Author: dravidankural
-
அரசியல் என்பது வெறும் வெற்றி தோல்விகளால் முடிவு செய்யப்படுகிற ஒரு புறப்பொருள் அல்ல
அரசியல் என்பது வெறும் வெற்றி தோல்விகளால் முடிவு செய்யப்படுகிற ஒரு புறப்பொருள் அல்ல, அது ஒரு உயிரியக்கக் கோட்பாடு, கட்சிகள், தலைவர்கள் இவற்றை எல்லாம் தாண்டி ஒவ்வொரு தனி மனிதனின் மனதில் இருந்தும் உருவாக்கப்படும் ஒரு வாழ்வியக்க ஆற்றல், தனக்குள் உருவகித்துக் கொண்ட பல்வேறு சிந்தனைகளின் கூட்டுத் தொகுப்பை உள்ளீடு செய்து சமூக இயக்கத்தோடு தனி மனிதர்கள் இணையும் ஒரு அளப்பரிய வெளி அது. கடந்த மூன்று மாதங்களாக தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு மானுடனின் ஆழ்மனமும் இசைந்து…
-
தோல்வி அல்ல இது
தோல்வி அல்ல இது, உயிர்ப்போடும், கொண்ட கொள்கைகளோடும் பீனிக்ஸ் பறவையாகத் தான் எழுந்து வந்திருக்கிறோம், அதிமுகவுக்கு ஒரே எதிரிதான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பல எதிரிகள். அதிகாரப் பசியும், துரோக வரலாறும் கொண்ட சகுனிகள் மறைமுகமாக பாசிச ஜெயாவுக்கு முட்டுக் கொடுத்த வாக்குச் சிதறல், மதவாத முகமான ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எல்லா இடத்திலும் ஒரு நாற்காலியைப் போட்டு வளர்க்கும் முதலாளித்துவ ஊடகங்கள், சாதிய ஆற்றல்களை ஒன்றிணைத்து சமூகத்தைப் பிளவு செய்த ஒற்றைச் சாதி ஆதிக்க ஆற்றல்கள். அடக்குமுறையை…
-
திராவிட கட்சிகள் ஒன்றும் செய்யவில்லையா?
தமிழகத்தில் திராவிடர் இயக்கம் சாதித்தது மலையளவு. அவற்றை ஒரே கட்டுரையில் சொல்லிவிட முடியாது என்றாலும் ஒரு குறிப்பிடத்தகுந்த சாதனையை மட்டும் இந்த தேர்தல் நேரத்தில் அவசியம் சொல்லியாக வேண்டும். தமிழகத்துக்கு திராவிடக் கட்சிகள் எதையுமே செய்யவில்லை என்ற சிலரின் கற்பனாவாதத்தை முறியடிக்க வேண்டியது அவசியம். கேவலம் ஒரு தேர்தல் வெற்றிக்காக, 50 ஆண்டுகள் தமிழகத்தை திராவிடக் கட்சிகள் சீரழித்துவிட்டன என்று ஒரு பொய் மீண்டும் மீண்டும் பரப்பப்படுகிறது! மனிதவள மேம்பாடு தொடர்பாக ஐநா சபை கடந்த ஆண்டு…
-
ஈழ விடுதலைப் போர்
ஈழ விடுதலைப் போரில் தோல்வியைத் தழுவி கூண்டோடு அழிந்து போன புலிகளும் சரி, அவர்களோடு கடைசி வரை இருந்த மக்களும் சரி, ஒரு தீவிர மனநிலையில் இருந்தார்கள், அவர்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் அல்ல, அவர்களுடைய வாழ்க்கை முறை போருக்குப் பழகிப் போயிருந்தது, சாவை மிக நெருக்கத்தில் இருந்து பார்த்தவர்கள் அவர்கள். பல ஈழ நண்பர்களோடு பேசிப் பார்த்திருக்கிறேன், அவர்கள் மரணம் குறித்த அச்சம் அதிகம் இல்லாத ஒரு போர்ச் சூழலைப் பழகிக் கொண்டிருந்தார்கள், அவர்கள் வாழ்க்கை…
-
இரட்டை அளவுகோல் ஏன்?
ஈழம் தொடர்பில் முகநூலில் திமுக சார்பினர் ஒருசாரார் விடுதலைப்புலிகளையும் அதன் தலைவரையும் விமர்சித்து எழுதியதை நானும் பார்த்தேன்! எத்தனை பேர் புலிகளை விமர்சித்து எழுதினார்களோ அதைவிட அதிகமான திமுகவினர் புலி ஆதரவாளர்கள் என்பதையும் நான் அறிவேன். ஆனால் இந்த முகநூல் எழுத்துகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு சிலர் திமுக என்னும் மொத்த அமைப்பே ஈழத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிரானது என்பதுபோல் எழுதுகின்றனர். திமுகவில் உள்ள சிலர் புலிகளை எதிர்ப்பதாலேயே அது புலி விரோதக் கட்சி என்றால், அதே திமுகவில் உள்ள…
-
கச்சதீவை கலைஞர் கொடுத்தாரா?
கச்சதீவு கலைஞரால் தான் தாரை வார்க்கப்பட்டது என்று பொய்யும் புரட்டும் பேசிவருபவர்களுக்கு கச்ச தீவை மீட்டெடுப்பதற்காக தற்போது ஜெயலலிதா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு எடுத்து வைத்த வாதமே “கலைஞருக்கும் கச்ச தீவு நம் கைவிட்டு போனதற்கும் சம்மந்தமே இல்லை” என்று நிருபணமாகிறது. தமிழக அரசு எடுத்து வைத்த வாதம் இதுதான் ——————————————————————————– “மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அந்த மாநிலத்தின் ஒரு பகுதியை மத்திய அரசு வேறு நாட்டுக்கு வழங்கினால் அது…