
பொங்கல் விழா என்றும் உழவர் திருநாள் என்றும் தைத்திருநாள் என்றும் அழைக்கப்படும் தமிழ்ப்புத்தாண்டு தமிழினத்தின் கலாச்சாரப் பெருவிழா! தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப்பண்ணித் தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! தலைமுறை தலைமுறை தவழ்ந்து…