Day: October 7, 2012

  • ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பபற்றவே!

    ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பபற்றவே!

    ஜுனியர் விகடன்(27.6.2012 மற்றும் 1.7.2012) ஆகிய இதழ்களில் திரு எஸ்.இராமகிருஷ்ணன் தனது “எனது இந்தியா’ கட்டுரையில் 1911ம் ஆண்டு பிரிட்டீஷ் அதிகாரி ஆஷை கொலைசெய்த வாஞ்சி அய்யரை வர்ணித்து, இந்தக் கொலை பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர் மனதில் வெகுண்டெழுந்த தார்மீக கோபத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? ஆஷை சுட்டுக்கொன்றபோது வாஞ்சிநாதன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தான்? “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக்…

  • தினமலர் வாங்காதே!

    தினமலர் வாங்காதே!

    என் தந்தை பழுத்த சுயமரியாதைக்காரர்! கூட்டுறவு துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். குடும்பத்தின் முதல்நாத்திகர்! காலை எழுந்ததும் நானும் அப்பாவும் தினசரி பத்திரிகைகளை படிப்பதும் அன்றைய செய்திகளின் அடிப்படையில் விவாதிப்பதும் வழக்கம்! இன்று தினமலரில் வெளிவந்த ஒரு செய்தியை சொல்லும்போது மிகவும் எரிச்சலாகி நாளையிலிருந்து தினமலர் வீட்டுக்கு வரக்கூடாது! பேப்பர் பையனிடம் நான்தான் “தினமலர் போடக்கூடாது” என்று சொன்னேனே, ஏன் மீன்டும் போடச்சொன்னாய்? என்றார்! தமிழின விரோத செய்திகளை அவ்வப்போது நம்மால் இயன்றவரை பிறருக்கு எடுத்துச்சொல்லவேண்டும் அதற்காகத்தான் போடச்சொன்னேன்! என்றேன். உனக்கு தேவையானால் எங்கேனும் நூலகத்தில் இலவசமாக…

  • அன்னிபெசன்ட்டை அறிவோமா?

    அன்னிபெசன்ட்டை அறிவோமா?

    பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை அநீதிக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்ற காலத்தில் சுதேசமித்திரன் ஆசிரியரும் காங்கிரஸ் காரியதரிசியுமான எ,ரெங்கசாமி அய்யங்காரும், இந்துஆசிரியரும் தமிழ்நாட்டுத்தலைவருமான கஸ்தூரிரங்கய்யங்காரும், பரிசுத்த தேசியவாதி என்று சொல்லப்பட்ட சத்தியமுர்த்தி அய்யரும், ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்கள். இந்திய தேசிய தலைவரும் ‘டிக்டேட்டர்’ என்று சொல்லுவதான ஏக தலைவருமான சீனுவாச அய்யங்கார் ‘ஒத்துழையாமை என்பது சட்ட விரோதம்’ என்று கூறிவிட்டார். “பஞ்சாபியர்கள் செங்கல் எறிந்ததற்கும் ஜெனரல்டயர் பீரங்கி குண்டு போட்டதற்கும் சரியாகப்போய்விட்டது. இதுதான் அரச…

  • “வீரபாண்டியன்” ம.பொ.சி!

    “வீரபாண்டியன்” ம.பொ.சி!

    “திராவிடத்தால் வீழ்ந்தோம்” “திராவிடம் மாயை” என்று கூப்பாடு போட்டுவரும் குதர்க்கவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ம.பொ.சி. திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றியபோதெல்லாம் பல் இளித்து பதவி சுகம் கண்டவர். அண்ணா ஆட்சியில் அமர்ந்ததும் பதவிகேட்டு அண்ணாவை நாடி அலைந்தார்.அப்போது விடுதலையில் “ம.பொ.சிக்கு பதவியா?” என்று கேள்விஎழுப்பி பெட்டிச்செய்தி வெளியானது.சுதாகரித்துகொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச்சொல்லி பதவி தர மறுத்துவிட்டார். நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இரத்தக்கண்ணீர் நாடகத்தில் ராதாவின் அம்மா இறந்துவிடுவது போல் ஒரு காட்சி! ராதா கின்டலாக…