்தான் “தினமலர் போடக்கூடாது” என்று சொன்னேனே, ஏன் மீன்டும் போடச்சொன்னாய்? என்றார்! தமிழின விரோத செய்திகளை அவ்வப்போது நம்மால் இயன்றவரை பிறருக்கு எடுத்துச்சொல்லவேண்டும் அதற்காகத்தான் போடச்சொன்னேன்! என்றேன். உனக்கு தேவையானால் எங்கேனும் நூலகத்தில் இலவசமாக…