Tag: திராவிடம்

  • “வீரபாண்டியன்” ம.பொ.சி!

    “வீரபாண்டியன்” ம.பொ.சி!

    “திராவிடத்தால் வீழ்ந்தோம்” “திராவிடம் மாயை” என்று கூப்பாடு போட்டுவரும் குதர்க்கவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ம.பொ.சி. திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றியபோதெல்லாம் பல் இளித்து பதவி சுகம் கண்டவர். அண்ணா ஆட்சியில் அமர்ந்ததும் பதவிகேட்டு அண்ணாவை நாடி அலைந்தார்.அப்போது விடுதலையில் “ம.பொ.சிக்கு பதவியா?” என்று கேள்விஎழுப்பி பெட்டிச்செய்தி வெளியானது.சுதாகரித்துகொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச்சொல்லி பதவி தர மறுத்துவிட்டார். நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இரத்தக்கண்ணீர் நாடகத்தில் ராதாவின் அம்மா இறந்துவிடுவது போல் ஒரு காட்சி! ராதா கின்டலாக…

  • திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்களே…

    திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்களே…

    கேள்வி: சிலர் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்களே யாரால் எழுந்தார்களாம்? பதில்: நூலோர்களில் எழுந்திருப்பார்களோ? இனி, குலத்தொழில் செய்யப் போவார்களோ? மானமும் மரியாதையும் மனிதனுக்கு அழகு என்றவரை மறந்துவிட்டு, நான் சொல்வதை நம்பு. நம்பாவிட்டால் நரகம்! என்பவர்களை நம்புவார்களோ? – ‘முகம்’ – ஜூலை 2012 இதழில்

  • புரட்சியாளனாக வரும் தகுதி!?

    புரட்சியாளனாக வரும் தகுதி!?

    அவனுக்கு அரசியல்வாதிகளின் மேல் நம்பிக்கை இல்லை; சேகுவேரா படம்போட்ட டி-ஷர்ட் நான்கு வைத்திருக்கிறான்! முகநூலில் இனத்துக்காக மூர்க்கமாய் சண்டையிடுவான். திராவிடக் கட்சிகளால் வந்ததென்ன, ஆனதென்ன என்பான்! மாற்று அரசியல் புரட்சி வந்தாலே எல்லாம் விளங்குமென்பான்; பெரியார் என்ன கிழித்தார் என விமர்சனம் செய்யும் பெரிய அறிவாளி அவன்! பெரிய புரட்சியாளனாக வரும் எல்லா தகுதியும் இருந்த அவனை அசந்து போய் பார்த்திருந்தேன்; ஒருநாள் தொலைக்காட்சியில் ‘திருச்சி சிவா’ வந்தார், “ஜேசுதாஸ் அரசியலுக்கு வந்துட்டாரா?” என்றான்; எடுத்தேன் செருப்பை!…

  • திராவிடக் கருத்தியலும், தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகளும்!

    திராவிடக் கருத்தியலும், தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகளும்!

    – சொ.சங்கரபாண்டி திராவிடக் கருத்தியலின் அடிப்படைக் குறிக்கோள் சமூகநீதி. பெரியார் அதற்குத் தடையாக இருக்கின்றன என்று கருதிய அனைத்து பகுத்தறிவற்ற வரைமுறைகளையும், அமைப்புகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் அறவழியில் அடித்து நொறுக்குமாறு பரப்புரை செய்தார். அதில் தமிழ்மொழி பற்றிய பகுத்தறிவற்ற வறட்டுக்கூச்சல்களும் உள்ளடங்கும். பல நேரங்களில் சிந்தனைக்குட்படுத்தப் படவேண்டும் என்பதற்காகவே அதிர்ச்சியூட்டும் வகையில் தீவிரத்துடன் முன்வைத்தார். வெறுமனே தற்புகழ்ச்சியுடன் உதவாக்கரை கவிதைகளை எழுதிக்குவித்த கவிஞர்கள் தமிழ் மொழிக்குச் செய்த பங்களிப்பு என்ன? மாற்று மொழியினரின் வெறுப்பையும் சந்தேகத்தையுமே சம்பாதித்தது.…

  • நூல்களின் ஆதிக்கத்தை சுப.வீ. போன்றவர்களின் நூல்களாலேயே ஒழித்துக்கட்ட வேண்டும்

    நூல்களின் ஆதிக்கத்தை சுப.வீ. போன்றவர்களின் நூல்களாலேயே ஒழித்துக்கட்ட வேண்டும்

    சென்னை, மே 19- நூல்களால் ஏற்பட்ட ஆதிக்கத்தை சுப.வீ. போன்றவர்களின் நூல்களாலேயே ஒழிக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் 5 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் 15.5.2012 அன்று மாலை நடைபெற்றது. அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப் பிட்டதாவது: மிகுந்த எழுச்சியோடு தேவையான நேரத்தில், தேவைப்படும் கருத்துகளை சுவையான தகவல் களஞ்சியங்களாகவும், சுயமரியாதைச் சூரணங்…