Author: Kanimozhi

  • திராவிடநாடு

    திராவிடநாடு

    கேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு என பேசுவதற்கு பின்னால் இருக்கும் செய்தி மிகப் பெரியது. அந்த செய்தியை இந்திய ஒன்றியத்தின் அரசியல் அறிவுஜீவிகள் கொஞ்சம் அதிர்ச்சியோடுதான் பார்த்துக்கொண்டிருப்பார்கள். சோவியத் ரஷ்யா உருவாக்கப்பட்ட போது, உருவாக்கப்படும் முறையில் லெனினுக்கு உடன்பாடில்லை என்று படித்திருக்கிறேன். பிற்காலத்தில், கோர்பசேவ் கொண்டுவந்த…

  • ரைம்ஸ்

    ரைம்ஸ்

    அமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் தானே அந்த மண்ணின் பூர்வகுடிகள், அவர்கள் இருப்பது இயல்பு தானே?” எனச்சொல்வது வாதத்திற்கு சரியானதாக இருந்தாலும், “கறுப்பர்களுக்கு வீடு இல்லை” என்று பலகை வைக்குமளவு அவர்கள் அந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் என்பதால் வலுக்கட்டாயமாக அந்த மக்களின் இருப்பை…

  • பெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…!

    பெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…! *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு…! பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் குழந்தையாக மாறிச் சிணுங்குவாய், மக்கள் விழிப்பதென்றால் தள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்…! பள்ளிக்கூடம் சென்று நீ பாடம் படிக்கவில்லை, உனைப்படிக்கவே எங்களுக்கு நேரம் போதவில்லை…! எதுகை,மோனை எதுவும் உன்பேச்சில் என்றுமில்லை, பகுத்தறிவு ஒன்றே நீ பெற்றெடுத்த பிள்ளை…! கருப்புச்சட்டை போட்டுக்கொண்டு…

  • தன்னையறியாமல் சாதியம் வெளிப்படுமா?

    தன்னையறியாமல் சாதியம் வெளிப்படுமா?

    தன்னையறியாமல் சாதியம் வெளிப்படுமா? வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. பெரியாரை, பாபாசாகேபை இன்னும் பல சமூக சீர்திருத்தவாதிகளை வாசிப்பதாலேயே நாம் “சாதியத்தை” விட்டுவந்துவிட்டோம் என்றாகிவிடாது. அதை விட்டு வர, நாம் தொடர்ந்து சுயபரிசோதனைகளையும், சுய விமர்சனங்களையும் செய்துக்கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது. உதாரணத்திற்கு, நான் தொடர்ந்து இந்திய/ தமிழக தலைவர்களை பற்றி…