திமிர்: மஹாவிஷ்ணுவுக்கா? மகாபலிக்கா?

நாளை திருவோணம் பண்டிகையாம்! மகாபலி எனும் சக்கரவர்த்தி வீரமும் கொடைக்குணமும் மற்றும் செருக்கும் உடையவனாக திகழ்ந்தான். மகாபலியின் செருக்கை அடக்க, மஹாவிஷ்ணு “வாமனன்” அவதாரம் எடுத்து அவனது அரண்மனைக்குச்சென்று தானம் கேட்டார். வந்திருப்பவர் மஹாவிஷ்ணு என அறிந்தும் என்ன வேண்டும் என்று கேட்டான் மகாபலி. மூன்று அடி மண் வேண்டும் என்றார் மஹாவிஷ்ணு. மகாபலி தானம் செய்து கொடுக்கத் தயாரானான். மஹாவிஷ்ணு ஓங்கி உலகளந்த உத்தமரானார். அதைக்கண்ட மகாபலியின் மகன் நீங்கள் வந்த குள்ள உருவத்தில்தான் மண்ணை அளக்கவேண்டும் என்றான். மஹாவிஷ்ணுவுக்கு கோபம் மண்டைக்கு ஏறியது. உலகளந்த உத்தமனாய் ஒரு அடியில் மண்ணுலகமும் இரண்டாவது அடியில் விண்ணுலகமும் அளந்து மூன்றாவது அடிக்கு மண் எங்கே என்று கேட்டார் விஷ்ணு. இப்படி மகாபலியின் செருக்கை அடக்கிய நாள்தான் திருவோணம். 

-தினமலர் பக்திமலர்

மண்ணுலகத்தை மஹாவிஷ்னு எங்கே நின்றுகொண்டு தாண்டினார்?
விண்ணுலகத்தை இரண்டாவது அடியில் தாண்டிய மஹாவிஷ்னு அடுத்த காலை எங்கே வைத்தார்?.

மண்ணுலகமும் விண்ணுலகமும் அளக்கப்பட்டபோது மகாபலி எங்கே நின்று கொண்டிருந்தான்?

திமலருக்கே குழப்பம் ஏற்பட்டதால்தான் மகாபலி தலையில் காலை வைப்பது போல் படம் வரையப்பட்டதா?

அல்லது சத்திரிய, சூத்திர மக்களை இழிவுபடுத்துவதற்காக பூனூல்சகிதமாக மஹாவிஷ்ணு தன் காலை மகாபலி தலையில் வைப்பதுபோல் படம் வரைந்து தினமலர் புலகாங்கிதம் அடைந்திருக்கிறதா?

வாமனன் உருவத்தில் தானம்கேட்டவன் அதே உருவத்தில் மண்ணை அளப்பதுதானே சரி?

இதைத்தட்டிகேட்டால் மகாபலி மகன்மீது மஹாவிஷ்ணுவுக்கு கோபம் வருவது சரியா?

திமிர் மஹாவிஷ்ணுவுக்கா? மகாபலிக்கா?

 – கி.தளபதிராஜ்