
அப்போதுதான்
என் பிள்ளைகளுக்கு
ரோசம் வரும்!
அப்போதுதான்
என் பேரப்பிள்ளைகள்
வெகுண்டு எழும்!
அப்போதுதான்
என் கொள்ளுப் பேரப் பிள்ளைகளுக்கு
என்னைப் பற்றி அறிய முடியும்!
எதிரிகளே எதிரிகளே!
எனக்குச் செருப்பு மாலை போடுங்கள்!
அப்போதுதான்
தூங்கிக் கிடக்கும்
என் மக்கள்
துள்ளி எழுவார்கள்!
எதிரிகளே எதிரிகளே!
என் சிலைகளை உடையுங்கள்!
அப்போதுதான்
உங்கள் முதுகுப் பூணூலும்
அறுக்கப்படும்,
முதுகெலும்பும் உடைக்கப்படும்!
எதிரிகளே எதிரிகளே!
அப்படியே ஒன்று செய்யுங்கள்
உங்கள் அடிமைகளிடம்
சொல்லி வையுங்கள்!
பெரியாரின் பிள்ளைகளின்,
பேரப் பிள்ளைகளின்
போராட்டம்,
அவர்களுக்கும் சேர்த்துத்தான்
என்பதையும் சொல்லிவையுங்கள்!
- தோழர் திராவிடர் முரசு