Author: தளபதிராஜ்

  • உள்ளூரில் போனியாகாத உற்சவப்பெருமாள்! கி.தளபதிராஜ்

    திருப்பதி மூலவர் தன் திருநாமத் திலேயே “நித்யகல்யாணப்பெருமாள்” என  பெயரைக் கொண்டுள்ளதால், அவரைத் தரிசிக்கும் பக்தர்களின் திருமணத் தடை நீங்கும் என்பது அய்தீகமாம். சமீப ஆண்டுகளாக திரு மலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை யைப் போக்கவும, பக்தி மார்க்கம் செழிக்கவும், கல்யாண சிறீநிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறதாம். அப்படி ஒரு வைபோக நிகழ்ச்சி மயிலாடுதுறைக்கு அருகே ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் 24.3.2015…

  • நாகையில் பெரியார் கொடுத்த குரல்! -கி.தளபதிராஜ்

    குழந்தைத் தொழிலாளர் சட் டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற் கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.  இதுகுறித்து, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தங்களது குடும்பப் பாரம்பரியத் தொழில்கள், திரைப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுது போக்கு சார்ந்த பணிகள், சர்க்கஸ் தவிர்த்து பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்குள் பட்டவர்களை ஈடுபடுத்தவும்,…

  • கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை -கி.தளபதிராஜ்

    கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை -கி.தளபதிராஜ்

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15. இவர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற்காலம். தொழிற்துறையில் தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டது. ஏராளமான கல்விச்சாலைகளை திறந்து மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்திற்கு அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டையையும் மீறி புத்துயிர் ஊட்டினார். ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளோடு மேலும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக்கண்ணை திறந்தவர் காமராஜர்!. அதனால் “பச்சைத்தமிழர் காமராஜர்” எனப்பாராட்டி உச்சி முகர்ந்தார் பெரியார்!. நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல.…

  • பகவத்கீதையும்-திருக்குறளும்! கி.தளபதிராஜ்.

    பகவத்கீதையும்-திருக்குறளும்! கி.தளபதிராஜ். எதற்காக இலக்கியம்? அதனால் நமக்கு என்ன பயன்? நம் புத்திக்கு எட்டிய முறையில் தமிழர் பண்புக்கு கலைக்குத் தகுந்தவாறு ஏதேனும்இலக்கியங்கள் இருக்கிறதா? என்ற பெரியார் இராமாயணம், பாரதம், பகவத்கீதை, பெரியபுராணம்,உள்ளிட்ட அணைத்து இலக்கியங்களையும் கடுமையாக சாடினார்.மதமும்,மௌடீகமும் மண்டிக்கிடக்கும் இவற்றைத் தவிர அறிவு வளர்ச்சிக்குத் தேவையான எந்த புதிய இலக்கியங்களும் தமிழில் படைக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆரியத்தின் பிடியிலிருந்து நம்மக்களை மீட்க புராண, இதிகாச குப்பைகளை…

  • மண்ணுருண்டை மாளவியா ! -கி.தளபதிராஜ்

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மதன்மோகன் மாளவியாவிற்கு பாரதரத்னா  விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. மாளவியாவை சீர்திருத்தவாதி போன்று ஊடகங்கள் சித்தரிக்க முயன்றாலும், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் மாளவியாவை தூக்கிப்பிடிப்பதைப் பார்த்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் ஓரளவு உணர முடியும். இந்து மகாசபையின் தலைவராக இருந்த மாளவியா சாஸ்திரங்களை தூக்கிப்பிடித்த சனாதனவாதி. தென்னாட்டு பார்ப்பனர்கள் தங்கள் சரக்கு தமிழ்நாட்டில் போனியாகாத போதெல்லாம் வடநாட்டுப்பார்ப்பனர்களை வரவழைத்து வித்தை காண்பிப்பது வழக்கம். அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த மாளவியா என்பதும்,…

  • பெரியாரும் காந்தியும்!- கி.தளபதிராஜ்

    தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் தனிமனிதராக பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர். ஈரோடு நகரமன்றத் தலைவராக அவர் செயலாற்றி வந்த காலத்தில் 1920இல் காந்தியாரால் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது. அதில் இருந்த தீண்டாமை விலக்கு, மது விலக்கு ஆகியவை பெரியாரை மிகவும் கவர்ந்தன. முக்கியமாக தீண்டாமை விலக்கு மூலம், சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஜாதி வேற்றுமையை ஒழிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைப்பதாக எண்ணி காங்கிரஸில் இணைந்தார். காந்தியை முழுமையாக நம்பிய பெரியார் மதுவிலக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தனக்குச் சொந்தமான…

  • பெரியாரின் வாரிசா ஜெயலலிதா? -கி.தளபதிராஜ்

    மானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக இந்த மக்களை மாற்றும் முயற்சியில் ஆயிரம் முறை சிறை சென்றாலும் தான் செய்த செயலுக்காக தங்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய உயர்ந்த பட்ச தண்டனையை தாருங்கள் என நீதிபதிகளிடம் தண்டணையை கேட்டுப்பெற்றவர் பெரியார். எந்த ஒரு மனிதனும் மற்றொருவன் காலில் விழுந்து வணங்கக் கூடாது என வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய மான மீட்பர் பெரியார். புகழ்ச்சிக்கு அடிபணியாத அந்த புத்தன் மேடைகளில் யாரேனும் தன்னைப்ற்றி புகழ்ந்து பேசுகையில் தன் கைத்தடியால் மேசைசையைத்தட்டி எச்சரிக்கத்…