Tag: பார்ப்பனியம்

  • திமிர்: மஹாவிஷ்ணுவுக்கா? மகாபலிக்கா?

    நாளை திருவோணம் பண்டிகையாம்! மகாபலி எனும் சக்கரவர்த்தி வீரமும் கொடைக்குணமும் மற்றும் செருக்கும் உடையவனாக திகழ்ந்தான். மகாபலியின் செருக்கை அடக்க, மஹாவிஷ்ணு “வாமனன்” அவதாரம் எடுத்து அவனது அரண்மனைக்குச்சென்று தானம் கேட்டார். வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என அறிந்தும் என்ன வேண்டும் என்று கேட்டான் மகாபலி. மூன்று அடி மண் வேண்டும் என்றார் மஹாவிஷ்ணு. மகாபலி தானம் செய்து கொடுக்கத் தயாரானான். மஹாவிஷ்ணு ஓங்கி உலகளந்த உத்தமரானார். அதைக்கண்ட மகாபலியின் மகன் நீங்கள் வந்த குள்ள உருவத்தில்தான் மண்ணை…

  • ”தமிழக அரசியல்” எனும் தரங்கெட்ட….!

    பெண்களையும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று சொன்ன கிருஷ்ணனுக்கு விழா கொண்டாடலாமா? என்று அன்மையில் அறிவார்ந்த வினாவை எழுப்பினார் திராவிடர்கழக தலைவர் வீரமணி!. தமிழக அரசியல் எனும் தரங்கெட்ட ஒரு இதழில் அதற்கு நேரிடையாக பதிலளிக்க இயலாத ஒரு அனாமதேயம் வீரமணியாரை கொச்சைப்படுத்தியுள்ளது. அதோடு “பறச்சிகளும், பள்ளச்சிகளும் ரவிக்கைப்போட ஆரம்பித்ததால்தான் துணிவிலை ஏறிவிட்டது” என்று பெரியார் கூறியதாக துணிச்சலாக ஒரு பொய்யை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. 1962ல் சட்டசபை தேர்தலில் காமராஜரை முழுமையாக ஆதரித்தார் பெரியார். பட்டுகோட்டையில்…

  • அம்மனக்கூத்தாடும் ஆ(ரிய)னந்த விகடன்!

    “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசன்னன்” என்பதுபோல் ஆனந்த விகடனுக்கு தலைகொழுப்பு ஏறிவிட்டதால் அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது. மானங்கெட்ட,சொரனையற்ற தமிழர் பலர் அதை ஆதரிப்பதும், அயோக்கியத்தனமான பணத்தாசையால் அதை வாங்கி சூதாட நினைப்பதுமே ஆனந்த விகடனின் ஆணவத்துக்கு அஸ்திவாரமாக இருக்கிறது.   (குடிஅரசு -10.10.37) வகுப்புவாரி இடஒதுக்கீடு கோரி திராவிடர்கழகம் நடத்திவந்த போராட்டங்களை எதிர்த்து அது பிரிவினை வாதம் என்றும் இனத்துவேஷம் என்றும் தொடர்ந்து எழுதிவந்த ஆனந்தவிகடனை கண்டித்து குடியரசில் வெளிவந்த கட்டுரை வரிகள்! முக்காலும் உணர்ந்த முழுஞாயிறு…

  • ஆ.வி மறந்தது/ மறைத்தது/ சொல்லாமல் விட்ட செய்திகள்

    ஆனந்த விகடன் இந்த வாரம் அப்பட்டமாக ஜெ.புராணம் பாடியிருக்கிறது; இன்னும் ஏதாவது கெட்ட பெயர் வாங்காமல் இருந்தால் (அவ்வளவு நம்பிக்கை) இப்போதைய சூழலில் ஜெ ஹோ… ஜெயா ஹோவாம். டெசோ போராட்டத்தின் எதிரொலிதான் ஜெ.விடம் மாற்றம் என்ற தற்காலிக நாடகம். இதைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாத ஆ.வி.யின் நடுநிலை மீண்டும் நாறியிருக்கிறது. மாணவர் போராட்டத்தை ஆதரித்தார் என்று அப்பட்டமான புளுகு. மாணவர் போராட்டத்தை பல வழிகளிலும் ஒடுக்கியவர் ஜெ.போலீசை விட்டுத் தக்கியவர்; மாணவர்களின் சுயவிவரங்களைக் கேட்டு…

  • பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!

    பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!

    பொங்கல் விழா என்றும் உழவர் திருநாள் என்றும் தைத்திருநாள் என்றும் அழைக்கப்படும் தமிழ்ப்புத்தாண்டு தமிழினத்தின் கலாச்சாரப் பெருவிழா! தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப்பண்ணித்  தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்றார் புரட்சிக்கவிஞர்! தமிழரின் கலாச்சார பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். தமிழன் கலாச்சாரம், பண்பு,…

  • மகா க(கா)வி பாரதி யார்?

    அகண்ட பாரதம் ஆரியநாடு! நால்வர்ணம் நாட்டுநலன்! பசுவதை தெய்வக்குற்றம்! இந்தி பொதுமொழி! சமஸ்கிருதம் தெய்வபாஷை! மதமாற்றம் தடைசெய்! RSS எனும் பச்சைப்பார்ப்பன இயக்கம் தோன்றும் முன்னரே இம் முழக்கங்களுக்கு சொந்தக்காரன்!. RSS இயக்கத்தின் முன்னோடி!.தன் கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலதை கிறுக்கி தன்னை முற்போக்காளனாய் காட்டிகொள்ளும் வித்தையில், கை தேர்ந்தவன் ஆரிய சனாதன வெறிபிடித்த பாரதி !. அதனால்தான் “வேதம் அறிந்தவன் பார்ப்பான்-பல  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்” என்றான் போலும்! அகண்ட பாரதம் ஆரியநாடு! “உன்னத ஆரிய…

  • திராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா?

    “பார்ப்பன கிரிக்கெட் வீரர் ராகுல், “திராவிட்” என்று பெயர் வைத்திருக்கிறார்.எனவே திராவிடர் என்ற சொல் பார்ப்பனரையே குறிக்கும்”என்று தோழர் மணியரசன் கூறியுள்ளார்! தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இன்றளவும் பெண்குழந்தைகளுக்கு “பாப்பாத்தி” என்றும் ஆண் குழந்தைகளுக்கு “அய்யர்” என்றும் பெயர் சூட்டியுள்ளதை பார்த்திருக்கிறோம். அவர்ககைளை எல்லாம் மணியரசன் ஆரியர் என்று கூறுவாரா? “திராவிட்” என்பதும் “திராவிடர்” என்பதும் ஒன்றா? “சைதாப்பேட்டை”யை ஆங்கிலத்தில் “சைதாபேட்” என்று கூறுவது போல் “திராவிடம்””திராவிட்” என்பது இடத்தை குறிக்கும். இந்திய தேசிய கீதப் பாடலில் வரும்…