Tag: நாம் தமிழர்
-
வரலாற்றைப் படியுங்கள் சீமானே! -கி.தளபதிராஜ்
திராவிட முன்னேற்ற கழகம்! “முன்னேற்றம்” என்பதற்கு பொருள் என்ன? திருடர் முன்னேற்றம்! அதுதான் அதற்கு பொருள். திராவிடக் கொள்கை திராவிடக் கொள்கைங்கிறாங்களே. அது என்ன? திராவிடக் கொள்கை? நாங்க வந்துதான் சுயமரியாதைத் திருமணம் நடத்திவச்சோம்! நாங்க வந்துதான் விதவைத் திருமணம் நடத்திவச்சோம்! ன்றாங்க. போங்கடா வெட்டிப்பயல்களா! எங்க ஊர்ல பார்த்தா அண்ணன் செத்துப்போயிட்டான். அண்ணன் பொண்டாட்டி கைக்குழந்தையோட நிக்குது. தம்பி கட்டிக்கிட்டான். நீயா செஞ்சு வச்சே? காலம் காலமா இப்படித்தான் நடந்துகிட்டிருக்கு. சீர்திருத்த திருமணம் நடத்தி வச்சுட்டோம்…
-
திராவிடக் கருத்தியலும், தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகளும்!
– சொ.சங்கரபாண்டி திராவிடக் கருத்தியலின் அடிப்படைக் குறிக்கோள் சமூகநீதி. பெரியார் அதற்குத் தடையாக இருக்கின்றன என்று கருதிய அனைத்து பகுத்தறிவற்ற வரைமுறைகளையும், அமைப்புகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் அறவழியில் அடித்து நொறுக்குமாறு பரப்புரை செய்தார். அதில் தமிழ்மொழி பற்றிய பகுத்தறிவற்ற வறட்டுக்கூச்சல்களும் உள்ளடங்கும். பல நேரங்களில் சிந்தனைக்குட்படுத்தப் படவேண்டும் என்பதற்காகவே அதிர்ச்சியூட்டும் வகையில் தீவிரத்துடன் முன்வைத்தார். வெறுமனே தற்புகழ்ச்சியுடன் உதவாக்கரை கவிதைகளை எழுதிக்குவித்த கவிஞர்கள் தமிழ் மொழிக்குச் செய்த பங்களிப்பு என்ன? மாற்று மொழியினரின் வெறுப்பையும் சந்தேகத்தையுமே சம்பாதித்தது.…
-
சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ்
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 18-5-2012 அன்று தனது கட்சியின் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறது.பெரியாரை சுற்றி சுழன்று கொண்டிருக்கும் தமிழகஅரசியல்களத்தில் புதியதாக அரசியல் பண்ண புறப்பட்டிருக்கும் இந்த கொள்கை சீமான்கள் திராவிட இயக்கத்தையும்-பெரியாரையும்கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறனர். திராவிடம் என்ற ஒரு இனம் எங்கிருந்தோ குதித்தது போலவும் அவர்கள் தமிழர்களை நூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வருவதாகவும் புதுக்கரடி விட்டிருக்கின்றனர்! தமிழையும் தமிழினத்தையும் திராவிட இனம் திட்டமிட்டு அழித்து விட்டதாக கூறுகிறனர். இந்தியாவில்…