பதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்

“திராவிடன் குரல்” தனது பணியை அச்சுத் தளத்திலும் தமிழ்ப் புத்தாண்டும் (2045), திராவிடர் திருநாளுமான இப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. ஆம், ”திராவிடன் குரல் வெளியீடு” என்ற பெயரில் பதிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இணையத்தில் சென்று சேர முடியாத தளங்களுக்கும் திராவிடன் குரல் செல்ல வேண்டும் என்ற நோக்கிலும், காலம் கடந்து நிற்க வேண்டிய கருத்துக் கருவூலங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் இப்பணியைத் தொடங்கியுள்ளோம்.

இதன் முதல் கட்டமாக, தந்தை பெரியாரையும், திராவிட சிந்தனையையும், இயக்கத்தையும் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகளுக்குப் பதில் அளித்து திராவிடன் குரலில் பதிவான கி.தளபதிராஜ் அவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து இரண்டு சிறு வெளியீடுகளை அறிமுகம் செய்துள்ளோம்.

1. டாக்டர் அப்துல்லாஹ் என்ற பெரியார் தாசன் அவர்கள் எழுதிய “இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா? எதிர்த்தாரா?” என்ற நூலுக்கான ஆதாரப்பூர்வ மறுப்பான “மத அழைப்பாளரா பெரியார்?

2. ஆரியத்திற்கு விலை போகும் தமிழ்த் தேசியங்களுக்குப் பதிலடி தந்துள்ள “பெரியார் பார்வை: தமிழ் தமிழர் தமிழ்நாடு

திராவிடன் குரல் இணையதளத்தில் வெளியான படைப்புகள் மட்டுமின்றி, திராவிட இனம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கருதுகிற செய்திகளையும் அச்சுத் தளத்தில் வழங்க விரும்புகிறோம்.  எம் பணி விரிவடைய உங்கள் ஆதரவும், விமர்சனங்களும் எப்போதும் எங்களுக்குத் தேவை.

அனைவருக்கும் திராவிடர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்!

புத்தகம் இப்போது நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண்:661 “அன்னை முத்தமிழ்ப் பதிப்பகத்”தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. மேலும் பிரதிகள் வேண்டுவோர்: 9940489230 என்ற செல்பேசி எண்ணுக்கு  அல்லது dravidiankural@gmail.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.