
ஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது . கி.பி 10ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி பேச்சே கிடையாது என்கின்றனர் கா.அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும்…