Tag: கவிதை
-
பெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…!
பெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…! *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு…! பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் குழந்தையாக மாறிச் சிணுங்குவாய், மக்கள் விழிப்பதென்றால் தள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்…! பள்ளிக்கூடம் சென்று நீ பாடம் படிக்கவில்லை, உனைப்படிக்கவே எங்களுக்கு நேரம் போதவில்லை…! எதுகை,மோனை எதுவும் உன்பேச்சில் என்றுமில்லை, பகுத்தறிவு ஒன்றே நீ பெற்றெடுத்த பிள்ளை…! கருப்புச்சட்டை போட்டுக்கொண்டு…
-
எங்கள் அப்பா
அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும் இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்! அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்! என் அப்பாவா நீ இல்லையப்பா நீ நீ நீ எங்கள் அப்பா! எங்கள் என்பது… அக்கா அண்ணன் நான் மட்டும் இல்லை! எங்கள் என்பது… செஞ்சோலை காந்தரூபன் செல்லங்கள் மட்டும் இல்லை! எங்கள் என்பது……