Day: July 16, 2015

  • கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை -கி.தளபதிராஜ்

    கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை -கி.தளபதிராஜ்

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15. இவர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற்காலம். தொழிற்துறையில் தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டது. ஏராளமான கல்விச்சாலைகளை திறந்து மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்திற்கு அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டையையும் மீறி புத்துயிர் ஊட்டினார். ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளோடு மேலும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக்கண்ணை திறந்தவர் காமராஜர்!. அதனால் “பச்சைத்தமிழர் காமராஜர்” எனப்பாராட்டி உச்சி முகர்ந்தார் பெரியார்!. நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல.…