Category: ஈழம்
-
ஈழ விடுதலைப் போர்
ஈழ விடுதலைப் போரில் தோல்வியைத் தழுவி கூண்டோடு அழிந்து போன புலிகளும் சரி, அவர்களோடு கடைசி வரை இருந்த மக்களும் சரி, ஒரு தீவிர மனநிலையில் இருந்தார்கள், அவர்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் அல்ல, அவர்களுடைய வாழ்க்கை முறை போருக்குப் பழகிப் போயிருந்தது, சாவை மிக நெருக்கத்தில் இருந்து பார்த்தவர்கள் அவர்கள். பல ஈழ நண்பர்களோடு பேசிப் பார்த்திருக்கிறேன், அவர்கள் மரணம் குறித்த அச்சம் அதிகம் இல்லாத ஒரு போர்ச் சூழலைப் பழகிக் கொண்டிருந்தார்கள், அவர்கள் வாழ்க்கை…
-
இரட்டை அளவுகோல் ஏன்?
ஈழம் தொடர்பில் முகநூலில் திமுக சார்பினர் ஒருசாரார் விடுதலைப்புலிகளையும் அதன் தலைவரையும் விமர்சித்து எழுதியதை நானும் பார்த்தேன்! எத்தனை பேர் புலிகளை விமர்சித்து எழுதினார்களோ அதைவிட அதிகமான திமுகவினர் புலி ஆதரவாளர்கள் என்பதையும் நான் அறிவேன். ஆனால் இந்த முகநூல் எழுத்துகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு சிலர் திமுக என்னும் மொத்த அமைப்பே ஈழத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிரானது என்பதுபோல் எழுதுகின்றனர். திமுகவில் உள்ள சிலர் புலிகளை எதிர்ப்பதாலேயே அது புலி விரோதக் கட்சி என்றால், அதே திமுகவில் உள்ள…
-
“கருணாநிதி ஒரு துரோகி’ என்பது திட்டமிட்ட சதி – ஓர் ஈழத் தமிழரின் கருத்து
தமிழர்கள் உலகில் பத்துக் கோடி என்று சொல்வார்கள். சீமானின் மரபணு சோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்து, மற்றவர்களை கழித்து விட்டால் கூட, ஒரு ஆறு கோடி வரும். எப்படிப் பார்த்தாலும் உலகில் தமிழர்கள் ஒரு பெரிய இனம். பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றை பேசுகின்ற இனம். அறிவு வளம் மிக்க பலரைக் கொண்டிருக்கும் ஒரு இனம். இந்த இனம் போரில் எப்படித் தோற்றது என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். போர் முடிந்த 7 ஆண்டுகள் ஆன…
-
பேசநா இரண்டுடையாய் போற்றி!
ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலை குறித்து கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார், கபட நாடகம் ஆடுகிறார் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கீழ்கண்டவற்றையும் பலர் படித்து தெரிந்துகொள்ளவேண்டும், தெரிந்து அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். “ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உய்ரநீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும்…
-
மாற்றம் ஒன்றே மாறாதது! அற்புதம் அம்மாளும் அதற்கு விதிவிலக்கல்ல!
அற்புதம் அம்மாளின் நேர்காணல் தி இந்துவில் வந்திருக்கிறது. திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க ஆகிய இயக்கங்கள் குறித்த அவரது கருத்துகளை வேதனையோடு பகிர்ந்துள்ளார். “ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை பெறுபவர்களை வைத்து கலைஞருக்கு எதிராக பேட்டி கொடுக்கவும், பிரச்சாரம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படலாம், அவர்களை அரசியலுக்கு பயன்படுத்த முயற்சிக்கலாம்” என்று இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பதிந்த கருத்துகளை படித்து சிலர் வருத்தப்பட்டனர். அவர்கள் தற்போது அற்புதம் அம்மாளின் பேட்டியை படித்து ஓரளவிற்கு புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.…
-
ஞாயிறுக்கிழமை ஈழப்போராளிகள்
தலைப்பை பார்த்து குழம்பாதீர்கள். விளக்கம் பதிவின் இறுதியில் இருக்கிறது. அந்த விளக்கத்தை தெரிந்துகொள்வதற்கு முன் ஈழத்தமிழ் அரசியலின் வியாபார பின்புலத்தை கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் பிரதான தமிழக அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தாங்களும் குழம்பி, தமிழ்நாட்டு மக்களையும் ஏகத்துக்கு குழப்பிக் கொண்டிருக்க, இதை வைத்து கல்லா கட்டும் வியாபாரிகளும் தமிழக அரசியலில் உண்டு. அப்படியானவர்களில் சில சில்லறை வியாபாரிகள், ஈழப்பிரச்சனையை தெருவோரத்தில் கூறுகட்டி கூவி விற்கும் நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் பதிவே…
-
ஜெயலலிதாவைக் காப்பாற்றத் துடிக்கும் விகடனுக்கு சில கேள்விகள்!
மிஸ்டர் புளுகாரின் புலனாய்வு லட்சணம் இதுதான்! ”மாணவர்களைத் தூண்டுகிறாரா ஜெ.?, உளவு பார்க்க வந்த டெல்லி உள்துறை” – இது இன்று காலை வெளியான ஜூனியர் விகடன் (20.3.2013) இதழின் அட்டைப்பட்த் தலைப்பு. `மாணவர் போராட்டம் தீவிரம்!கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு காலவரையற்ற விடுமுறை! -இது இன்றைய நாளிதழ்களில் (16.3.2013) வெளிவந்துள்ள முதன்மைச் செய்தி. ஜூ.வி.யின் கற்பனையில் உதித்த சூப்பர் ஐடியாவின் படி மாணவர்களைத் தூண்டிய ஜெயலலிதாதான், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். இநத இரண்டு செய்திகளையும் படிக்கும்…