Tag: தந்தை பெரியார்
-
‘தி இந்து’ பத்திரிக்கை செய்தி வெளியிடுவதில் காட்டும் நேர்மையின் லட்சணம்!
பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் நேர்க்காணலை சமஸ் அவர்கள் தி இந்துவில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு முக்கியமான அரசியல் கேள்வி கேட்கிறார். ஏன் அரசியல் கட்சிகள் பகிர்ந்துகொள்ளவில்லையா? என்பதே அந்த கேள்வி. அதற்கான அற்புதம் அம்மாளின் பதில் ‘தி இந்துவில்’ வெளிவந்துள்ளது. அந்த பதிலுக்கான இறுதிப்பகுதி, “நெடுமாறன், நல்லகண்ணு, தியாகு, வைகோ, சீமான் இவங்கெல்லாம் பெரிய ஆதரவைத் தந்திருக்காங்க. எல்லாத்துக்கும் மேல இப்போ முதல்வர் அம்மா என் பிள்ளையை மீட்டுத்தர்றேன்னு சொல்லிட்டாங்களே…” என்று முடிகிறது. அந்த பேட்டியில்…
-
மத அழைப்பாளரா பெரியார்? கி.தளபதிராஜ்
மானுட சமூகத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றுவதே தன் வாழ்நாள் பணியாய்க் கொண்டு, கடவுள் மத சாதித் தடைகளை தகர்த்தெரிந்து சமத்துவசமுதாயம் படைக்க, தள்ளாத வயதிலும் மூத்திரச்சட்டியைச் சுமந்தபடி சுற்றிச்சுற்றி தொண்டாற்றிய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் உலகத் தலைவர் பெரியார்!. மானுடப்பற்றைத் தவிர வேறு எதன்மீதும் எனக்குப் பற்று இல்லை என பறை சாற்றியவர்!.சமூக நீதிக்குரல் எழுப்பி 1925ம் ஆண்டு காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார், சாகும் தருவாயிலும் தான்…
-
திராவிட மாயை(!?)
ஒரு இனம் உலகெங்கும் உள்ள மொழியியல், தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின் தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு அதன் முக்கியத்துவமும் பெருமையும் தெரிகிறதோ இல்லையோ உலக அறிஞர்களும், பல வளர்ந்த நாடுகளும் தமிழுக்கான மரியாதையை, தமிழுக்கான முக்கியத்துவத்தை தங்கள்…
-
குலுங்கிக் குலுங்கி அழுத காமராஜர்!
தந்தை பெரியார் அவர்கள் மறைந்த இரண்டு நாட்களுக்கு பிறகு தனது இல்லத்தில் கண் மூடி படுத்திருக்கிறார் பெருந்தலைவர் காமராசர். தூங்குகிறார் என நினைத்து அருகில் அமைதி காக்கிறார் தோழர் (பெயர் நினைவில் இல்லை). காமராசரின் கண் இமை ஓரத்தில் நீர் வடிகிறது. சில நிமிட அமைதி!. படுக்கையை விட்டுத் திடீரென எழுந்து ஆக்ரோஷமாக சத்தமிடுகிறார் காமராசர். யார் இருக்கான்னேன்? இனி எந்த நாதி இருக்குன்னேன்? தமிழனுக்காக குரல் கொடுத்த அந்தக்குரலும் போய்விட்டதே என்று சொல்லி குலுங்கி குலுங்கி…
-
அக்கிரகாரத்தில் பெரியார்!?
தமிழ் மையம் நடத்திய ’சங்கம் 4’ சொற்பொழிவில் `அக்ரகாரத்தில் பெரியார்’ என்ற தலைப்பிலான பி.ஏ.கிருஷ்ணன் உரை குறித்து (பத்ரி ஷேஷாத்ரி எழுத்திலிருந்து) குறிப்பிடத்தக்க ஒரு செய்தி – ‘பெரியார் வன்முறையாளர் அல்ல‘ என்பதை இப்போதுதான் முதலில் பார்ப்பனர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். தவிர, பி.ஏ.கிருஷ்ணனின் உரையில் “1967 ல் தி.மு.க.ஆட்சியைப் பிடிக்கும் வரை பெரியாருக்கு அரசியல் செல்வாக்கு இல்லை” என்று கூறியிருப்பது முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் செயல். இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புளுகு – அவாளுக்கே உரிய சிண்டு முடியும்…
-
நவம்பர் 13
இன்று இருபதாம் நூற்றாண்டின் நரகாசுரனுக்கு தமிழ் மண்ணின் தேவிகள் பெரியார் எனப் பெயர் சூட்டிய நாள். அறியாராய் இருந்த தமிழர்களை, ஆரியம் சிறியாராய் அவமதித்த திராவிடர்களை, எதுவும் தெரியாராய் ஆக்கிட சூழ்ச்சி புரிவோரின் ஆணவத்தைச் சுட்டெரித்திடப் பகுத்தறிவுப் பாடம் சொல்லிய சூரியனுக்குப் `பெரியார்’ எனப் பட்டம் சூட்டியது சரிதானே என்று உலகம் சொல்கிறதே இன்று….! – சம்பூகன்
-
மனித மலமும், புளியந்தழையும்!
– கி.தளபதிராஜ் சுமார் 55 வருடங்களுக்கு முன்னர் மயிலாடுதுறை கண்ணாரத்தெரு பகுதியில் “ராமவிலாஸ்” (பிராமனாள் கபே) என்கிற ஹோட்டல் இருந்தது.அப்போது திராவிடர் கழகத்தில் அண்ணா இருந்த நேரம்.அண்ணாதுரை வாலிபர் சங்கம் என்ற அமைப்பு தீவிரமாக இருந்தது.ஒருநாள் ராமவிலாஸ் ஹோட்டல் உரிமையாளருக்கும் அண்ணாதுரை வாலிப சங்கத்தைச்சேர்ந்த ஒரு இளைஞருக்கும் ஏதோ பேச்சு வார்த்தை முற்றி ரகளையில் முடிந்தது. அண்ணாதுரை வாலிபர் சங்கத்தில் நாங்கள் குடியிருந்த கேணிக்கரை பகுதியில் வசித்துவந்த டைலர் சொக்கன் பிரபலமானவர்.சம்பவம் நடந்த அன்று இரவு டைலர் சொக்கன்…