Tag: திராவிடம்

  • பார்ப்பான் தமிழனா?

    பார்ப்பான் தமிழனா?

    சென்ற வருடம் புதிய தலைமுறை தொலைகாட்சியில் சிறந்த தமிழன் விருதுகள் கொடுத்தார்கள்.அதில் நான்கு பேர் பார்ப்பனர்கள்.அவர்களுக்கு விருது கொடுத்ததை பற்றி எந்தவித ஆட்சபனையும் இல்லை.ஆனால் நான்கு பேருக்கும் தமிழர் என்ற அடையாளத்துடன் கொடுத்ததை கவனிக்க வேண்டும்.இது நடந்து நீண்ட நாட்கள் ஆனாலும் தமிழ் புத்தாண்டு வருவதால் நவீன தமிழ்தேசியவாதிகள் எல்லாம் இதை மறந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு. தமிழன் என்று சொன்னால் அதற்குள் பார்ப்பான் இருப்பான் அதனால்தான் திராவிடர் என்ற பொது பெயரை பயன்படுத்துகிறேன் என்று தெரியாமலையா…

  • திராவிடம் தேவையா?
  • திராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா?

    “பார்ப்பன கிரிக்கெட் வீரர் ராகுல், “திராவிட்” என்று பெயர் வைத்திருக்கிறார்.எனவே திராவிடர் என்ற சொல் பார்ப்பனரையே குறிக்கும்”என்று தோழர் மணியரசன் கூறியுள்ளார்! தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இன்றளவும் பெண்குழந்தைகளுக்கு “பாப்பாத்தி” என்றும் ஆண் குழந்தைகளுக்கு “அய்யர்” என்றும் பெயர் சூட்டியுள்ளதை பார்த்திருக்கிறோம். அவர்ககைளை எல்லாம் மணியரசன் ஆரியர் என்று கூறுவாரா? “திராவிட்” என்பதும் “திராவிடர்” என்பதும் ஒன்றா? “சைதாப்பேட்டை”யை ஆங்கிலத்தில் “சைதாபேட்” என்று கூறுவது போல் “திராவிடம்””திராவிட்” என்பது இடத்தை குறிக்கும். இந்திய தேசிய கீதப் பாடலில் வரும்…

  • காலில் விழுவது திராவிட மரபா?

    ஒருவருடைய காலில் விழுந்து வணங்குவது அல்லது ஒருவருடைய காலைத் தொட்டு வணங்குவது என்பது வடஇந்தியாவைவிடத் தென்னாட்டில்தான் இன்று அதிகம் வழக்காற்றில் காணப்படுகிறது. இதனை வைணவ சமயம் சரணாகதி என்று குறிப்பிடுகிறது. சரண் புகுதல் என்று கவிஞர்கள் இதனைப் பாடி வைத்துள்ளனர். பாரதி தேடி உன்னைச் சரண் புகுந்தேன் தேசமுத்து மாரி என்று முத்துமாரியைப் பாடுகையில் குறிப்பிடுகிறார். வைணவத்தில் எல்லாப் பொறுப்புகளையும் நீயே கதி என்று பெருமாளிடம் காலில் விழுந்து ஒப்படைத்துவிட்டால் பெருமாள் பார்த்துப்பார் என்று குறிப்பிடுவார்கள். அதேபோல்…

  • நவம்பர் 13

    நவம்பர் 13

    இன்று இருபதாம் நூற்றாண்டின் நரகாசுரனுக்கு தமிழ் மண்ணின் தேவிகள் பெரியார் எனப் பெயர் சூட்டிய நாள். அறியாராய் இருந்த தமிழர்களை, ஆரியம் சிறியாராய் அவமதித்த திராவிடர்களை, எதுவும் தெரியாராய் ஆக்கிட சூழ்ச்சி புரிவோரின் ஆணவத்தைச் சுட்டெரித்திடப் பகுத்தறிவுப் பாடம் சொல்லிய சூரியனுக்குப் `பெரியார்’ எனப் பட்டம் சூட்டியது சரிதானே என்று உலகம் சொல்கிறதே இன்று….!      – சம்பூகன்

  • மனித மலமும், புளியந்தழையும்!

    மனித மலமும், புளியந்தழையும்!

    – கி.தளபதிராஜ் சுமார் 55 வருடங்களுக்கு முன்னர்  மயிலாடுதுறை கண்ணாரத்தெரு பகுதியில் “ராமவிலாஸ்” (பிராமனாள் கபே) என்கிற ஹோட்டல் இருந்தது.அப்போது திராவிடர் கழகத்தில் அண்ணா இருந்த நேரம்.அண்ணாதுரை வாலிபர் சங்கம் என்ற அமைப்பு தீவிரமாக இருந்தது.ஒருநாள் ராமவிலாஸ் ஹோட்டல் உரிமையாளருக்கும் அண்ணாதுரை வாலிப சங்கத்தைச்சேர்ந்த ஒரு இளைஞருக்கும் ஏதோ பேச்சு வார்த்தை முற்றி ரகளையில் முடிந்தது. அண்ணாதுரை வாலிபர் சங்கத்தில் நாங்கள் குடியிருந்த கேணிக்கரை பகுதியில் வசித்துவந்த டைலர் சொக்கன் பிரபலமானவர்.சம்பவம் நடந்த அன்று இரவு டைலர் சொக்கன்…

  • ஏன் பார்ப்பனர்களை இன்னமும் விமர்சிக்க வேண்டியதிருக்கிறது?

    ஏன் பார்ப்பனர்களை இன்னமும் விமர்சிக்க வேண்டியதிருக்கிறது?

    பார்ப்பனியத்தின் மேலான திராவிடத்தின் தற்காப்புத் தாக்குதல் ஆரம்பித்து நூறு வருடங்கள் ஆகியுள்ள சூழ்நிலையில், திராவிடத்தின் துணைகொண்டு சமூகநீதி சட்டங்களால் மேல்தட்டுக்கு குடியேறிவிட்ட தமிழர்கள் சிலருக்கு, ஒருவிதமான சலிப்பு சமீபகாலமாக ஏற்பட்டிருக்கிறது. “ஏன், இன்னும் பார்ப்பனர்களையே தாக்குகிறீர்கள்?” என்ற கேள்வி அந்த சலிப்படைந்துவிட்ட மக்களுக்கு அடிக்கடி எழுகிறது. எந்த கொள்கையையும் அடுத்த தலைமுறையிடம் கடத்தும் போது அக்கொள்கைக்கான சமகால தேவையையும் உணர்த்தினாலேயொழிய அக்கொள்கையை ஏற்கும் பக்குவம் அத்தலைமுறையினருக்கு ஏற்படாது. ஆகவே சலிப்படைந்திருக்கும் சிலரின் கேள்விகளை நியாயமான கேள்விகளாகவே கொண்டு…