எனக்குப் பெரியாரை பிடிக்கும் என்பதில் யாருக்கு என்ன பிரச்சனை? தொடர்ந்து பலர் என்னிடம் “பெரியார் ஒண்ணும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை”, என்று நிரூபிக்க முயல்கிறார்கள். அப்படி முயல்கிறவர்கள் கோபமாக, ஆத்திரமாக, சில சமயம் அநாகரிகமாக கூட அவர்களது வாதங்களை முன் வைக்கிறார்கள். மிகவும் கூர்ந்து கவனித்தால் இவர்கள், ஏதோ காரணத்திற்காக தனக்கோ, தன் இனத்திற்கோ ஏதோ அநீதி இழைக்கபட்டதாக நினைக்கிறார்கள்.
உண்மையிலேயே பெரியார் அப்படி எவருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்தாரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது.
நான் பெரியார் பக்தையோ, தாசியோ இல்லை. பெரியார் என்ன! யாரையுமே மஹாத்மா, உத்தமசிகாமணி என்றெல்லாம் கண்மூடித்தனமாக புகழ்பாடவோ, பின்பற்றவோ எனக்கு வராது.

ஆனால், பெரியாரை நான் விரும்புகிறேன். அட, செம்ம ஜித்தண்டா இவன்! என்று அவர் லீலாவினோதங்களை நான் ரசிக்கிறேன். முதியவர், கிழடு என்று அவரை நினைக்க எனக்குத் தோன்றவில்லை, மிகவும் fit young man -ஆகவே எனக்கு அவர் தெரிகிறார். காரணம் அவர் மனம். என் பகுத்தறிவுக்கு உட்பட்ட வரை, தமிழ்நாட்டில் பெண்களுக்காகத் தொடர்ந்து பெரிதும் போராடிய முதல் பெண்ணியவாதி பெரியார். வேறு எந்த ஜாதித் தலைவனும் இந்த இடத்தை தொட முடியாது. காரணம், தோழர் மதிமாறன் சொல்வது போல, பெண்களைப் பொறுத்தவரை, அவர் தந்தை பெரியார் இல்லை, எங்கள் தாய் பெரியார்!

உங்கள் ஜாதிக்கும், இனத்திற்கும், மொழிக்கும் அவர் துரோகம் செய்ததாக நீங்கள் நினைக்கலாம்- ஆண்களுக்குள் நடக்கும் இந்த dominance போட்டியில் உங்கள் சர்ச்சைகள் இயல்பானவை. ஆனால், இதை எல்லாம் தாண்டி எல்லா பெண்களுக்கும் ஒரு போர் வாளாகவும், கேடயமாகவும் நிற்பவர் என்பதால்- அவர் தான் பெரியார்! நாங்கள் அப்படித்தான் அவரைக் கொண்டாடுவோம்! 💖

ஜித்து ஜில்லாடி
விட்டா கில்லாடி!
ஈ.வெ. ரா டாலடிக்கும்
தெளிவுக் கண்ணாடி!!

மருத்துவர்ஷாலினி