பெரும்பான்மையான இந்துக்கள் மதசார்பின்மையாக இருப்பதால் தான் இந்தியா அனைத்து சமுகத்தையும் அரவணைத்து செல்லும் நிலைமை இருக்கிறதாம்….இது,இந்த கருத்து மேம்போக்காக பார்த்தால் ஏதோ பெரிதா மத சார்பின்மை பற்றி பேசியது போன்று தோன்றும்….ஆனால் இது உண்மை மறைத்து பேசும் பேச்சு என்பது பார்ப்பன மதத்தை ஆழமாக அறிந்தவர்கள் உணர்வார்கள்.
இந்தியாவில் இந்து என்பது பார்ப்பனர்களை தவிர யாரும் விரும்பி ஏற்றுகொண்டது இல்லை…பெரும்பான்மையான மக்கள் (பார்ப்பனர்களை தவிர) ‘இந்து’ என்று பலி சுமத்தப்பட்டு இருக்கிறார்கள்…எனவே இப்படி பலி சுமத்தப்பட்ட மக்கள் அதை பற்றி கவலை படுவதில்லை……அந்த பலியை சுமந்து கொண்டு அதனால் ஏற்படும் சூத்திர , பஞ்சம பட்ட இழிவு பற்றியும் கவலை கொள்வது கிடையாது…அப்படி ‘இந்து’ என்றால் என்ன என்று ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை…எனவே, அந்த பார்ப்பன மதத்தின் மீது இந்த பெரும்பான்மை மக்களுக்கு பற்றும் கிடையாது வெறுப்பும் கிடையாது…கீதையா, பாகவதமா, மனுதர்மமா…எதாவது இருந்துவிட்டு போகட்டும்…அதில் என்ன இருந்தா நமக்கென்ன..இதுதான் பார்ப்பனரல்லாத, இந்து என்று பலி சுமத்தபட்ட பெரும்பான்மை மக்களின் நிலைமை…ஏதோ இந்து ன்னு சொல்கிறார்கள்….சொல்லிட்டு போகட்டும் என்றுதான் அவர்கள் இருக்கிறாக்கள். இதுதான் உண்மை. இந்த பார்ப்பன மதத்தால் அலைகழிக்கப்பட்டு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு மலம் அல்லும், செருப்பு தைக்கும், உழவு தொழில் செய்யும் ஒடுக்கப்ட்டவனுக்கு என்ன வெங்காயம் தெரியும்…மக்களோடு மக்களாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அவன் மனிதர்களை அரவணைத்து செல்லும் மனிதநேய மிக்க மாண்பாளன் தான்…அந்த மனிதநேயம், ஏதோ இந்த கேடுகட்ட பார்ப்பன மதத்தால் வந்தது இல்லை….எனவே திரிக்க வேண்டாம்….
இந்த பார்ப்பன இந்து மதத்தால் நல்லா பலன் அனுபவிக்கும், குண்டி வளர்க்கும் பார்ப்பனர்கள் தான் இந்து கோசம் போடுவதும்…அவர்களுக்கு எதாவது ஆபத்து வரும்பொழுது, நாங்க பெரும்பான்மை என்று மற்ற மக்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு பொது புத்தி, பொது பிரச்சனை, போன்று கூட்டம் காண்பிக்கவும் முயற்சிப்பார்கள்…இதை பார்ப்பன இந்து மதம் பற்றி ஆராய்ந்து அறிந்தவர்கள் உணர்வார்கள்…ஒரிஜினல் இந்துவாகிய எந்த பார்ப்பானும் இது வரை யாரையும் அரவணைத்து சென்றதா சரித்திரம் இல்லை. இதுதான் பார்ப்பன இந்து மத உண்மை முகம்…நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமையும் ஆதிக்க ஆரியத்திடம் இருந்து போராடி பெற்ற உரிமைகள்…எனவே, பெரும்பான்மையாக இந்துக்கள் இருப்பதால் தான் மதசார்பின்மை கொடி கட்டி பறக்கிறது என்று பம்மாத்து செய்து உழைக்கும் மக்களிடம் உண்மையை மறைக்க வேண்டாம்.