Category: திரை
-
சைவம்
இயக்குனர் விஜய்யின் சைவம் திரைப்படம் பார்த்தேன். படத்தின் மூலக்கதை அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறியிருப்பதைத் தவிர்த்து அனைத்தையும் ரசிக்கலாம். சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலைத் திருவிழாவில் பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அது குழந்தை தமிழ், ஆசையாக வளர்த்துவரும் சேவல். தன் சேவல் பலி கொடுக்கப்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் தமிழ் தன் அம்மாவிடம் வைக்கும் கேள்விகள் பகுத்தறிவுச் சாட்டை. சாமிக்கு ஏம்மா நம்ம சேவலைப் பலி கொடுக்கணும்? சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறாருல்ல? சாமி அப்படிக் கேட்டுச்சாம்மா? சாமி கேட்காது. சாமி…
-
தலைவாழை இலை போட்டு அதில் கொஞ்சம் மலம் வைத்து…
பாலாவின் பரதேசி படம் பார்த்தேன். செழியனின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும் அற்புதக் கலவையாய் தலைவாழை இலைபோட்டு அருமையான விருந்து படைத்திருந்தார் பாலா! விருந்தை சுவைக்க முற்பட்டபோதுதான் இலையின் ஓரத்தில் மலம் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பாலாவிற்கு என்னவாயிற்று? கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்கு பெருமளவு கல்வி வழங்கியது கிறுத்துவ மிஷன்கள்தான் என்றால் மிகையாகாது. பிளேக் நோய் பரவியபோது மக்களைக் காப்பாற்ற பெருமளவு கிறுத்துவ பாதிரியார்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அந்தத்தொண்டில் பலர் மதம் மாறியிருக்கலாம்.மாற்றப்பட்டும் இருக்கலாம். ஆனால் இந்துத்துவாவின் ஊதுகுழலாய் மாறி பாலா இப்படி ஒரு…