Category: அரசியல்

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து?

இன்றைக்கு ஒரு பத்திரிக்கையில், புது தில்லியிலிருந்து க.திருநாவுக்கரசு எனும் பெயரில் எழுதிய கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இங்கே அதே பெயரில் திராவிடர் இயக்கத்தைப் பற்றி எழுதும் ஒரு எழுத்தாளர் இருக்கும்போது, அதே பெயரில் எழுதுகிறோமே என்ற தார்மீக பொறுப்பு அந்த எழுத்தாளரிடமும் இல்லை, வெளியிடும் பத்திரிக்கையிடமும் இல்லை; சரி, விஷயத்துக்கு வருவோம். இப்போது, தமிழ் நாட்டில்…

பேசநா இரண்டுடையாய் போற்றி!

ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலை குறித்து கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார், கபட நாடகம் ஆடுகிறார் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கீழ்கண்டவற்றையும் பலர் படித்து தெரிந்துகொள்ளவேண்டும், தெரிந்து அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். “ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு…

‘தி இந்து’ பத்திரிக்கை செய்தி வெளியிடுவதில் காட்டும் நேர்மையின் லட்சணம்!

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் நேர்க்காணலை சமஸ் அவர்கள் தி இந்துவில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு முக்கியமான அரசியல் கேள்வி கேட்கிறார். ஏன் அரசியல் கட்சிகள் பகிர்ந்துகொள்ளவில்லையா? என்பதே அந்த கேள்வி. அதற்கான அற்புதம் அம்மாளின் பதில் ‘தி இந்துவில்’ வெளிவந்துள்ளது. அந்த பதிலுக்கான இறுதிப்பகுதி, “நெடுமாறன், நல்லகண்ணு, தியாகு, வைகோ, சீமான் இவங்கெல்லாம் பெரிய…

மாற்றம் ஒன்றே மாறாதது! அற்புதம் அம்மாளும் அதற்கு விதிவிலக்கல்ல!

அற்புதம் அம்மாளின் நேர்காணல் தி இந்துவில் வந்திருக்கிறது. திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க ஆகிய இயக்கங்கள் குறித்த அவரது கருத்துகளை வேதனையோடு பகிர்ந்துள்ளார். “ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை பெறுபவர்களை வைத்து கலைஞருக்கு எதிராக பேட்டி கொடுக்கவும், பிரச்சாரம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படலாம், அவர்களை அரசியலுக்கு பயன்படுத்த முயற்சிக்கலாம்” என்று இரண்டு நாட்களுக்கு முன்பு நான்…

திராவிட மாயை(!?)

ஒரு இனம் உலகெங்கும் உள்ள மொழியியல், தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின் தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு…

அன்புள்ள மக்களுக்கும், திருட்டு நடுநிலையாளர்களுக்கும்..

அன்புள்ள மக்களுக்கும், திருட்டு நடுநிலையாளர்களுக்கும்.. மின்சார டெபாசிட் பணத்தை எவனும் எக்காலத்திலும் மின்சார வாரியத்திடம் திருப்பிக் கேட்கப்போவதில்லை. அதேநேரம் எந்த வீட்டுக்காரனும் மின்கட்டணம் கட்டவே கட்டாமல் மின்சார வாரியத்தை ஏய்க்கவும் முடியாது. ஏனெனில் மின்சார விற்பனை என்பது மின்சாரவாரியத்திடம் மட்டுமே உள்ள (monopoly) ஏகபோக வியாபாரம். ஏற்கனவே மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி அந்த சுமையையே மக்கள்…

ஆ.வி மறந்தது/ மறைத்தது/ சொல்லாமல் விட்ட செய்திகள்

ஆனந்த விகடன் இந்த வாரம் அப்பட்டமாக ஜெ.புராணம் பாடியிருக்கிறது; இன்னும் ஏதாவது கெட்ட பெயர் வாங்காமல் இருந்தால் (அவ்வளவு நம்பிக்கை) இப்போதைய சூழலில் ஜெ ஹோ… ஜெயா ஹோவாம். டெசோ போராட்டத்தின் எதிரொலிதான் ஜெ.விடம் மாற்றம் என்ற தற்காலிக நாடகம். இதைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாத ஆ.வி.யின் நடுநிலை மீண்டும் நாறியிருக்கிறது. மாணவர் போராட்டத்தை…