திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்களே…

கேள்வி: சிலர் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்களே யாரால் எழுந்தார்களாம்? பதில்: நூலோர்களில் எழுந்திருப்பார்களோ? இனி, குலத்தொழில் செய்யப் போவார்களோ? மானமும் மரியாதையும் மனிதனுக்கு அழகு என்றவரை மறந்துவிட்டு, நான் சொல்வதை நம்பு. நம்பாவிட்டால் நரகம்! என்பவர்களை நம்புவார்களோ? – ‘முகம்’ – ஜூலை 2012 இதழில்

பெரியாரின் மீது சேறள்ளி வீச இன்னுமொரு கை..

1968 ஆம் ஆண்டு சத்தியவாணி முத்துவின் மகளும் அப்போதைய மேயர் வேலூர் நாராயணன் மகனும் திருமணம் செய்துக்கொள்ள விரும்ப, வேலூர் நாராயணன் சத்தியவாணியின் சாதியை சொல்லி தன் மகனிடம் விமர்சித்த சூழலில், நாராயணன் பிறந்தநாள் விழாவில் பேச அழைக்கப்பட்ட பெரியார் அச்சம்பவத்தை மனதில் கொண்டு காட்டமாக அவ்விழாவில் பேசினார்.பெரியாரின் கடைசி பேட்டியிலும் கூட நிரப்பப்படமால் இருக்கும்…

புரட்சியாளனாக வரும் தகுதி!?

அவனுக்கு அரசியல்வாதிகளின் மேல் நம்பிக்கை இல்லை; சேகுவேரா படம்போட்ட டி-ஷர்ட் நான்கு வைத்திருக்கிறான்! முகநூலில் இனத்துக்காக மூர்க்கமாய் சண்டையிடுவான். திராவிடக் கட்சிகளால் வந்ததென்ன, ஆனதென்ன என்பான்! மாற்று அரசியல் புரட்சி வந்தாலே எல்லாம் விளங்குமென்பான்; பெரியார் என்ன கிழித்தார் என விமர்சனம் செய்யும் பெரிய அறிவாளி அவன்! பெரிய புரட்சியாளனாக வரும் எல்லா தகுதியும் இருந்த…

இன்றைய இளைஞர்கள் பார்வையில் இடஒதுக்கீடு!

இன்றைய இளைஞர்கள் இடஒதுக்கீடு பற்றி குறை கூறுவதைப் பார்த்தால் அவர்களுக்கு அது பற்றிய புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் போய் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் போதும், IIT ல் போய் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போதும், எனக்கு கோட்டாவுல சீட்டு கிடைச்சா போதும் என்று பினாத்த வேண்டியது.   இடஒதுக்கீடு…

பார்ப்பனர்களை எதிர்த்துப் போராடாமல்… கொஞ்சுவாங்களா?

பொறுமைக்கும் எல்லை உண்டு என்று பொய் வழக்கு போடும் தமிழக அரசைப் பார்த்து கலைஞர் ஆதங்கப்பட்டுள்ளார். அதற்கு ஒரு பார்ப்பன யோக்கிய சிகாமணி சொல்லுகிறார் பாருங்களேன். “இந்த ஓராண்டுக்கே இப்படி பொறுமை எல்லை கடக்கும் என்றால் – பலப்பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழித்தும் பழித்தும் பேசி வருவது அவர்கள் பொறுமையை சோதிக்கக் கூடும்…

திராவிடக் கருத்தியலும், தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகளும்!

தந்தை பெரியார்

– சொ.சங்கரபாண்டி திராவிடக் கருத்தியலின் அடிப்படைக் குறிக்கோள் சமூகநீதி. பெரியார் அதற்குத் தடையாக இருக்கின்றன என்று கருதிய அனைத்து பகுத்தறிவற்ற வரைமுறைகளையும், அமைப்புகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் அறவழியில் அடித்து நொறுக்குமாறு பரப்புரை செய்தார். அதில் தமிழ்மொழி பற்றிய பகுத்தறிவற்ற வறட்டுக்கூச்சல்களும் உள்ளடங்கும். பல நேரங்களில் சிந்தனைக்குட்படுத்தப் படவேண்டும் என்பதற்காகவே அதிர்ச்சியூட்டும் வகையில் தீவிரத்துடன் முன்வைத்தார். வெறுமனே…