பெரியாரை எதிர்ப்பது தான் தமிழ்த் தேசியமா? – தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு பதில்!

கேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே?

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:
இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் ‘தமிழன்’ என்ற ஒரு தேசிய இனம் எவ்வாறு உருவாகாமல் தடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பு, கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் போன்ற திராவிடர்கள் தமிழரின் கண் முன்னேயே தமிழ் பிரதேசங்களை பறித்து சென்றனர். பெங்களூர், கோலார், மூணார், சித்தூர், திருப்பதி, தேவி குளம், பீர் மேடு என்று தமிழன் இழந்த நிலம் ஏராளம் ஏராளம். இவை எல்லாம் பெரியார் இருக்கும் போது தான் நடந்தது.இன்னும் சொல்லப்போனால், அவரின் ஆசியுடன் ஜோராக நடந்தது. அப்படி மொழி வாரி மாநிலங்கள் பிரிந்து சென்ற பின்பு, அவர்கள் தங்களை திராவிட இனமாக அறிவிக்கவில்லை. தனி தனி தேசிய இனங்களாகவே அறிவித்து கொண்டு, ஆட்சி அமைத்து கொண்டனர். அன்று முதல் இன்று வரை, எந்த தமிழனுக்கும் மேலே சொன்ன எந்த மாநிலத்திலும் எந்த வகையிலும் பிரதிநிதி துவமோ, அந்தஸ்தோ கிடையாது. அவ்வளவு இறுக்கமாகவும், தீவிரமாகவும் அவர்கள் தங்கள் மேலாண்மையை அந்த அந்த பிரதேசங்களில் செய்து வருகின்றனர். இருந்தாலும் மற்றவர்கள் போல, ‘தமிழர்’ என்ற தேசிய இனம் உருவாவதை பெரியார் ஒருக்காலும் விரும்பியது இல்லை. மீண்டும் மீண்டும் தமிழன் என்பதற்கு பதிலாக திராவிடன் என்றும், தமிழ் நாடு என்பதற்கு பதிலாக திராவிட நாடு என்றே சொல்லியும், செயலாற்றியும் வந்தார்.

-தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

ந்தை பெரியாரின் கொள்கைகளை அல்லது அவரது புகழை அழிப்பது மூலமாகத்தான் தமிழ் தேசியத்தை கட்டமைக்க முடியும் என்று எந்த ஹிந்துத்துவா மனநிலை உடைய கிறுக்கன் சொல்லித் தந்துள்ளானோ தெரியவில்லை…. தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள் தந்தை பெரியாருக்கு எதிராகவும் திராவிட இயக்கத்திற்கு எதிராகவும் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

இவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அவர்களின் பதிலில் இருந்தே அவர்களுடன் நான் கேட்க விரும்பும் இரண்டு கேள்விகள்:

1. தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் பிரித்துக்கொடுக்கப்பட்ட போது திராவிட் இயக்கமா ஆட்சியில் இருந்தது? தமிழரல்லாதவரா முதமைச்சராக இருந்தார்? இல்லையே! காமராஜர் அல்லவா முதமைச்சராக இருந்தார்! மேடாவது? குளமாவது? என்று நக்கலாக கேட்ட காமராஜர் தமிழர் இல்லையா???!!! தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே….. பதில் சொல்லுங்கள்!

2. பெரியாரால் தமிழர் என்ற தேசிய இனம் உருவாகவில்லை என்று புரட்டு பேசுபவர்களே…… தெலுங்கு தேசிய இனம், மலையாள தேசிய இனம், கன்னட தேசிய இனம், மராட்டி தேசிய இனம், ஒரிய தேசிய இனம், பெங்காலி தேசிய இனம், இத்தியாதி இத்தியாதி என்று பல தேசிய இனங்கள் உருவாகாமல், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா, மேற்கு வங்காளம் என்று இந்தியாவின் மாநில மக்களாக மட்டுமே இருக்கும் நிலைக்கு காரணமும் தந்தை பெரியார்தானா???!!! தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்கள்களே….. பதில் சொல்லுங்கள்!

எதை தின்னால் பித்தம் தெளியும் என்று அலைபவர்களை கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பித்தத்தை தெளிய வைக்கும் மாமருந்தான பெரியாரின் கொள்கைகளை நஞ்சென என்று சொல்லி பிதற்றும் தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்களை மனநல காப்பகத்தில் சேர்க்காமல் நாட்டில் நடமாடவிடுவது எவ்வளவு ஆபத்தானது என்று நினைக்கத் தோன்றுகிறது.
————————
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் என்ற பெயரில் தந்தை பெரியாருக்கு எதிராக புரட்டு பிரச்சாரம் செய்யும் தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்களே!

தமிழர்களை திராவிடர்களாக பெரியார் சொன்னது தவறென்று வாதிடுகிறீர்களே…. திராவிடர் என்ற சொல் ஒன்றிணைக்கும் ஒரு சொல். ஆனால், தமிழர்களை ஜாதியால் பிரித்தவர்களை பற்றி நீங்கள் வாயை திறக்காமல் இருப்பது ஏன்?

ஜாதி வெறி பிடித்தவர்கள்தான் தமிழ் தேசியம் என்ற முகமூடியை அணிந்துகொண்டு நடமாடுகிறீர்கள் என்ற உண்மை இதன் மூலம் அப்பட்டமாக வெளிப்படுகிறது.
————————
“மொழி வாரி மாநிலங்கள் பிரிந்து சென்ற பின்பு, அவர்கள் தங்களை திராவிட இனமாக அறிவிக்கவில்லை. தனி தனி தேசிய இனங்களாகவே அறிவித்து கொண்டு, ஆட்சி அமைத்து கொண்டனர்” என்று தந்தை பெரியாருக்கும் திராவிடர் என்ற இனப்பெயருக்கும் எதிராக புரட்டு பிரச்சாரம் செய்யும் தமிழ் தேசியம் பேசும் கிறுக்கர்களே!

ஆந்திர மாநிலத்தில் திராவிட மொழியியல் பல்கலைக்கழகம் செயல்படுகிறது.

ஆந்திராவில் அன்றைய முதலமைச்சராக இருந்த என்.டி.ராமராவ் ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பத்தில் பல்கலைக்கழகம் அமைய இடம் ஒதுக்கினார். திராவிட இயக்க வழியில் வந்த அ.தி.மு.கவின் ஆட்சியில் அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜியார் நிதியளித்தார். கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்கள் தங்களது பங்களிப்பை உறுதி செய்யும்வண்ணம் நிதியளித்தன. 1988 ல் இரண்டு துறைகளோடு தொடங்கப்பட்ட அந்த பல்கலைக்கழகம் இன்று இருபதிற்கும் மேற்பட்ட துறைகளையும், பல ஆராய்ச்சி மையங்களையும் கொண்டு செயல்படுவதன் மூலமாக அதன் வளர்ச்சியும், மற்ற மாநிலத்தில் உள்ள திராவிடர்களின் பங்களிப்பையும் உறுதி செய்கின்றன.

திராவிடர்கள் இணைந்து திராவிட மண்ணில் திராவிட மொழியியல் பல்கலைக்கழகத்தை உருவாகியுள்ளனரே! இது போதாதா மற்ற திராவிடர்கள் வாழும் மாநிலங்களும் திராவிடர் என்ற இனப்பெயரை எற்றுக்கொண்டதற்கான ஆதாரம்?!

– திராவிடப் புரட்சி