Tag: பெரியார்
-
”தமிழக அரசியல்” எனும் தரங்கெட்ட….!
பெண்களையும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று சொன்ன கிருஷ்ணனுக்கு விழா கொண்டாடலாமா? என்று அன்மையில் அறிவார்ந்த வினாவை எழுப்பினார் திராவிடர்கழக தலைவர் வீரமணி!. தமிழக அரசியல் எனும் தரங்கெட்ட ஒரு இதழில் அதற்கு நேரிடையாக பதிலளிக்க இயலாத ஒரு அனாமதேயம் வீரமணியாரை கொச்சைப்படுத்தியுள்ளது. அதோடு “பறச்சிகளும், பள்ளச்சிகளும் ரவிக்கைப்போட ஆரம்பித்ததால்தான் துணிவிலை ஏறிவிட்டது” என்று பெரியார் கூறியதாக துணிச்சலாக ஒரு பொய்யை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. 1962ல் சட்டசபை தேர்தலில் காமராஜரை முழுமையாக ஆதரித்தார் பெரியார். பட்டுகோட்டையில்…
-
திராவிட மாயை(!?)
ஒரு இனம் உலகெங்கும் உள்ள மொழியியல், தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின் தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு அதன் முக்கியத்துவமும் பெருமையும் தெரிகிறதோ இல்லையோ உலக அறிஞர்களும், பல வளர்ந்த நாடுகளும் தமிழுக்கான மரியாதையை, தமிழுக்கான முக்கியத்துவத்தை தங்கள்…
-
’மானமும் அறிவும்’ – தெளிவற்றவர்களுக்கு ஒரு விளக்கம்!
பெரியார் சொன்ன “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்ற கருத்தை தோழர். பரிமளராசன் அவர்கள் தனது முகநூலில் பதிந்திருந்தார். அதை கண்டு சகிக்க முடியாமல், தலைச்சிறந்த தத்துவ மேதையாக தன்னை கருதிக்கொள்ளும் ஒருவர் (கிருஷ்ணா தமிழ் டைகர்), // மானம் என்றெல்லாம் எதுவும் தனியா இல்லை தோழர்! மானம் என்று சொல்வதே ஒருவகை உளவியல் ரீதியான அறிவுதான். அறிவும், மானமும் வேறு வேறல்ல. பள்ளிகொடத்துல படிச்சு மனப்பாடம் செய்றத ஒரு வேள அறிவுன்னு எல்லாரும் நெனைக்கிறமாதிரி நெனச்சு மானம்,…
-
அன்னை-யார்?
காங்கிரசில் ஓட்டுப் பிச்சை கேட்பவர்களுக்கு வேண்டுமானால், திருமதி சோனியா அவர்கள் அன்னையாக இருக்கலாம். அக்ரஹார தி.மு.க வான அ.தி.மு.க-வில் வேண்டுமானால், சுயமரியாதையும் தன்மானமும் இழந்த அடிமைகள் இருப்பதால், அதனையும் அதன் கொள்கையையும்(!) ஆதரிக்கவும் படித்த பாமரர்களும்(!) இருப்பதால், செல்வி ஜெயலலிதா அவர்கள் ‘அம்மா’வாக இருக்கலாம். ஆன்மிக போதையில் சிக்கித் தவிக்கும், சிற்சிறு மாய எண்ணத்தில் முழ்கித் தவிக்கும் மானிடர் யார்க்கும் வேண்டுமானால் சாராதா தேவி அவர்களோ அமிர்தானந்தமயி அவர்களோ அன்னையாக இருக்கலாம். உண்மையில், சமுதாயத்தின் சமத்துவத்துக்கு பகுத்தறிவு வளர்ச்சிக்கு பெண் உரிமைக்கு வித்திட்ட அன்னை யார்? சில காலங்களுக்கு…
-
பொங்கட்டும் இனஉணர்வுப் பொங்கல்!
பொங்கல் விழா என்றும் உழவர் திருநாள் என்றும் தைத்திருநாள் என்றும் அழைக்கப்படும் தமிழ்ப்புத்தாண்டு தமிழினத்தின் கலாச்சாரப் பெருவிழா! தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப்பண்ணித் தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்றார் புரட்சிக்கவிஞர்! தமிழரின் கலாச்சார பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். தமிழன் கலாச்சாரம், பண்பு,…
-
திராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா?
“பார்ப்பன கிரிக்கெட் வீரர் ராகுல், “திராவிட்” என்று பெயர் வைத்திருக்கிறார்.எனவே திராவிடர் என்ற சொல் பார்ப்பனரையே குறிக்கும்”என்று தோழர் மணியரசன் கூறியுள்ளார்! தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இன்றளவும் பெண்குழந்தைகளுக்கு “பாப்பாத்தி” என்றும் ஆண் குழந்தைகளுக்கு “அய்யர்” என்றும் பெயர் சூட்டியுள்ளதை பார்த்திருக்கிறோம். அவர்ககைளை எல்லாம் மணியரசன் ஆரியர் என்று கூறுவாரா? “திராவிட்” என்பதும் “திராவிடர்” என்பதும் ஒன்றா? “சைதாப்பேட்டை”யை ஆங்கிலத்தில் “சைதாபேட்” என்று கூறுவது போல் “திராவிடம்””திராவிட்” என்பது இடத்தை குறிக்கும். இந்திய தேசிய கீதப் பாடலில் வரும்…
-
நவம்பர் 13
இன்று இருபதாம் நூற்றாண்டின் நரகாசுரனுக்கு தமிழ் மண்ணின் தேவிகள் பெரியார் எனப் பெயர் சூட்டிய நாள். அறியாராய் இருந்த தமிழர்களை, ஆரியம் சிறியாராய் அவமதித்த திராவிடர்களை, எதுவும் தெரியாராய் ஆக்கிட சூழ்ச்சி புரிவோரின் ஆணவத்தைச் சுட்டெரித்திடப் பகுத்தறிவுப் பாடம் சொல்லிய சூரியனுக்குப் `பெரியார்’ எனப் பட்டம் சூட்டியது சரிதானே என்று உலகம் சொல்கிறதே இன்று….! – சம்பூகன்