Tag: பெரியார்
-
சனாதன வெறியர் சத்தியமூர்த்தி அய்யர்!
-கி.தளபதிராஜ் இந்தி எதிர்ப்பு போர் (1937 -38 ) உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்தியை ஆதரித்து உரக்க குரல்கொடுத்தவர் தமிழ்நாட்டு பார்ப்பனர்களின் தலைவராக விளங்கிய சத்தியமூர்த்தி அய்யர்!. 1939 ம் ஆண்டு “பாஷா ஏகாதிபத்தியத்தை” ஆதரித்து சென்னை லயோலா கல்லூரியில் இவர் ஆற்றிய உரையை குடியரசு வெளியிட்டது. “என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால், இந்தியர்களை இந்தி மட்டுமன்றி, சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக படிக்கும்படி செய்வேன்!. சர்க்கார் உத்தியோகங்களுக்கு சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்படுத்திவிடுவேன்!.காந்தியார் உயிருடன்…
-
திசைகாட்டும் கருவிகள்
இந்தி எதிர்ப்பு மாநாடு! ஈரோடு எங்கும் கொடிக்காடு! அகங்காரம் அறுத்தெரிந்த அண்ணா அலங்கார வண்டியில் அமர்ந்திருக்க… தம்பிக்குப் பின்னால் தடியூன்றி தள்ளாடித் தள்ளாடி தாடிக்கிழவன் நடந்து வர… ஊர் மெச்சிய ஊர்வலம் உற்சாகமாய் அரங்கேறிற்று! வழி நெடுகிலும் குழுமியிருந்த கூட்டம்… அய்யாவின் பனித்துளி நிகர்த்த பாசம் பார்த்து கண்ணீர்த்துளிகள் உதிர்த்தன கரைபுரண்ட களிப்போடு! எனக்கு வயது எழுபதைத் தாண்டிற்று! என் முதுமை என் முதுகில் தட்டி… பெட்டிச் சாவியைப் பிள்ளையிடம் கொடு என்று வேண்டிற்று! மாநாட்டு மேடைதனில்…
-
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்களே…
கேள்வி: சிலர் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்களே யாரால் எழுந்தார்களாம்? பதில்: நூலோர்களில் எழுந்திருப்பார்களோ? இனி, குலத்தொழில் செய்யப் போவார்களோ? மானமும் மரியாதையும் மனிதனுக்கு அழகு என்றவரை மறந்துவிட்டு, நான் சொல்வதை நம்பு. நம்பாவிட்டால் நரகம்! என்பவர்களை நம்புவார்களோ? – ‘முகம்’ – ஜூலை 2012 இதழில்
-
திராவிடக் கருத்தியலும், தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகளும்!
– சொ.சங்கரபாண்டி திராவிடக் கருத்தியலின் அடிப்படைக் குறிக்கோள் சமூகநீதி. பெரியார் அதற்குத் தடையாக இருக்கின்றன என்று கருதிய அனைத்து பகுத்தறிவற்ற வரைமுறைகளையும், அமைப்புகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் அறவழியில் அடித்து நொறுக்குமாறு பரப்புரை செய்தார். அதில் தமிழ்மொழி பற்றிய பகுத்தறிவற்ற வறட்டுக்கூச்சல்களும் உள்ளடங்கும். பல நேரங்களில் சிந்தனைக்குட்படுத்தப் படவேண்டும் என்பதற்காகவே அதிர்ச்சியூட்டும் வகையில் தீவிரத்துடன் முன்வைத்தார். வெறுமனே தற்புகழ்ச்சியுடன் உதவாக்கரை கவிதைகளை எழுதிக்குவித்த கவிஞர்கள் தமிழ் மொழிக்குச் செய்த பங்களிப்பு என்ன? மாற்று மொழியினரின் வெறுப்பையும் சந்தேகத்தையுமே சம்பாதித்தது.…
-
சாய்வு இருக்கையில் சாயாத சிங்கம்
சாதாரணமாக நான் ஈஸிசேரில் உட்காருவது கிடையாது.எங்கள் வீடுகளில் விலையுயர்ந்த நாற்காலிகளும் சோபாக்களும் இருக்கின்றதென்றாலும் ஈஸிசேர் (சாய்வு நாற்காலி) கிடையாது. இருந்தாலும் அதை உபயோகிப்பதில்லை. ஏனெனில் நான் முதலாவதாக உட்காரும்போது சாய்ந்துகொண்டு உட்காருவதில்லை. இவையெல்லாம் சுகவாசிகள் அனுபவிக்க வேண்டியவை. நான் அப்படி சாய்ந்து உட்காரும் சுகம் விரும்புபவனல்ல. மேலும் சீட்டில் உட்காரும்போது முழுச்சீட்டில் கூட இல்லாமல் பாதிஅளவு மட்டும் சீட்டில் முன்தள்ளி உட்காருவேன். மேலும் என் வாழ்நாளில் பெரும்பான்மையும் பிரயாணம்தான் அதிகம் என்ற போதிலும் பிரயாணகாலத்தில் அநேகமாய் மோட்டார்…
-
நூல்களின் ஆதிக்கத்தை சுப.வீ. போன்றவர்களின் நூல்களாலேயே ஒழித்துக்கட்ட வேண்டும்
சென்னை, மே 19- நூல்களால் ஏற்பட்ட ஆதிக்கத்தை சுப.வீ. போன்றவர்களின் நூல்களாலேயே ஒழிக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் 5 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் 15.5.2012 அன்று மாலை நடைபெற்றது. அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப் பிட்டதாவது: மிகுந்த எழுச்சியோடு தேவையான நேரத்தில், தேவைப்படும் கருத்துகளை சுவையான தகவல் களஞ்சியங்களாகவும், சுயமரியாதைச் சூரணங்…