Category: வரலாறு

  • நாகையில் பெரியார் கொடுத்த குரல்! -கி.தளபதிராஜ்

    குழந்தைத் தொழிலாளர் சட் டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற் கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.  இதுகுறித்து, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தங்களது குடும்பப் பாரம்பரியத் தொழில்கள், திரைப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுது போக்கு சார்ந்த பணிகள், சர்க்கஸ் தவிர்த்து பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்குள் பட்டவர்களை ஈடுபடுத்தவும்,…

  • கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை -கி.தளபதிராஜ்

    கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை -கி.தளபதிராஜ்

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15. இவர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற்காலம். தொழிற்துறையில் தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டது. ஏராளமான கல்விச்சாலைகளை திறந்து மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்திற்கு அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டையையும் மீறி புத்துயிர் ஊட்டினார். ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளோடு மேலும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக்கண்ணை திறந்தவர் காமராஜர்!. அதனால் “பச்சைத்தமிழர் காமராஜர்” எனப்பாராட்டி உச்சி முகர்ந்தார் பெரியார்!. நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல.…

  • சமஸ்கிருதம் ஆரிய மொழி! உருது திராவிட மொழியா ?

    சமஸ்கிருதம் ஆரிய மொழி! உருது திராவிட மொழியா ?

    கேள்வி எண்1 பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில் உள்ள சமஸ்கிருதம் ஆரிய மொழி 200 ஆண்டுகளுக்குள் வந்த உருது திராவிட மொழியா ? விடை: எத்தனைத் திரிப்புகள் ஒரு கேள்வியில்! சமஸ்கிருதம் எந்த ஆண்டில் தோன்றியது.அதற்கு பல்லாயிரம் ஆண்டு வரலாறு உண்டா. கற்காலத்தில் இருந்து கல்லில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவம் வட்டு எழுத்து சதுர எழுத்து புள்ளி இல்லாத ஓலை எழுத்து என தமிழின் வரி வடிவ மாற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் கல்வெட்டு ஆதாரஙங்கள் உள்ளன. சமஸ்கிருதத்திற்கு…

  • மண்ணுருண்டை மாளவியா ! -கி.தளபதிராஜ்

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மதன்மோகன் மாளவியாவிற்கு பாரதரத்னா  விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. மாளவியாவை சீர்திருத்தவாதி போன்று ஊடகங்கள் சித்தரிக்க முயன்றாலும், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் மாளவியாவை தூக்கிப்பிடிப்பதைப் பார்த்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் ஓரளவு உணர முடியும். இந்து மகாசபையின் தலைவராக இருந்த மாளவியா சாஸ்திரங்களை தூக்கிப்பிடித்த சனாதனவாதி. தென்னாட்டு பார்ப்பனர்கள் தங்கள் சரக்கு தமிழ்நாட்டில் போனியாகாத போதெல்லாம் வடநாட்டுப்பார்ப்பனர்களை வரவழைத்து வித்தை காண்பிப்பது வழக்கம். அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த மாளவியா என்பதும்,…

  • ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து?

    ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து?

    இன்றைக்கு ஒரு பத்திரிக்கையில், புது தில்லியிலிருந்து க.திருநாவுக்கரசு எனும் பெயரில் எழுதிய கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இங்கே அதே பெயரில் திராவிடர் இயக்கத்தைப் பற்றி எழுதும் ஒரு எழுத்தாளர் இருக்கும்போது, அதே பெயரில் எழுதுகிறோமே என்ற தார்மீக பொறுப்பு அந்த எழுத்தாளரிடமும் இல்லை, வெளியிடும் பத்திரிக்கையிடமும் இல்லை; சரி, விஷயத்துக்கு வருவோம். இப்போது, தமிழ் நாட்டில் ஜெயலலிதா மீதான தனி நபர் வழிப்பாட்டுக்கு ஆரம்பப் புள்ளியே பெரியார் தானாம். அவர் இயக்கத்தை சர்வாதிகாரியாக இருந்து நடத்தினாராம், பொதுக்…

  • மதுரை வைத்திய நாதய்யரும் கோயில் நுழைவும் உண்மை வரலாறு என்ன? – கி.தளபதிராஜ் ((விடுதலை ஞாயிறுமலர் 12.7.14)

    தினத்தந்தி நாளிதழ் மதுரை வைத் தியநாத அய்யரைப்பற்றிய கட்டுரை யொன்றை 8.7.14 அன்று வெளியிட்டி ருக்கிறது. மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை யும் நாடார்களையும் அழைத்துக்கொண்டு 75 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முறை யாக 8.7.1939இலேயே ஆலயப்பிரவேசம் செய்தவர் வைத்தியநாத அய்யர் என்று அக்கட்டுரை அவருக்குப் புகழாரம் சூட்டு கிறது. யார் இந்த வைத்தியநாத அய்யர்? 1923ல் மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார் தந்தை பெரியார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை…

  • வரலாற்றைப் படியுங்கள் சீமானே! -கி.தளபதிராஜ்

    வரலாற்றைப் படியுங்கள் சீமானே! -கி.தளபதிராஜ்

    திராவிட முன்னேற்ற கழகம்! “முன்னேற்றம்” என்பதற்கு பொருள் என்ன? திருடர் முன்னேற்றம்! அதுதான் அதற்கு பொருள். திராவிடக் கொள்கை திராவிடக் கொள்கைங்கிறாங்களே. அது என்ன? திராவிடக் கொள்கை? நாங்க வந்துதான் சுயமரியாதைத் திருமணம் நடத்திவச்சோம்! நாங்க வந்துதான் விதவைத் திருமணம் நடத்திவச்சோம்! ன்றாங்க. போங்கடா வெட்டிப்பயல்களா! எங்க ஊர்ல பார்த்தா அண்ணன் செத்துப்போயிட்டான். அண்ணன் பொண்டாட்டி கைக்குழந்தையோட நிக்குது. தம்பி கட்டிக்கிட்டான். நீயா செஞ்சு வச்சே? காலம் காலமா இப்படித்தான் நடந்துகிட்டிருக்கு. சீர்திருத்த திருமணம் நடத்தி வச்சுட்டோம்…