Tag: ஜெயலலிதா
-
அன்புள்ள மக்களுக்கும், திருட்டு நடுநிலையாளர்களுக்கும்..
அன்புள்ள மக்களுக்கும், திருட்டு நடுநிலையாளர்களுக்கும்.. மின்சார டெபாசிட் பணத்தை எவனும் எக்காலத்திலும் மின்சார வாரியத்திடம் திருப்பிக் கேட்கப்போவதில்லை. அதேநேரம் எந்த வீட்டுக்காரனும் மின்கட்டணம் கட்டவே கட்டாமல் மின்சார வாரியத்தை ஏய்க்கவும் முடியாது. ஏனெனில் மின்சார விற்பனை என்பது மின்சாரவாரியத்திடம் மட்டுமே உள்ள (monopoly) ஏகபோக வியாபாரம். ஏற்கனவே மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி அந்த சுமையையே மக்கள் சுமக்கத் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் வைப்புத் தொகையையும் (deposit) உத்தராகண்ட் வெள்ளம் போல கண்டபடி ஏற்றி ஒரு பட்டப்பகல் கொள்ளையை செவ்வனே…
-
ஜெ.வின் தமிழ்நாட்டுத் துரோகம்!
தமிழர்களின் 150 ஆண்டுக் கனவான சேது சமுத்திரத்திட்டத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என ஜெ.யின் அரசு மனு போட்டுவிட்டது. எந்த வளமும் இல்லாத வானம் பார்த்த பூமியான தென் மாவட்ட மக்களின் வாழ்வில், பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டமாகத்தான் சேதுத் திட்டத்தை அன்றைய தலைவர்கள் முன் மொழிந்தனர்.குறிப்பாக தென் மாவட்டத்தில் பிறந்த பெருந்தலைவர் காமராசர் இத்திட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளார்.பேரறிஞர் அண்ணா தி.மு.க.தொடங்கிய காலத்தில் இருந்து வலியுறுத்தியுள்ளார். தொழில் வளம் இல்லாததால் தென் மாவட்டங்களில் ஜாதிய உணர்வும் மேலோங்கும் நிலை எந்நாளும்…
-
ஆ.வி மறந்தது/ மறைத்தது/ சொல்லாமல் விட்ட செய்திகள்
ஆனந்த விகடன் இந்த வாரம் அப்பட்டமாக ஜெ.புராணம் பாடியிருக்கிறது; இன்னும் ஏதாவது கெட்ட பெயர் வாங்காமல் இருந்தால் (அவ்வளவு நம்பிக்கை) இப்போதைய சூழலில் ஜெ ஹோ… ஜெயா ஹோவாம். டெசோ போராட்டத்தின் எதிரொலிதான் ஜெ.விடம் மாற்றம் என்ற தற்காலிக நாடகம். இதைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாத ஆ.வி.யின் நடுநிலை மீண்டும் நாறியிருக்கிறது. மாணவர் போராட்டத்தை ஆதரித்தார் என்று அப்பட்டமான புளுகு. மாணவர் போராட்டத்தை பல வழிகளிலும் ஒடுக்கியவர் ஜெ.போலீசை விட்டுத் தக்கியவர்; மாணவர்களின் சுயவிவரங்களைக் கேட்டு…
-
ஜெயலலிதாவைக் காப்பாற்றத் துடிக்கும் விகடனுக்கு சில கேள்விகள்!
மிஸ்டர் புளுகாரின் புலனாய்வு லட்சணம் இதுதான்! ”மாணவர்களைத் தூண்டுகிறாரா ஜெ.?, உளவு பார்க்க வந்த டெல்லி உள்துறை” – இது இன்று காலை வெளியான ஜூனியர் விகடன் (20.3.2013) இதழின் அட்டைப்பட்த் தலைப்பு. `மாணவர் போராட்டம் தீவிரம்!கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு காலவரையற்ற விடுமுறை! -இது இன்றைய நாளிதழ்களில் (16.3.2013) வெளிவந்துள்ள முதன்மைச் செய்தி. ஜூ.வி.யின் கற்பனையில் உதித்த சூப்பர் ஐடியாவின் படி மாணவர்களைத் தூண்டிய ஜெயலலிதாதான், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். இநத இரண்டு செய்திகளையும் படிக்கும்…