Tag: பார்ப்பனியம்
-
தினமலர் வாங்காதே!
என் தந்தை பழுத்த சுயமரியாதைக்காரர்! கூட்டுறவு துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். குடும்பத்தின் முதல்நாத்திகர்! காலை எழுந்ததும் நானும் அப்பாவும் தினசரி பத்திரிகைகளை படிப்பதும் அன்றைய செய்திகளின் அடிப்படையில் விவாதிப்பதும் வழக்கம்! இன்று தினமலரில் வெளிவந்த ஒரு செய்தியை சொல்லும்போது மிகவும் எரிச்சலாகி நாளையிலிருந்து தினமலர் வீட்டுக்கு வரக்கூடாது! பேப்பர் பையனிடம் நான்தான் “தினமலர் போடக்கூடாது” என்று சொன்னேனே, ஏன் மீன்டும் போடச்சொன்னாய்? என்றார்! தமிழின விரோத செய்திகளை அவ்வப்போது நம்மால் இயன்றவரை பிறருக்கு எடுத்துச்சொல்லவேண்டும் அதற்காகத்தான் போடச்சொன்னேன்! என்றேன். உனக்கு தேவையானால் எங்கேனும் நூலகத்தில் இலவசமாக…