Tag: தந்தை பெரியார்
-
ஏன் பார்ப்பனர்களை இன்னமும் விமர்சிக்க வேண்டியதிருக்கிறது?
பார்ப்பனியத்தின் மேலான திராவிடத்தின் தற்காப்புத் தாக்குதல் ஆரம்பித்து நூறு வருடங்கள் ஆகியுள்ள சூழ்நிலையில், திராவிடத்தின் துணைகொண்டு சமூகநீதி சட்டங்களால் மேல்தட்டுக்கு குடியேறிவிட்ட தமிழர்கள் சிலருக்கு, ஒருவிதமான சலிப்பு சமீபகாலமாக ஏற்பட்டிருக்கிறது. “ஏன், இன்னும் பார்ப்பனர்களையே தாக்குகிறீர்கள்?” என்ற கேள்வி அந்த சலிப்படைந்துவிட்ட மக்களுக்கு அடிக்கடி எழுகிறது. எந்த கொள்கையையும் அடுத்த தலைமுறையிடம் கடத்தும் போது அக்கொள்கைக்கான சமகால தேவையையும் உணர்த்தினாலேயொழிய அக்கொள்கையை ஏற்கும் பக்குவம் அத்தலைமுறையினருக்கு ஏற்படாது. ஆகவே சலிப்படைந்திருக்கும் சிலரின் கேள்விகளை நியாயமான கேள்விகளாகவே கொண்டு…
-
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு!
கி.தளபதிராஜ் அன்மையில் ஒருவர் தனது இணையதள முகநூலில் ஒரு மகமதிய சாமியாரை பெரியாரோடு தொடர்பு படுத்தி “பெரியாரே ஏற்றுக் கொண்ட ஆண்டவர்தான் சாலை ஆண்டவர் போல! அல்லது திருப்பி அடிக்காதவர்களை தாக்குவது தான் பெரியாரின் வீரம் போல! என்று குறிப்பிட்டு வழக்கம் போல பெரியாரை கொச்சைப்படுத்த முனைந்திருந்தார். 1930 ல் இராமநாதபுரத்திற்கடுத்த திருப்பாலைக்குடியில் பிரபலமாகியிருந்த இந்த சாமியாரை பற்றி பெரியாரின் குடியரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரையை
-
திசைகாட்டும் கருவிகள்
இந்தி எதிர்ப்பு மாநாடு! ஈரோடு எங்கும் கொடிக்காடு! அகங்காரம் அறுத்தெரிந்த அண்ணா அலங்கார வண்டியில் அமர்ந்திருக்க… தம்பிக்குப் பின்னால் தடியூன்றி தள்ளாடித் தள்ளாடி தாடிக்கிழவன் நடந்து வர… ஊர் மெச்சிய ஊர்வலம் உற்சாகமாய் அரங்கேறிற்று! வழி நெடுகிலும் குழுமியிருந்த கூட்டம்… அய்யாவின் பனித்துளி நிகர்த்த பாசம் பார்த்து கண்ணீர்த்துளிகள் உதிர்த்தன கரைபுரண்ட களிப்போடு! எனக்கு வயது எழுபதைத் தாண்டிற்று! என் முதுமை என் முதுகில் தட்டி… பெட்டிச் சாவியைப் பிள்ளையிடம் கொடு என்று வேண்டிற்று! மாநாட்டு மேடைதனில்…
-
பெரியாரின் மீது சேறள்ளி வீச இன்னுமொரு கை..
1968 ஆம் ஆண்டு சத்தியவாணி முத்துவின் மகளும் அப்போதைய மேயர் வேலூர் நாராயணன் மகனும் திருமணம் செய்துக்கொள்ள விரும்ப, வேலூர் நாராயணன் சத்தியவாணியின் சாதியை சொல்லி தன் மகனிடம் விமர்சித்த சூழலில், நாராயணன் பிறந்தநாள் விழாவில் பேச அழைக்கப்பட்ட பெரியார் அச்சம்பவத்தை மனதில் கொண்டு காட்டமாக அவ்விழாவில் பேசினார்.பெரியாரின் கடைசி பேட்டியிலும் கூட நிரப்பப்படமால் இருக்கும் காவலர் பணி முழுமைக்கும் தலித் மக்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டுமெனக் கூறுகிறார். # சற்றுத்தாமதமாகவே கார்ட்டுனிஸ்ட் பாலா வரைந்திருந்திருக்கும் இந்த கார்ட்டூனைப்…
-
திராவிடக் கருத்தியலும், தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகளும்!
– சொ.சங்கரபாண்டி திராவிடக் கருத்தியலின் அடிப்படைக் குறிக்கோள் சமூகநீதி. பெரியார் அதற்குத் தடையாக இருக்கின்றன என்று கருதிய அனைத்து பகுத்தறிவற்ற வரைமுறைகளையும், அமைப்புகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் அறவழியில் அடித்து நொறுக்குமாறு பரப்புரை செய்தார். அதில் தமிழ்மொழி பற்றிய பகுத்தறிவற்ற வறட்டுக்கூச்சல்களும் உள்ளடங்கும். பல நேரங்களில் சிந்தனைக்குட்படுத்தப் படவேண்டும் என்பதற்காகவே அதிர்ச்சியூட்டும் வகையில் தீவிரத்துடன் முன்வைத்தார். வெறுமனே தற்புகழ்ச்சியுடன் உதவாக்கரை கவிதைகளை எழுதிக்குவித்த கவிஞர்கள் தமிழ் மொழிக்குச் செய்த பங்களிப்பு என்ன? மாற்று மொழியினரின் வெறுப்பையும் சந்தேகத்தையுமே சம்பாதித்தது.…
-
அடிகளார் காலில் பெரியார் விழுந்தாரா?
குன்றக்குடி அடிகளார் மடத்தை சார்ந்த ஒருவர் தந்தை பெரியாரின் நெற்றியில் அவர்களது வழக்கப்படி திருநீறு பூசினார். அந்த சாம்பலை தந்தை பெரியார் துடைத்துகொண்டார் என்பது மட்டுமே இதுவரை செய்தி. தற்போது திருச்சி செல்வேந்திரன் அவர்கள் எழுதியுள்ள நூலில் இருந்து பெறப்பட்டதாக வினவு தளத்தில் ஓரு புதிய கதையை கட்டுரையாக பதிந்துள்ளார். அதை ஆதாரம் என்று சொல்லி சிம்ம வாகனி என்ற ஒருவர் முகநூலில் வாதாடிக்கொண்டிருக்கிறார். சரி செல்வேந்திரன் அவர்கள் எழுதியுள்ளதாக வந்துள்ள செய்தி என்ன? திருச்சியில் தந்தை…
-
சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ்
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 18-5-2012 அன்று தனது கட்சியின் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறது.பெரியாரை சுற்றி சுழன்று கொண்டிருக்கும் தமிழகஅரசியல்களத்தில் புதியதாக அரசியல் பண்ண புறப்பட்டிருக்கும் இந்த கொள்கை சீமான்கள் திராவிட இயக்கத்தையும்-பெரியாரையும்கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறனர். திராவிடம் என்ற ஒரு இனம் எங்கிருந்தோ குதித்தது போலவும் அவர்கள் தமிழர்களை நூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வருவதாகவும் புதுக்கரடி விட்டிருக்கின்றனர்! தமிழையும் தமிழினத்தையும் திராவிட இனம் திட்டமிட்டு அழித்து விட்டதாக கூறுகிறனர். இந்தியாவில்…