Category: நடப்பு

  • ஜாதி ஒழிப்பில் பெரியார்!

    தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பை தனது சாவு வரையிலான போராட்டமாகக் கொண்டவர்! அதனால்தான், “ஜாதிப்பிணியை போக்க வந்த மாமருந்து ” என்று போற்றினார் புரட்சிக்கவிஞர். பார்ப்பனரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை விடவும், தீண்டத்தகாத சமுகத்தினரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முக்கியமானது என்று மேடைகளில் முழங்கியவர் மட்டுமல்ல, போராடிப் போராடி அந்த உரிமைகளைப் பெற்றுத்தந்தவர் பெரியார்தான். இந்து மதத்தில் பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்த தீண்டாமையை பெரியார், தீண்டத்தகாத தீங்காகக் கருதினார். அது நான்காம், அய்ந்தாம் ஜாதியினரை விலங்கினும் கீழாக வைப்பதைக் கண்டு பொங்கினார்.   பஞ்சமர் பட்டம்  ஒழியாமல்,  சூத்திரப்பட்டம் போகாது என்று உரைத்தார்.  இந்து மதத்தையே ஒழிக்க…

  • கொரோனா ஒழியும் நாள் கடவுளுக்குத்தான் தெரியும்”

    இப்படி ஒரு கருத்தை உதிர்த்திருப்பவர் யாராக இருக்கும்? யாராவது ஒரு வேதாந்தியாக இருக்கும்; இல்லையெனில், யாராவது ஒரு ஆன்மிகவாதியாக இருக்கும்; அப்படியும் இல்லையென்றால், யாராவது ஒரு தெய்வீகப் பிறவியாக இருக்கும்; அதுவும் இல்லையென்றால், யாராவது ஒரு சாமியாராக இருக்கும் என்று நீங்கள் சொன்னால், தமிழ்நாட்டில் வசிக்கவே தகுதியில்லாதவர் என்று தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கும் அ.தி.மு.க. பிரமுகர்கள் அர்ச்சனை புரியலாம்! ”அது எப்படி சொல்லப் போச்சு?” என்று ஆளைப் பிறாண்டி எடுக்கலாம். ஏனெனில், இந்தக்  குரலுக்குச் சொந்தக்காரர் தமிழ்நாட்டின்…

  • தமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று

    தமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்! உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்! உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்! உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்! அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்–கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்! அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள். ஒரு நாள் என்பது என்ன? சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம். ஒருமாதம் என்பது…

  • பண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா?

    பண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா?

    ஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது . கி.பி 10ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி பேச்சே கிடையாது என்கின்றனர் கா.அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும் ஆய்வறிஞர் மா.இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலதாலி வழக்கம் இல்லை என்பதை பல்வேறு தரவுகளுடன் எடுத்துறைக்கின்றனர் . ஆகவே கி.பி 10 பின்னர்…

  • பெரிய குஞ்சு தாத்தா…

    பெரிய குஞ்சு தாத்தா…

    ஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு பேருப்பா, என்ன பெரிய குஞ்சும்பாங்க, எந்தம்பிய சின்னகுஞ்சும்பாங்க” “பெரிய குஞ்சு தாத்தா… பெரிய குஞ்சு தாத்தா…னு கூப்டா ஒனக்கு சங்கடமா இல்லையா” “அதென்னா இன்னைக்கு நேத்தா கூப்ட்றாங்க” “ஒனக்கு இந்த பேரு புடிச்சிருக்குதா” “ம்ம்ஹும்..புடிக்காது, வெளிலலாம் எங்கயாச்சும் ஆஸ்பித்ரிக்குலாம் போனா…

  • திராவிடநாடு

    திராவிடநாடு

    கேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு என பேசுவதற்கு பின்னால் இருக்கும் செய்தி மிகப் பெரியது. அந்த செய்தியை இந்திய ஒன்றியத்தின் அரசியல் அறிவுஜீவிகள் கொஞ்சம் அதிர்ச்சியோடுதான் பார்த்துக்கொண்டிருப்பார்கள். சோவியத் ரஷ்யா உருவாக்கப்பட்ட போது, உருவாக்கப்படும் முறையில் லெனினுக்கு உடன்பாடில்லை என்று படித்திருக்கிறேன். பிற்காலத்தில், கோர்பசேவ் கொண்டுவந்த…

  • ரைம்ஸ்

    ரைம்ஸ்

    அமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் தானே அந்த மண்ணின் பூர்வகுடிகள், அவர்கள் இருப்பது இயல்பு தானே?” எனச்சொல்வது வாதத்திற்கு சரியானதாக இருந்தாலும், “கறுப்பர்களுக்கு வீடு இல்லை” என்று பலகை வைக்குமளவு அவர்கள் அந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் என்பதால் வலுக்கட்டாயமாக அந்த மக்களின் இருப்பை…