Month: March 2013

  • ஜெயலலிதாவைக் காப்பாற்றத் துடிக்கும் விகடனுக்கு சில கேள்விகள்!

    ஜெயலலிதாவைக் காப்பாற்றத் துடிக்கும் விகடனுக்கு சில கேள்விகள்!

    மிஸ்டர் புளுகாரின் புலனாய்வு லட்சணம் இதுதான்! ”மாணவர்களைத் தூண்டுகிறாரா ஜெ.?, உளவு பார்க்க வந்த டெல்லி உள்துறை” – இது இன்று காலை வெளியான ஜூனியர் விகடன் (20.3.2013) இதழின் அட்டைப்பட்த் தலைப்பு. `மாணவர் போராட்டம் தீவிரம்!கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு காலவரையற்ற விடுமுறை! -இது இன்றைய நாளிதழ்களில் (16.3.2013) வெளிவந்துள்ள முதன்மைச் செய்தி. ஜூ.வி.யின் கற்பனையில் உதித்த சூப்பர் ஐடியாவின் படி மாணவர்களைத் தூண்டிய ஜெயலலிதாதான், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். இநத இரண்டு செய்திகளையும் படிக்கும்…

  • தஞ்சைக்குள் நஞ்சா ?

    தஞ்சை பொன்னி நதி பாய்ந்தோடும் பகுதி.எண்ணிப் பார்த்தால், தற்போதைய நிலையில் கர்நாடகத்தின் கடைக்கண் பட்டால்தான் ஆற்றில் நீர் வருகிறது. இப்போதுதான் காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு கெசட்டில் வெளியாகி இருக்கிறது. இப்போது அரை வெற்றி கிட்டி இருக்கிறது தமிழ் நாடு. எப்போது இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வந்து நாலு கால் பாய்ச்சலில் வாய்க்கால் நிரம்புகிறதோ அப்போதுதான் விவசாயிகளின் வயிறும் நெஞ்சமும் நிறையும்; அப்போதுதான் முழு வெற்றி. அது வரையில் அரசியல் கட்சிகளின் அறிக்கைப் போர் தொடரத்தான் செய்யும்.     வானமோ பொய்த்தது;…

  • ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்

    ஈழம் தமிழகம் நான் சில பதிவுகள்

    உலகத்தில் கயிறுகளுக்கு அடுத்து அதிகமாக திரிக்கப்படுவது வரலாறுகள் தான். பொதுவாக ஒவ்வொரு தலைமுறைக்கும் அதன் முந்தைய தலைமுறையின் வரலாறு ‘புனைவு’ கலந்தே புகட்டப்படுகிறது. காலம் காலமாக இது நடப்பதினாலேயே உலகெங்கும் வலம்வரும் பெரும்பாலான எல்லா முக்கியமான விசயங்களை, செய்திகளை, வரலாறுகளைச் சுற்றியும் மாற்றுக் கோட்பாடுகளும் (alternate theory) வலம் வருகின்றன.  உண்மைகளை மறைக்க, பொய்களை உண்மையாக்க நூற்றாண்டுகள் எல்லாம் தேவையில்லை, இருபது முப்பது ஆண்டுகள் கிடைத்தாலே போதும். எந்த தகவலையும் சரி பார்ப்பது சுலபமாக இருக்கும் நம்…

  • அன்னை-யார்?

    காங்கிரசில் ஓட்டுப் பிச்சை கேட்பவர்களுக்கு வேண்டுமானால், திருமதி சோனியா அவர்கள் அன்னையாக இருக்கலாம். அக்ரஹார தி.மு.க வான அ.தி.மு.க-வில் வேண்டுமானால், சுயமரியாதையும் தன்மானமும் இழந்த அடிமைகள் இருப்பதால், அதனையும்  அதன் கொள்கையையும்(!) ஆதரிக்கவும் படித்த பாமரர்களும்(!) இருப்பதால், செல்வி ஜெயலலிதா அவர்கள் ‘அம்மா’வாக இருக்கலாம்.    ஆன்மிக போதையில் சிக்கித் தவிக்கும், சிற்சிறு மாய எண்ணத்தில் முழ்கித் தவிக்கும் மானிடர் யார்க்கும் வேண்டுமானால் சாராதா தேவி அவர்களோ அமிர்தானந்தமயி அவர்களோ அன்னையாக இருக்கலாம். உண்மையில், சமுதாயத்தின் சமத்துவத்துக்கு பகுத்தறிவு வளர்ச்சிக்கு பெண் உரிமைக்கு வித்திட்ட அன்னை யார்? சில காலங்களுக்கு…