Tag: வரலாறு
-
வரலாற்றைப் படியுங்கள் சீமானே! -கி.தளபதிராஜ்
திராவிட முன்னேற்ற கழகம்! “முன்னேற்றம்” என்பதற்கு பொருள் என்ன? திருடர் முன்னேற்றம்! அதுதான் அதற்கு பொருள். திராவிடக் கொள்கை திராவிடக் கொள்கைங்கிறாங்களே. அது என்ன? திராவிடக் கொள்கை? நாங்க வந்துதான் சுயமரியாதைத் திருமணம் நடத்திவச்சோம்! நாங்க வந்துதான் விதவைத் திருமணம் நடத்திவச்சோம்! ன்றாங்க. போங்கடா வெட்டிப்பயல்களா! எங்க ஊர்ல பார்த்தா அண்ணன் செத்துப்போயிட்டான். அண்ணன் பொண்டாட்டி கைக்குழந்தையோட நிக்குது. தம்பி கட்டிக்கிட்டான். நீயா செஞ்சு வச்சே? காலம் காலமா இப்படித்தான் நடந்துகிட்டிருக்கு. சீர்திருத்த திருமணம் நடத்தி வச்சுட்டோம்…
-
அன்னை-யார்?
காங்கிரசில் ஓட்டுப் பிச்சை கேட்பவர்களுக்கு வேண்டுமானால், திருமதி சோனியா அவர்கள் அன்னையாக இருக்கலாம். அக்ரஹார தி.மு.க வான அ.தி.மு.க-வில் வேண்டுமானால், சுயமரியாதையும் தன்மானமும் இழந்த அடிமைகள் இருப்பதால், அதனையும் அதன் கொள்கையையும்(!) ஆதரிக்கவும் படித்த பாமரர்களும்(!) இருப்பதால், செல்வி ஜெயலலிதா அவர்கள் ‘அம்மா’வாக இருக்கலாம். ஆன்மிக போதையில் சிக்கித் தவிக்கும், சிற்சிறு மாய எண்ணத்தில் முழ்கித் தவிக்கும் மானிடர் யார்க்கும் வேண்டுமானால் சாராதா தேவி அவர்களோ அமிர்தானந்தமயி அவர்களோ அன்னையாக இருக்கலாம். உண்மையில், சமுதாயத்தின் சமத்துவத்துக்கு பகுத்தறிவு வளர்ச்சிக்கு பெண் உரிமைக்கு வித்திட்ட அன்னை யார்? சில காலங்களுக்கு…
-
லோக “பிராமணீய” பாலகங்காதர திலகர்!
(கி.தளபதிராஜ்) இந்திய சுதந்திரப்போராட்ட தீவிரவாதி என்று அடையாளப்படுத்தப்படும் திலகர், இந்திய அரசியலை இந்துத்துவ மயமாக்கி, இந்தியாவில் இந்து சனாதன ஆட்சியை நிறுவியே தீரவேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்ட ஒரு இந்துமதத் தீவிரவாதி! பால்யவிவாக தடுப்புமசோதா! குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, 1880 ம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த பி.எம்.மலபார் என்பவர, ஆங்கிலேய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதம், பல்வேறு விவாதங்களைக் கடந்து, பல ஆண்டுகளுக்கு பின்னர் பிரிட்டீஷ் அரசால் குழந்தை திருமணத்தடுப்பு சட்ட…
-
ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பபற்றவே!
ஜுனியர் விகடன்(27.6.2012 மற்றும் 1.7.2012) ஆகிய இதழ்களில் திரு எஸ்.இராமகிருஷ்ணன் தனது “எனது இந்தியா’ கட்டுரையில் 1911ம் ஆண்டு பிரிட்டீஷ் அதிகாரி ஆஷை கொலைசெய்த வாஞ்சி அய்யரை வர்ணித்து, இந்தக் கொலை பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டெழுந்த தார்மீக கோபத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? ஆஷை சுட்டுக்கொன்றபோது வாஞ்சிநாதன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தான்? “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக்…
-
அன்னிபெசன்ட்டை அறிவோமா?
பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை அநீதிக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்ற காலத்தில் சுதேசமித்திரன் ஆசிரியரும் காங்கிரஸ் காரியதரிசியுமான எ,ரெங்கசாமி அய்யங்காரும், இந்துஆசிரியரும் தமிழ்நாட்டுத்தலைவருமான கஸ்தூரிரங்கய்யங்காரும், பரிசுத்த தேசியவாதி என்று சொல்லப்பட்ட சத்தியமுர்த்தி அய்யரும், ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்கள். இந்திய தேசிய தலைவரும் ‘டிக்டேட்டர்’ என்று சொல்லுவதான ஏக தலைவருமான சீனுவாச அய்யங்கார் ‘ஒத்துழையாமை என்பது சட்ட விரோதம்’ என்று கூறிவிட்டார். “பஞ்சாபியர்கள் செங்கல் எறிந்ததற்கும் ஜெனரல்டயர் பீரங்கி குண்டு போட்டதற்கும் சரியாகப்போய்விட்டது. இதுதான் அரச…
-
“வீரபாண்டியன்” ம.பொ.சி!
“திராவிடத்தால் வீழ்ந்தோம்” “திராவிடம் மாயை” என்று கூப்பாடு போட்டுவரும் குதர்க்கவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ம.பொ.சி. திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றியபோதெல்லாம் பல் இளித்து பதவி சுகம் கண்டவர். அண்ணா ஆட்சியில் அமர்ந்ததும் பதவிகேட்டு அண்ணாவை நாடி அலைந்தார்.அப்போது விடுதலையில் “ம.பொ.சிக்கு பதவியா?” என்று கேள்விஎழுப்பி பெட்டிச்செய்தி வெளியானது.சுதாகரித்துகொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச்சொல்லி பதவி தர மறுத்துவிட்டார். நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இரத்தக்கண்ணீர் நாடகத்தில் ராதாவின் அம்மா இறந்துவிடுவது போல் ஒரு காட்சி! ராதா கின்டலாக…