Tag: தமிழ்த் தேசியம்
-
பெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் பிழைப்பிற்கே!
விடுதலை ஞாயிறு மலர் 21.6.2020 இதழில் பேராசிரியர் அருணன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்திருந்தார். “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது தான் தோழர் அருணன் அவர்களுடைய வினா. “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக! இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்!” என்று ஆசிரியர் அந்த வினாவிற்கு…
-
கொட்டை எடுத்த புளிகளுக்கு…
ஆர்.எஸ்.எஸ் – போலி தமிழ்த்தேசிய கூட்டு அம்பலம்! ———————————————————————– இந்த Krishna Tamil Tiger என்கிற தமிழ் புளி தான் ஒரு அரைகுறை என்பதை அவரே அவ்வப்போது நிருபித்துக்கொண்டே இருப்பார். காஞ்சி சங்கராச்சாரி காலடியில் இந்தியாவின் மத்திய அமைச்சராக இருக்கிற பொன்.இராதாகிருஷ்ணன் உட்கார்ந்திருக்கும் படத்தையும். சங்கராச்சாரிக்கு இணையாக சுப்பிரமணிய சாமி நாற்காலியில் அமர்ந்திருக்கும் படத்தையும் ஒப்பிட்டு தோழர்கள் சிலர் பதிவுகளை எழுதியிருந்தார்கள். அறியாமையில் இருக்கும் இந்து மத பக்தர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க ஆதரவாளர்களாக இருக்கும் பார்ப்பனரல்லாத…
-
திராவிட மாயை(!?)
ஒரு இனம் உலகெங்கும் உள்ள மொழியியல், தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின் தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு அதன் முக்கியத்துவமும் பெருமையும் தெரிகிறதோ இல்லையோ உலக அறிஞர்களும், பல வளர்ந்த நாடுகளும் தமிழுக்கான மரியாதையை, தமிழுக்கான முக்கியத்துவத்தை தங்கள்…
-
பெரியாரை எதிர்ப்பது தான் தமிழ்த் தேசியமா? – தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு பதில்!
கேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே? தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்: இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் ‘தமிழன்’ என்ற ஒரு…
-
ஞாயிறுக்கிழமை ஈழப்போராளிகள்
தலைப்பை பார்த்து குழம்பாதீர்கள். விளக்கம் பதிவின் இறுதியில் இருக்கிறது. அந்த விளக்கத்தை தெரிந்துகொள்வதற்கு முன் ஈழத்தமிழ் அரசியலின் வியாபார பின்புலத்தை கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் பிரதான தமிழக அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தாங்களும் குழம்பி, தமிழ்நாட்டு மக்களையும் ஏகத்துக்கு குழப்பிக் கொண்டிருக்க, இதை வைத்து கல்லா கட்டும் வியாபாரிகளும் தமிழக அரசியலில் உண்டு. அப்படியானவர்களில் சில சில்லறை வியாபாரிகள், ஈழப்பிரச்சனையை தெருவோரத்தில் கூறுகட்டி கூவி விற்கும் நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் பதிவே…
-
தஞ்சைக்குள் நஞ்சா ?
தஞ்சை பொன்னி நதி பாய்ந்தோடும் பகுதி.எண்ணிப் பார்த்தால், தற்போதைய நிலையில் கர்நாடகத்தின் கடைக்கண் பட்டால்தான் ஆற்றில் நீர் வருகிறது. இப்போதுதான் காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு கெசட்டில் வெளியாகி இருக்கிறது. இப்போது அரை வெற்றி கிட்டி இருக்கிறது தமிழ் நாடு. எப்போது இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வந்து நாலு கால் பாய்ச்சலில் வாய்க்கால் நிரம்புகிறதோ அப்போதுதான் விவசாயிகளின் வயிறும் நெஞ்சமும் நிறையும்; அப்போதுதான் முழு வெற்றி. அது வரையில் அரசியல் கட்சிகளின் அறிக்கைப் போர் தொடரத்தான் செய்யும். வானமோ பொய்த்தது;…
-
ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்
உலகத்தில் கயிறுகளுக்கு அடுத்து அதிகமாக திரிக்கப்படுவது வரலாறுகள் தான். பொதுவாக ஒவ்வொரு தலைமுறைக்கும் அதன் முந்தைய தலைமுறையின் வரலாறு ‘புனைவு’ கலந்தே புகட்டப்படுகிறது. காலம் காலமாக இது நடப்பதினாலேயே உலகெங்கும் வலம்வரும் பெரும்பாலான எல்லா முக்கியமான விசயங்களை, செய்திகளை, வரலாறுகளைச் சுற்றியும் மாற்றுக் கோட்பாடுகளும் (alternate theory) வலம் வருகின்றன. உண்மைகளை மறைக்க, பொய்களை உண்மையாக்க நூற்றாண்டுகள் எல்லாம் தேவையில்லை, இருபது முப்பது ஆண்டுகள் கிடைத்தாலே போதும். எந்த தகவலையும் சரி பார்ப்பது சுலபமாக இருக்கும் நம்…